Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாளைக்கு விட்டா அவ்வளவு தான்.. பத்திர ஆபிஸ் போக போறீங்களா.. இதை நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: நவம்பர் 12ம் தேதி தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், சார் பதிவாளர் அலுவலகங்களில் பணிபுரிவோர் சொந்த ஊர் செல்ல வசதியாக நவம்பர் 11ம் தேதியான சனிக்கிழமை அன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதிகமாக பத்திரங்கள் பதிவாகும் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 575 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இங்கு சொத்துக்கள் விற்பனை மற்றும் வாங்குதலை அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்படுகிறது. மேலும் பிறப்பு இறப்பு மற்றும் திருமண ஆவணங்களும், லீஸ் ஆவணங்களும்,, வாடகை ஒப்பந்தங்களும் பதிவு செய்யப்படுகிறது. பொதுவாக பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை ஐந்து நாட்கள் வேலை நாட்களாகும். இதேபோல் சுபமுகூர்த்த நாட்களும் வேலை நாட்களாகும்.

Super good news for sub registrar office staffs : Government announcement on Diwali

முதல் முதலாக சொத்து வாங்குவோர் சுபமுகூர்த்த நாட்களில் சொத்துக்களை பதிய அதிகம் விரும்புவதால் அந்த நாட்கள் சனி அல்லது ஞாயிறு என எந்த கிழமையாக இருந்தாலும், சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்குகின்றன. தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் பொதுவாக சனிக்கிழமை விடுமுறை என்றாலும், அதில் அதிக பத்திரங்கள் பதிவாகும் 100 அலுவலகங்கள் மட்டும் அரசு விடுமுறை நாளான சனிக்கிழமையும் செயல்படுகின்றன.

இந்நிலையில் நவம்பர் 12ம் தேதியான ஞாயிறு அன்று தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் சார் பதிவாளர் அலுவலங்களில் பணிபுரிவோர் பலர் வெளியூர்களை சேர்ந்தவர்கள் ஆவார்.. எனவே அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளியை கொண்டாடும் வகையில், சனிக்கிழமைகளில் செயல்படும் 100 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு 11ம் தேதி விடுமுறை அளிக்க பதிவுத் துறை செயலர் ஜோதி நிர்மலா சாமி உத்தரவிட்டிருக்கிறார். ஏற்கனவே தீபாவளிக்கு மறுநாளான திங்கள்கிழமை அன்றும் பொதுவிடுமுறை அறிவித்து அரசு உத்தரவிட்டது. இதனால் சார் பதிவாளர் அலுவலகங்கள் நவம்பர் 11 முதல் 13ம் தேதி வரை இயங்காது. நவம்பர் 14ம் தேதி தான் இயங்கும்..

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், இந்த ஆண்டு தீபாவளியை 12.11.2023 அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 13.11.2023 அன்று ஒருநாள் மட்டும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில், 18.11.2023 அன்று பணி நாளாக அறிவித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த ஒரு வாரமாக தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.. இதில் கணக்கில் வராத ஏராளமான பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.. இதனிடையே ரெய்டுக்கு பயந்து சில சார்பதிவாளர்கள், பகலில் வேகமாக சென்றுவிடுவதாகவும் இதனால் பணிகள் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+