Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்னமும் நம்ப முடியல.. விர்ரு விர்ருனு ஏறிய தங்கம் விலை.. ரூ.500 கோடி? தமிழக அரசு சர்ப்ரைஸ் பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: அட்சய திருதியையன்று, தங்கம் விலை மும்மடங்கு உயர்ந்த நிலையில், தமிழக அரசு ஒரு முக்கிய தகவலை வெளியிட்டிருக்கிறது.

வருடா வருடம், சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திதியைதான், அட்சய திருதி என்கிறார்கள.. இந்த நாளில், வீட்டிற்கு எந்த பொருள் வாங்கினாலும், அது பன்மடங்காக வளரும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

Super Surprise and 500 crore revenue for the Tamil Nadu government from the sale of gold on Akshay trithi

நகைகள்: பலரும் இந்த நாளில், தங்க நகைகளை வாங்குவார்கள்.. இந்த குறிப்பிட்ட நாளில் தங்கம் வாங்குவது செழிப்பை உணர்த்துகிறது. சொந்த வாழ்க்கையின் அதிர்ஷ்டத்தை காட்டுகிறது என்று சொல்வார்கள்.. எனவே, தங்க நகை, தங்க நாணயம், இப்படி பல்வேறு வகைகளில் தங்கத்தை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுவார்கள்.

தங்கம் வாங்க முடியாதவர்கள் வெள்ளியை வாங்குவார்கள்.. ஏனென்றால், லட்சுமியின் சின்னமாக வெள்ளி போற்றப்படுகிறது.. மேலும் செழிப்பை குறிக்கிறது.. எனவே, வெள்ளி பொருட்கள், வெள்ளி நாணயங்கள், வெள்ளி சிலைகளை வாங்குவது, செல்வத்தை உயர்த்தும் என்பார்கள். அந்தவகையில், கடந்த 10ம் தேதி அட்சய திருதியன்று தங்கம் வாங்குவதில் பொதுமக்கள் பெருத்த ஆர்வத்தை காட்டினார்கள்.

சர்ப்ரைஸ்: அன்றைய தினம், வாடிக்கையாளர்களை கவர்வதற்காக, நகைக் கடைகள் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்திருந்தன.. அதேசமயம், தங்கம் விலையும் மும்மடங்கு உயர்ந்து நகை வாங்குவோருக்கு அதிர்ச்சியை அளித்திருந்தது..

அதாவது, அன்றைய தினம் ஒரு பவுன் ரூ.1,240 அதிகரித்து ரூ.54,160-க்கு விற்பனை செய்யப்பட்டது.. ஆனால், விலை அதிகரித்தபோதும்கூட, விற்பனை அமோகமாக களைகட்டியது..

விற்பனை: கடந்த வருடம் அட்சய திருதியை நாளில் சுமார் ரூ.11 ஆயிரம் கோடி மதிப்பிலான 20 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனையான நிலையில், இந்த முறை அட்சய திருதியை நாளில் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான 24 ஆயிரம் கிலோ எடை உள்ள தங்க நகைகள் விற்பனையானதாக தகவலும் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், தமிழக அரசு ஒரு முக்கிய தகவலை வெளியிட்டிருக்கிறது.. தமிழக நகை கடைகளில் தினமும் சராசரியாக, 10,000 கிலோ தங்கம் விற்பனையாகிறது. அட்சய திருதியை முன்னிட்டு, ஒரே நாளில் தமிழகத்தில், 25,000 கிலோ தங்கம் விற்பனையாகியிருக்கிறது.. அதன் மதிப்பு, 16,750 கோடி ரூபாயாகும்.

தமிழக அரசு: தங்கம் மீது, 3 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படுகிறது. அதன்படி, அட்சய திருதியை நாளில் தங்கம் விற்பனையால், ஒரே நாளில், 500 கோடி ரூபாய் அளவுக்கு அரசுககு வரி வருவாய் கிடைத்து உள்ளதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+