Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பண்ணை வீட்டு நடிகரும், பண்ணைபுரம் ஞானியும் பேசுற விஷயமா இது? அந்தப்புரம் அம்பலம்.. ரஜினி அதை பேசலாமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரையில் விஜய்க்கு உருவாக்கப்பட்ட செயற்கையான கூட்டங்களை திமுகவும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. ஏர்போர்ட்டில் எதுக்கு இத்தனை பேரை கூட்ட வேண்டும்? 10 மாவட்டத்திலிருந்து ரசிகர்களுடன் கிளம்பி வந்த 1000 பஸ்ஸை ஏர்போர்ட்டில் எதுக்கு இறக்குறீங்க? இதை எந்த ஊடகங்களும் கண்டுகொள்ளவேயில்லை என்று கடுமையாக சாடியிருக்கிறார் பத்திரிகையாளர் பாண்டியன்.

BBT Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர், ரஜினி, முதலமைச்சர், இளையராஜா மூவரும் அமைந்துள்ள அவையில், பல்லாயிரம் பேர் கூடியிருக்கிறார்கள்.. அங்கே அரை பாட்டில் பீர் குடித்த கதையை பேசுகிறார்கள்.. சினிமாவில் எப்போதுமே குடி, கூத்து, கும்மாளம்தான்.. எப்போதுமே குடி, பீடி, லேடி..

Rajinikanth Ilayaraja Vijay

இந்த பழக்கமுள்ளவர்கள் எப்படி மேஸ்ட்ரோவாக, சூப்பர் ஸ்டாராக வந்தார்கள்? மலேசியாவில் சினிமா படத்துக்கு டிக்கெட் கிடைக்காமல் மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்துவிட்ட சம்பவம் உண்டு.. யார் என்ன தவறு செய்தாலும், அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை என்று விட்டுவிடலாமா?

ரஜினியின் பண்ணை வீடு

ரஜினியின் பண்ணை வீட்டுக்குள் என்ன பேசினாலும் அதை பற்றி கவலையில்லை. ஆனால் பல கோடி பேர் தேர்ந்தெடுத்திருக்கும் முதலமைச்சர் முன்பு, பல கோர் பார்க்கக்கூடிய நிகழ்ச்சியில், நடிகையின் கிசுகிசு, அரை பாட்டில் பீர் இதுதான் பேசுவதா? இவர்கள் எல்லாம் மக்களுக்கு வழிகாட்டிகளா?

திரைப்பட நடிகர், தயாரிப்பாளர்களை பொதுமக்கள் ஓட ஓட வேண்டும்.. 20 வருடங்களுக்கு முன்பு ஒரு சினிமா ஷூட்டிங் பள்ளியில் பார்த்தேன்.. அப்போது நிஜமாகவே குண்டு வெடித்து, சீன் எடுக்கப்பட்டது.. பிறகு அங்கிருந்த 10 குழந்தைகளை சினிமா உதவியாளர் குச்சியை வைத்து அடிக்கவும், அந்த குழந்தைகள் பதறிக்கொண்டு ஓடுகிறார்கள்..

பண்ணைபுரம் பள்ளிக்கூடம்

உடனே அவர்கள் கதறி ஓடுவதை படம் பிடித்தார்கள்.. இதற்காக தயாரிப்பாளர் சார்பாக, அந்த பள்ளிக்கு நன்கொடையும் முன்கூட்டியே தரப்பட்டுவிட்டது. இப்படியெல்லாம் குரூர எண்ணம் படைத்தவர்கள் சினிமா படைத்தவர்கள்..

1000 கோடிக்கு வர்த்தகம் நடக்கணும் என்பதற்காக, உழைத்து களைத்தவர்களிடமிருந்து ஒரு டிக்கெட்டை 500 ரூபாய்க்கு விற்கிறார்கள். 500 ரூபாய்க்கு, அரை மூட்டை நெல்லை உற்பத்தி செய்ய ஆறு மாதங்களாகின்றன.. இந்த நடிகர்கள் 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள்..

பண்ணைபுரத்திலிருந்து பள்ளிக்கூடம் கட்ட உதவி கேட்டு வந்தவர்களை துரத்திவிட்டு, மூகாம்பிகை கோயிலுக்கு 4 கோடி ரூபாய் கொண்டு போய் தர்றாரு.. தேவாரம், திருவாசகம், பத்துப்பாட்டு, பதினெண்கீழ் கணக்கு இதெல்லாம் பாடாமல் சங்கர மடத்து நபராகவே மாறிவிட்டார். இப்படித்தான் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு பல கோடி தந்தாரு இளையராஜா.. ஆனால், அதே கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்தபோது, உள்ளேயே அனுமதிக்கவில்லை.

இளையராஜா - ஒடுக்கப்பட்ட சமூகம்

எந்த சமூகத்தை இன்னும் ஒடுக்கப்பட்டவர்களாக ஒடுக்கி வைத்துள்ளதோ, அந்த
தமிழர்களுக்கு எதிரான கட்சியுடன் உள்ளார் இளையராஜா.

மதுரையில் விஜய்க்கு உருவாக்கப்பட்ட செயற்கையான கூட்டங்களை திமுகவும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. ஏர்போர்ட்டில் எதுக்கு இத்தனை பேரை கூட்ட வேண்டும்? 10 மாவட்டத்திலிருந்து ரசிகர்களுடன் கிளம்பி வந்த 1000 பஸ்ஸை ஏர்போர்ட்டில் எதுக்கு இறக்குறீங்க? இதை எந்த ஊடகங்களும் கண்டுகொள்ளவேயில்லை..

பனையூரில் நடந்த பிளான்

ஏர்போர்ட்டிலிருந்து 10 நிமிஷத்தில் மரக்கடை வந்துடலாம். ஆனால் 5 மணி நேரம் ஏன் ஆனது? இதெல்லாம் 10 நாட்களுக்கு முன்பு பனையூரிலேயே திட்டமிடப்பட்டவை.. இதே மதுரை மாநாட்டில் ஒரு பெண் நிருபர் அசிங்கப்படுத்தப்பட்டு, அழுதுகொண்டு ஓடியிருக்கிறார்..

இதுபோன்ற தலைவர்கள் எல்லாம் மக்களை வழிநடத்தக்கூடியவர்களா? தலைமை தாங்கக்கூடியவர்களா? இதுபோன்ற சினிமாக்காரர்களை பின்தொடராமல், அம்பேத்கரையும், பெரியாரையும் மக்கள் படிக்கவேண்டும்.. இவர்கள் திறந்த புத்தகமாக மக்களிடம் இருந்தார்கள். இவர்களிடம் எந்த ஒளிவுமறைவும் இல்லை.. இதுதான் அரசியல்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+