இதென்ன ஆச்சரியம்.. வேற லெவலில் மத்திய அரசு.. குஷியில் துள்ளும் மெரினா பீச்.. மின்னும் 14 கடற்கரைகள்
சென்னை: தமிழகத்தின் கடற்கரைகள் பளிச்சென மாறப்போகிறது.. மொத்தம் 14 மாவட்ட கடலோர வளங்களை மீட்டு எடுப்பதற்காக 1,675 கோடி ரூபாயில், "நெய்தல் மீட்பு இயக்கம்" என்ற திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை துறையானது பல்வேறு அதிரடிகளை கையில் எடுத்து வருகிறது.. குறிப்பாக, ஒருங்கிணைந்த கடற்கரை பகுதி நிர்வாக திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் கடற்கரை, சுற்றுச்சூழல் மற்றும் அழகியல் நிர்வாக சேவைகள் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

இந்த திட்டத்தின்கீழ் மாசுக்கட்டுப்பாடு, கடற்கரை விழிப்புணர்வு, அழகியல், பாதுகாப்பு கண்காணிப்பு பணிகள், சுற்றுச்சூழல் கல்வி தொடர்பான பல்வேறு பணிகள் செயல்படுத்தப்படுகின்றன. முக்கியமாக, "நீலக்கொடி கடற்கரை" சான்றிதழுக்காக சர்வதேச தரநிலைகளை எட்டுவதை நோக்கமாக கொண்டு தெரிவு செய்யப்பட்ட கடற்கரைகளில் இந்தப் பணிகள் செய்யப்படுகின்றன.
கடற்கரைகள்: அந்தவகையில், 2 வருடங்களுக்கு முன்பு, மிகச்சிறந்த சர்வதேச கடற்கரைகளுக்கு இணையாக மேம்படுத்த 6 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 10 கடற்கரைகள் தேர்வு செய்யப்பட்டன.
அதில், நம்முடைய தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட கோவளம் கடற்கரையும், புதுச்சேரியில் ஈடன் கடற்கரையும் அடங்கும். இது மிகப்பெரிய அங்கீகாரத்தை தேசிய அளவில் நமக்கு பெற்று தந்தது.
உயிரினங்கள்: இந்நிலையில், இதன்அடுத்தக்கட்ட நடவடிக்கை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.. அந்தவகையில், 50 கோடி ரூபாயில் அழிந்து வரும் உயிரினங்கள் பாதுகாப்பு நிதி உருவாக்கப்பட உள்ளதாகவும், இதில் முதல் கட்டமாக, 5 கோடி ரூபாயை அரசு வழங்கப்பட உள்ளதாம்.. பிற அரசு நிறுவனங்கள், பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதி, தேசிய சுற்றுச்சூழல் அமைப்புகள் உதவியுடன், அழிந்து வரும் நிலையில் உள்ள உயிரினங்களை பாதுகாக்க உரிய திட்டங்கள் வகுக்கப்படும்..
தமிழகத்தை பொறுத்தவரை, 14 கடலோர மாவட்டங்களில் 1,076 கிமீ கடற்கரை பகுதியை மையமாகக்கொண்டு, கடலோர வளங்களை மீட்டு எடுப்பதற்காக 1,675 கோடி ரூபாயில், "நெய்தல் மீட்பு இயக்கம்" என்ற திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.
மாசு கட்டுப்பாடு: இந்த திட்டமானது, பல்லுயிர் பெருக்கம், கடற்கரை பாதுகாப்பு, கடற்கரையோர சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து...துதல், மாசு கட்டுப்பாடு ஆகிய நோக்கங்களை கொண்டது. மேலும், 40 கோடி ரூபாயில், எண்ணுார் கடற்கரை பகுதியை பாதுகாத்து மீட்டெடுப்பதற்கான பணி செயல்படுத்தப்பட உள்ளதாம்.
குறிப்பாக, சென்னை மெரினா, ராமநாதபுரம் அரியமான், தூத்துக்குடி காயல்பட்டினம், நெல்லை கோடாவிளை, நாகை காமேஸ்வரம், புதுக்கோட்டை கட்டுமாவடி, கடலுார் சில்வர் கடற்கரை, விழுப்புரம் மரக்காணம் ஆகிய இடங்களில் உள்ள முக்கிய கடற்கரைகளை தேர்ந்தெடுத்து, 250 கோடி ரூபாயில், மேம்பாட்டுத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், அதன் வாயிலாக, "நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் " பெற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பிளாஸ்டிக்: இதைத்தவிர, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை வசதிகளை அமைப்பதில் கடலோர சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்களை ஈடுபடுத்தவும், கைவிடப்பட்ட, பயனற்ற மீன்பிடி கருவிகளை அகற்றவும், பிளாஸ்டிக் கழிவுகளுக்கான சுழற்சி பொருளாதார தீர்வுகளை செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications