ரேசனில் குட் நியூஸ்.. ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு சர்ப்ரைஸ்.. தமிழக அரசு அதிரடி.. இனிமேல் நிம்மதி
சென்னை: புதிய ரேஷன் கார்டுகளுக்கு, விண்ணப்பித்துவிட்டு நீண்ட காலமாகவே காத்திருக்கும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட்நியூஸ் வந்துள்ளது.
தமிழகத்தில், 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை கையில் எடுத்ததுமே, புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் நிறுத்தப்பட்டுவிட்டது.. இது ரேஷன்தாரர்களிடம் அதிருப்தியையும் ஏற்படுத்திவிட்டது.

இதனால், புதிய ரேஷன் கார்டுக்காக விண்ணப்பித்தவர்கள் அதிருப்திக்கும், ஏமாற்றத்துக்கும் ஆளானார்கள். ரேஷன் கார்டு கேட்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால், அடுத்த 15 நாட்களுக்குள் புதுகார்டு வழங்கப்பட வேண்டும் என்ற உத்தரவு அமலில் இருந்தும், புது கார்டுகள் வழங்கப்படாமல் இருந்தன.
முதல்வரின் தனிப்பிரிவு: பலமுறை உணவுத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும், நடவடிக்கை எடுக்காததால், முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பி வருகிறோம் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் புலம்ப துவங்கினர்.
இதனால், புது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியே வந்தது.. ஒரு லட்சம் கார்டுகள் அச்சடிக்கப்படாமல் தேங்கி நிற்பதாகவும், இதனால், சில மாதங்களாகவே, தங்களால் பொருட்களை வாங்க முடியவில்லை.. இறந்து போனவர்கள், குடும்ப அட்டையில் புதிதாக உறுப்பினர்கள் சேர்த்தல் உள்ளிட்ட எந்த பணிகளும் நடக்கவில்லை என்றும் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தார்கள்..
பெரும் அவதி : மேலும், எம்பி தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டால் புதிய ரேஷன் கார்டு அச்சிட முடியாது.. அதனால், விண்ணப்பித்து காத்திருப்போர், இன்னும் 6 மாதங்களுக்கு ரேஷன் கார்டு பெறமுடியாத நிலைமை ஏற்பட்டுவிடும்.. மருத்துவ காப்பீட்டு திட்ட சலுகைக்கும் ரேஷன் கார்டுதான் முக்கிய ஆவணமாக உள்ளதால், ரேஷன் கார்டுகளை உடனடியாக தர வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்தன .
ஆனால், புதிய ரேசன் கார்டுகளுக்கு அனுமதி கிடைத்தவுடன், கள ஆய்வு பணிகளை தொடங்குவோம் என்று உணவு வழங்கல் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர் என்றாலும், புதிய ரேஷன் கார்டுகள் குறித்த தகவல்கள் வெளியாகாமலேயே இருந்தது.
அதிரடி அறிவிப்பு: இந்நிலையில், தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. அதன்படி, 45,509 புதிய ரேஷன் கார்டுகள் தற்போது வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து உணவு வழங்கல் துறை ஆணையர் செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் உள்ளதாவது:
தமிழகத்தில், 2021 மே, 7 முதல், 2023 ஜூன் 30 வரை, 15 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பில் உள்ள ரேஷன் கார்டுகள் அடிப்படையில், புதிய நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதால், ரேஷன் கார்டு வினியோக பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. வெள்ளம் பாதித்த துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில், 27,577 ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன.
செல்போன் எஸ்.எம்.எஸ்: ஏற்கனவே, இணைய வழியில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியுடைய, 45,509 புதிய ரேஷன் கார்டுகள் தற்போது வழங்கப்படுகின்றன. அவர்கள் அனைவரின் மொபைல் போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டு உள்ளது.
இவர்கள், புதிய ரேஷன் கார்டுகளை, வட்ட வழங்கல் அலவலகங்களுக்கு நேரில் சென்றோ, தங்கள் குடும்ப உறுப்பினரை அனுப்பியோ பெற்றுக் கொள்ளலாம். ரேஷன் கார்டு எண்ணை கடை ஊழியர்களிடம் தெரிவித்து, விரல் ரேகை சரிபார்ப்புக்கு பின், கடையில் ரேஷன் பொருட்களை கார்டுதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம்" என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மகிழ்ச்சி: நீண்ட நாட்களாகவே புது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருந்தவர்களுக்கு, தற்போது அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு பெருத்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications