"சம்மட்டி அடி".. சீமான் வீட்டு மாடியில அவிச்ச முட்டை, நெய்ச்சோறு இருக்காமே.. அந்த காக்கா வந்துடுமாம்
சீமான் சொன்ன சுவாரஸ்ய நிகழ்வு ஒன்று, இணையத்தில் படு ஸ்பீடாக ஷேர் ஆகி கொண்டிருக்கிறது
சென்னை: சீமான் தந்துள்ள ஒரு பேட்டியானது, இணையத்தில் அதிக அளவில் ஷேர் ஆகி வருகிறது.. சீமானின் தம்பிகள் புளகாங்கிதம் அடைந்து வரும்நிலையில், மாற்று கட்சியினர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.. என்ன நடந்தது?
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மிகச்சிறந்த பேச்சாற்றல் மிக்கவர்.. இவரது ஆகச்சிறந்த பலமே அந்த பேச்சுதான்.. இந்த பேச்சை கேட்பதற்காகவே, பிற கட்சிகளிலும் சீமானுக்கு ரசிகர்கள் உண்டு.. அந்த அளவுக்கு பொதுமக்களை தன் பேச்சால் கட்டிப்போடுபவர்.
அதேசமயம், ஆமைக்கறி சாப்பிட்டேன், ஏகே 47 சுட்டேன் என்றும் அடிக்கடி பொதுவெளியில் வெளிப்படையாகவே சொல்வார்.. இதுகுறித்த விமர்சனங்களும் சோஷியல் மீடியாவில் நடந்து கொண்டேயிருக்கும்.

கூட்டு + பொறியல்
ஒருமுறை சீமான், "நான் 8 நிமிடம் மட்டுமே விடுதலை புலிகளுடன் இருந்தேன்... அதை மறுக்க வேண்டும் என்றால் விடுதலை புலிகள்தான் மறுக்க வேண்டும்... என்னை குற்றம் சாட்டுபவர்கள் அதை பார்த்தார்களா? அவர்களுடன் பயணம் செய்தவன் நான்... நான்தான் நடந்ததை சொல்ல வேண்டும். நான் ஏகே 74 சுட்டேன்... ஆமைக்கறி சாப்பிட்டேன்" என்றார். அதேபோல இன்னொருமுறை, "இறுதி போர்கட்டத்திலே புலிகள் சாம்பார், கூட்டு, பொறியல் செஞ்சாங்க.. கறி வறுத்து கொடுத்து தான் சாப்பிடுவதை குறிப்பெடுத்து கொண்டேன்" என்று பேசி பரபரப்பையும் சர்ச்சையும் கிளப்பினார் சீமான்.

ஆமைக்கறி
இதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஒருமுறை பதிலளித்திருந்தார். "பிரபாகரனை சீமான் சந்தித்தது மொத்தமே 2 நிமிஷம்தான்.. ஆமைக்கறி சாப்பிட்டேன் என்று சொல்வதெல்லாம் சுத்த பொய்.. புலிகள் அவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் எல்லா இடத்திலும் புலிகள் பற்றியும், பிரபாகரன் பற்றியும் பேசி ஒன்றும் தெரியாத அந்த இளைஞர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.. போட்டோ எடுக்க அங்கே அனுமதிக்கவில்லை... அந்த போட்டோவை கிராபிக்ஸில் பண்ணிக்கிட்டாங்க" என்று கூறியிருந்தார். இதற்கு நாம் தமிழர் கட்சியும் அப்போது எதிர்வினையாற்றியது..

புறா காக்கா
இதுபோல பல்வேறு விஷயங்கள் தொடர்பான விவாதங்கள் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் எழுந்தபடியே இருக்கும்.. சீமானை மையப்படுத்தி, மீம்ஸ்களும் வெளிவந்தபடியே இருக்கும்.. எனினும், சீமான் அனைத்து விதமான விமர்சனங்களையும் நொறுக்கி தள்ளிவிட்டு, முன்னேறி கொண்டே வருகிறார்.. தற்போதும் சீமான் ஒரு கதை சொல்லி உள்ளார்.. கதை என்பதைவிட, ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் என்றே சொல்லலாம்.. அதுதான், இணையவாசிகள் பலராலும் ஈர்க்கப்பட்டு வருகிறது.. நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் சீமானை பேட்டி எடுத்துள்ளார்.. அந்த நேர்காணலில் காக்கா கதை ஒன்றை சீமான் சொல்லி உள்ளார்.. அதில், பறவைகளை நேசிப்பது குறித்து விலாவரியாகவும், கேஷூவலாகவும் பேசியிருக்கிறார்.

நெய்ச்சோறு
சீமான் பேசும்போது, மாடியில் புறாவுக்கு இரை போடறோம்.. தண்ணி வைக்கிறோம்.. காக்கைக்கு தினமும் முட்டையை அவிச்சி வைக்கிறோம்.. சோறு வெச்சால் அந்த புறா திங்கறது இல்லை.. சோறு திங்கறதே இல்லப்பா.. மற்ற காக்கைகள் எல்லாம் சோறு திங்கும்.. ஆனால் நம்ம வீட்டுக்கு வர்ற காக்கை மட்டும் சாப்பிடறது இல்லை.. அந்த காக்காவுக்கு தெரியும், சீமான் வீட்டு மாடியில முட்டை வெச்சிருப்பாங்கன்னு. சோறுகூட எப்படி தெரியுமா வெக்கணும்? நெய்ச்சோறுதான் வெக்கணும்.. வந்ததுமே எல்லாரும் மாமரத்தில உட்கார்ந்துக்குவாங்க.. ஒரு சட்டியில் சோறு போட்டு அங்கே வெக்கணும்" என்று சொல்லி உள்ளார். சீமான் சொன்ன இந்த சம்பவம் குறித்து நிறைய பேர் திரண்டு வந்து கமெண்ட்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications