ஆடுகள் வளர்க்கணுமா? 50% மானியம் தரும் மத்திய அரசின் சூப்பர் திட்டம் தெரியுமா? என்னாது 1 கோடி ரூபாயா?
சென்னை: விவசாயம் பொய்த்துவிடும்போது, கால்நடை விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே, மத்திய அரசு பல்வேறு உதவிகளையும், திட்டங்களையும் கொண்டுவந்துள்ளது. அந்தவகையில், மிக முக்கியமானது உத்யமி திட்டமாகும்.
நமது தேசத்தின் விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்காக மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களையும், அறிவிப்புகளையும் வழங்கி வருகிறது... குறிப்பாக, கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரம் சிறக்கவும், அவர்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்தவும் பல உதவிகளை செய்து வருகிறது.

அந்தவகையில், தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி மற்றும் பிற உள்ளூர் வங்கிகளோடு இணைந்து ஆடு வளர்ப்புக்கான திட்டம் ஒன்றை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
ஆட்டுக்கறி: தற்போது ஒரு கிலோ ஆட்டுக்கறி 1,000 ரூபாய் வரை விற்கப்படுவதால், ஆடுகளை வளர்ப்பதிலும் கால்நடை விவசாயிகளும் அதிக ஆர்வத்தை காட்டி வருகிறார்கள். எனவே, ஆடு வளர்ப்பில் ஈடுபட விருப்பமுள்ளவர்களுக்கு, நிதியுதவி வழங்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த திட்டமானது, நிலமற்ற விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி (AHIDF) என்று அழைக்கப்படும் இந்தத் திட்டம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது..
கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள மத்திய அரசின், தேசியக் கால்நடை ஆணையத்தின் கீழ், செம்மறி ஆடு வளர்ப்புக்கென சிறப்பு மானியமும் வழங்கப்படுகிறது. அதன்படி, விவசாயிகள் 100 ஆடுகள் முதல் 500 ஆடுகள் வரை வளர்க்கலாம். இதில், விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியம் கிடைக்கும். 100 ஆடுகளை வளர்க்க, ரூ.20 லட்சம் வழங்கும் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 2 முறை தலா ரூ.5 லட்சம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஆடு வளர்ப்பு: 200 ஆடுகளை வளர்ப்பதற்கு ரூ.40 லட்சமும், 300 ஆடுகளுக்கு ரூ.60 லட்சமும், 400 ஆடுகளுக்கு ரூ.80 லட்சமும், 500 ஆடுகளை வளர்க்க ரூ.1 கோடி திட்டமும் உள்ளது.. இவை அனைத்திற்குமே 50 சதவீதம் தள்ளுபடி உண்டு..
ரூ.20 லட்சம் திட்டத்தில் இணைவதாக இருந்தால், ரூ.2 லட்சத்தை விவசாயிகள் செலுத்திவிட வேண்டும். அதற்கு பிறகு வங்கியிலிருந்து ரூ.8 லட்சம் கடனாக பெற்றுக்கொள்ளலாம். இதில் 25 சதவீதம் தொகையை விவசாயி செலவழித்த பிறகு, தள்ளுபடி செய்யப்பட்ட ரூ.5 லட்சம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். திட்டம் முடிவடைந்தும், 2-வது தவணையாக ரூ.5 லட்சம் தள்ளுபடி தொகை வரவு வைக்கப்படும்.
வெப்சைட்: இந்த திட்டத்தில் எப்படி இணைவது தெரியுமா? இதற்காகவே, உத்யம் மித்ரா https://nim.udyamimitra.in/ என்ற அதிகாரப்பூர்வமான வெப்சைட்டை விவசாயத் துறையின்கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வெப்சைட்டிற்கு சென்று ஆன்லைலேயே, விண்ணப்பம் செய்யலாம்..
ஆனால், இந்த செம்மறி ஆடு வளர்ப்பு திட்டத்தின் பலன்களைப் பெற வேண்டுமானால், விவசாயிகள் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தில் ஆடு வளர்ப்பு பயிற்சியை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.. அதேபோல, சம்பந்தப்பட்ட விவசாயிக்கு ஒரு ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். ஆனால், அந்த நிலத்தின் மீது எந்தவிதமான கடன்களும் பெற்றிருக்கக்கூடாது.
ஆடுகள் வளர்ப்பு: ஒருவேளை, விவசாயிகளின் நிலத்தின் கீழ் கிசான் கிரெடிட் கார்டு இயங்கினாலும்கூட, இந்த திட்டத்தில் இணைய முடியாது.. சொந்த நிலம் இல்லாவிட்டால், 10 வருடத்துக்கு நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து ஆடுகளை வளர்க்கலாம்.
அதேபோல, நிலமற்ற விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம். மேலும் சிறு, குறு விவசாயிகள், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்கள், மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கணவன் இறந்த பெண்கள், ஆதரவற்ற பெண்களும் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
தகுதியானவர்கள்: ஆடுகள் வளர்ப்பு திட்டத்துக்கு தகுதியானவர்களை, கால்நடை துறையை சேர்ந்த குழுவானது, ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும். பிறகு பூர்த்தி செய்த படிவம் சம்பந்தப்பட்ட வங்கிக்கு அனுப்பப்படும். அதன் பிறகு வங்கி நிபந்தனைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட விவசாயிக்குக் கடன் வழங்கும்.
இதுபோலவே, பன்றி பண்ணை அமைக்க முனைவோருக்கு, அதிகபட்சமாக, 30 லட்சம் ரூபாய் வரை மானியமும் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.. அதாவது, 100 பெண் பன்றிகள், 25 ஆண் பன்றிகள் உடைய அலகுகள் அமைக்க, மொத்த திட்ட செலவில், மூலதனத்தில், 50 சதவீதம் மானியத்தில் அதிகபட்சமாக, 30 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்பட உள்ளது.
நாட்டுக்கோழி: 1,000 நாட்டு கோழிகள் உடைய பண்ணை அமைத்து, முட்டை உற்பத்தி செய்து, கோழி குஞ்சு பொரிப்பகம் வாயிலாக கோழிக்குஞ்சுகள் உற்பத்தி செய்து, நான்கு வார வயது வரை வளர்த்து விற்க மொத்த திட்ட செலவில், மூலதனத்தில், 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக, 25 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications