ஏசி விடிய விடிய ஓடுதா? கரண்ட் பில் ஏறுதா? இனி இதை செய்யாதீங்க.. மின்சார வாரியம் தந்த சூப்பர் டிப்ஸ்
சென்னை: கோடை வெயில் கொளுத்த தொடங்கி இருக்கும் நிலையில் பல வீடுகளில் அதிகமாக ஏசி பயன்படுத்துகின்றனர். இதற்காக மின்சார வாரியம் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
கோடை காலம் துவங்கிவிட்டதால், கடும் வெப்பமும், புழுக்கமும் அதிகரித்து வருகிறது.. எனவே, வீடுகளில் AC, Air Cooler அதிகமாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது...

சின்ன சின்ன டிப்ஸ்: இதில், ஏர் கூலருடன் ஒப்பிடும்போது AC-க்கு செலவு அதிகம்.. காரணம், அது அதிக மின்சாரத்தை உறிஞ்சுகிறது. எனவே கரண்ட் பில்லும் அதிகமாகவே வருகிறது.
ACயை இரவெல்லாம் ஓடினாலும், கரண்ட் பில் குறைவாக ஒரு சில டிப்ஸ்களை கையாள வேண்டும் என்கிறார்கள்.. குறிப்பாக, குறைந்த வெப்பநிலையில் ஏசி-யை வைக்காமல் 16 அல்லது 18 டிகிரியில் வைப்பதே நல்லது. மனித உடலுக்கு தேவையானது வெப்பநிலை 24 டிகிரி என்பதால், வெப்பநிலையை 24 ஆகவே வைத்திருக்க வேண்டும். இதனால் கரண்ட் பில் மிச்சமாகும்.
ACயை பொறுத்வரை, ஒவ்வொரு டிகிரி வெப்பநிலையை அதிகரிக்கும்போதும், 6 சதவீதம் மின்சாரத்தை சேமிக்க முடியும் என்று ஆய்வுகள் சொல்கின்றன. அதேபோல, ACயை சர்வீஸ் செய்தே பயன்படுத்த வேண்டும். இதனாலும் கரண்ட் பில் மிச்சமாகும்.
ACயின் பில்டரை 15 நாட்களுக்கு ஒரு முறையாவது சுத்தம் செய்வதும் மின்சாரத்தை மிச்சப்படுத்தும்.. காரணம், ஏர் பில்டர்களில் தூசி சேரும்போதும் அதன் கூலிங் திறன் குறைகிறாம்.. இதனாலும் கரண்ட் பில் மிச்சமாகும்.
ACயை பயன்படுத்தும்போது, ரூம் கதவு, ஜன்னல்கள் மூடியே இருக்க வேண்டும். அதாவது அனல் காற்று உள்ளே வராமல் பார்த்து கொண்டாலே போதும்.. இதனாலும் கரண்ட் பில் மிச்சமாகும்.
ACயை ஆன் செய்யும் போது, ரூமிலிருக்கும் சீலிங் ஃபேனையும் ஆன் செய்ய வேண்டும். AC + ஃபேன் ஒன்றாக சேர்த்து இயக்கினால் குளிர்ந்த காற்று ரூமின் மூலையை வேகமாக சென்றடையும். இதனாலும் கரண்ட் பில் மிச்சமாகும்.
ACயை ஆன் செய்யும் போது, கண்டிப்பாக அதன் டைமரை செட் செய்ய வேண்டும்.. ரூம் குளிர்ந்ததுமே, ஏசி தானாகவே அணைந்து விடும். இதனாலும் கரண்ட் பில் மிச்சமாகும்.
அறிவுறுத்தல்: இப்படிப்பட்ட சூழலில்தான், மின்வாரியமும் முக்கிய அறிவுறுத்தலை வழங்கியிருக்கிறது.. குறிப்பாக, கேரள மாநில மின்வாரிய சார்பில் வேண்டுகோள் ஒன்று மக்களுக்கு வைக்கப்பட்டுள்ளது.
அதாவது AC கருவியை 25 லிருந்து 27 டிகிரி செல்சியஸ் வைத்து பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம், கேரளத்தில் இப்போதே கடுமையான மின் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இன்னும் வரப்போகும் மாதங்களில் மின்தடை அதிகமாகவே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, மின்தேவையை சமாளிக்கவே இந்த யோசனையை மின்வாரியம் தெரிவித்துள்ளது. அத்துடன், மோட்டர் பம்ப் ஏசி உள்ளிட்டவற்றை கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தவும் இன்னொரு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பயன்பாடுகள்: நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, மின் நுகர்வானது அதிகரித்தபடியே வருகிறது. இப்போது தேர்தல் காலம் என்பதால், மின்பயன்பாடு கூடுதலாகவே உள்ளது. எனினும், பொதுமக்கள் பாதிப்படையாதவாறு, மின்சார துறை அனைத்து நடவடிக்கைகளையும் சீராக எடுத்து வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, TANGEDCO ஏற்கனவே தமிழகம் முழுவதும் பராமரிப்புப் பணிகளையும் மேற்கொண்டிருந்தது.. மீட்டர் பாக்ஸ் பழுதடைந்தாலோ அல்லது மின்தடை ஏற்பட்டாலோ அல்லது கூடுதல் மின்கட்டண வசூலித்தாலோ, 94987 94987 என்ற எண்ணில் புகார்களை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
நம்பிக்கை: அதுமட்டுமல்ல, வெயில் காலத்தில் மின் சாதனங்களில் ரிப்பேர் ஏற்பட்டால், அதனை விரைந்து சரிசெய்ய இரவு வரை அலுவலகங்களில் இருந்தபடி, மின் வினியோக பணிகளில் அதிக கவனம் செலுத்துமாறு உதவி பொறியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்..
மொத்தத்தில், மின்தேவையை தீர்க்கவும், கரண்ட் பிரச்சனையால் யாரும் அவதிப்படாமல் இருக்கவும், தமிழக அரசு மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையானது, பொதுமக்களுக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.
-
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications