சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"சர்ப்ரைஸ்" தந்த கதிரவன்.. பார்வர்டு பிளாக் அதிரடி அறிவிப்பு.. திக்குமுக்காடிப்போன தமிழக காங்கிரஸ்

பார்வர்டு பிளாக் கட்சி தன்னுடைய ஆதரவை காங்கிரஸ் கட்சிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: நடக்க போகும் இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரசுக்கு ஏராளமான கட்சிகள் திரண்டு ஆதரவையும் வாழ்த்தையும் தெரிவித்து வருகின்றன.. இதையடுத்து, ஈரோடு கிழக்கில் தேர்தல் களமே பரபரப்பாகி உள்ளது.
விரைவில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடக்க போகிறது.. திமுக கட்சியானது, தன்னுடைய கூட்டணிக்கு தொகுதியை ஒதுக்குவதாக தெரிவித்து உள்ளது..

எனினும், இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் திமுக இப்போதே களத்தில் தீவிரமாக குதித்துவிட்டது..

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்..பலமுனை போட்டியில் வெல்வது யார்?..மாதிரி மின்னணு வாக்குப்பதிவு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்..பலமுனை போட்டியில் வெல்வது யார்?..மாதிரி மின்னணு வாக்குப்பதிவு

 ப்ளான் பாஜக

ப்ளான் பாஜக

மற்றொருபுறம், தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் சூழலில், திமுகவை எதிர்த்து களம் காண அதிமுக மட்டுமே பெரிய கட்சி என்ற கருத்து பாஜகக்கு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த கட்சியும் களம் காண முயன்று வருகிறது.. அதிமுகவில் நிலவும் குழப்பத்தால் இடைத்தேர்தலில் தங்களது வேட்பாளரை நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாம்.. ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவதன் மூலம், தங்களது பலத்தை அறிய முடியும் என்று பாஜக கருதுவதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.. திமுக கூட்டணி சார்பில் களமிறங்கும் காங்கிரஸ் கட்சி, தங்களுக்கான ஆதரவை பல்வேறு கட்சிகளிடம் கோரி வருகிறது.

 வைகோ சொல்லிட்டாரே

வைகோ சொல்லிட்டாரே

அந்தவகையில், காங்கிரஸ் கட்சியே இடைத்தேர்தலில் அபார வெற்றி பெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் முதல் இரா.முத்தரசன் வரை உறுதியாக சொல்லி வருகிறார்கள்.. அதன்படியே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசரும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.. அந்தவகையில், அகில இந்திய பார்வட் ப்ளாக் கட்சியும் தன்னுடைய முழு ஆதரவை அளித்துள்ளது.. அதுமட்டுமல்ல, தேர்தல் பணிகளையும் மேற்கொள்ள போவதாக அதிரடியாக அறிவித்து, காங்கிரஸை ஆச்சரியத்தில் திக்குமுக்காட வைத்துள்ளது..

 கதிரவன் கோரிக்கை

கதிரவன் கோரிக்கை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியில் அகில இந்திய பார்வட் ப்ளாக் கட்சியின் 19வது மாவட்ட மாநாடு நடைபெற்றது.. அகில இந்திய துணைத் தலைவர் பிவி கதிரவன் தலைமையில் இந்த மாநாடு நடந்தது.. இந்த மாநாட்டின் முடிவில் செய்தியாளர்களிடம் சொன்னதாவது: நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் பிறந்த நாளை தேச பக்தி தினமாக அறிவிக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம்.

 முழு ஆதரவு

முழு ஆதரவு

மகாத்மா காந்தி பிறந்த அக்டோபர் 2ம் தேதியை எப்படி அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதோ, அதுபோல, சுதந்திரத்திற்காக காந்தியை விட அதிகப்படியாக ஆங்கிலேயர்களை பயமுறுத்தி விடுதலையை பெற்றுத் தந்த நேதாஜியின் பிறந்தநாளை, தேச பக்தி தினமாக அறிவித்து மத்திய அரசும், மாநில அரசும் அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்.. ஈரோடு கிழக்கு தொகுதியை பொறுத்தவரை, கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கி இருக்கிறது.. ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு, அகில இந்திய பார்வட் ப்ளாக் முழு ஆதரவை அளிக்கிறது.. தேர்தல் பணிகளையும் கண்டிப்பாக நாங்கள் மேற்கொள்ளபோகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

 உதயசூரியன்

உதயசூரியன்

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியை பொறுத்தவரை, திமுக கூட்டணியில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.. கடந்தமுறைகூட, உசிலம்பட்டியில் உதயசூரியன் சின்னத்தில், கதிரவனே நேரடியாக போட்டியிட்டார்.. விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், கூட்டணி கட்சிகள் அதற்கான மும்முரத்தில் ஈடுபட்டு வருகின்றன.. திமுக கூட்டணி ஏற்கனவே வலுவாக உள்ள நிலையில், மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.. அந்தவகையில், இடைத்தேர்தலையும் தாண்டி, எம்பி தேர்தலுக்கான களம், தகித்து காணப்படுகிறது.

English summary
Super support by all india forward bloc and extend their support to congress party
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X