சைஸாக கம்பியை பிடித்தபடி.. ஒருபக்கமா சாய்ந்து.. ஸ்டாலினின் கனிவு கேள்வி.. அடுத்த "சக்ஸஸ்" பஸ் பயணம்
29சி பஸ்ஸில் ஸ்டாலின் பயணம் மேற்கொண்டு பயணிகளிடம் குறைகளை கேட்டார்
சென்னை: முதல்வர் ஸ்டாலின், 29சி பஸ்ஸில் பயணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. அதேசமயம், ஸ்டாலினின் பஸ் பயண அனுபவத்தில் இன்றைய நாள் மறக்க முடியாத ஒன்றாகவும் பதிந்துவிட்டது.
Recommended Video
முதல்வர் ஸ்டாலினை பொறுத்தவரை, இலவச பஸ் பயணத்துக்கு முக்கியத்துவம் தருபவர்.. ஆட்சி பொறுப்பை ஏற்றதுமே பெண்களுக்கான இலவச பஸ் பயணத்துக்கு கையெழுத்து போட்டதே அதற்கு சாட்சியாக உள்ளது.
இத்தனைக்கும் அந்த சமயம் அதிமுக அரசானது, கஜானாவை காலி செய்து வைத்து போனதாக திமுக சொல்லி இருந்தது.. மிகப்பெரிய நிதி நெருக்கடியில்தான் முதல்வராக பொறுப்பேற்றார் ஸ்டாலின்.

வாக்குறுதிகள்
இந்த இலவச பஸ் பயண அறிவிப்பினை எதிர்க்கட்சிகள்கூட கேள்விகேட்டன.. திமுக வாக்குறுதியில் எத்தனையோ சொல்லிவிட்டு, இந்த இலவச பஸ் பயணத்தை எதற்காக இத்தனை அவசரமாக அறிவிக்க வேண்டும் என்றும் விமர்சித்தன.. ஆனாலும், பெண்களுக்கு இப்படியான அறிவிப்பு அவசியம் என்பதை ஸ்டாலின் உணர்ந்திருந்தார்.. அதற்கான பலன்களையும் நடுத்தர மற்றும் ஏழ்மைநிலை பெண்கள் நேரடியாக பெற்றனர்.

பாப்பாபட்டி
அதுமட்டுமல்ல, காந்தி பிறந்தநாளையொட்டி உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் முதல்வர் கலந்து கொண்டார்.. அப்போது பொதுமக்களுடன் கலந்துரையாடிய ஸ்டாலின், "அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்கிறீர்களா? என்று கேட்டார். அதற்கு பெண்கள், உசிலம்பட்டிக்கு மட்டும்தான் இலவசமாக செல்கிறோம்... பாப்பாபட்டியில் இருந்து மதுரைக்கு டிக்கெட் எடுத்து செல்கிறோம்.. இனி எங்களுக்கு அதே ரூட்டில் இலவச பஸ் வசதி வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கை
உடனே முதல்வர், அப்படியா, பெண்கள் இனிமேல் பாப்பாபட்டியில் இருந்து மதுரைக்கு இலவசமாக அரசு பஸ்களில் செல்லலாம் என்று சொல்லிவிட்டு, அங்கிருந்த அதிகாரிகளிடமும் இது தொடர்பாக உத்தரவிட்டார்... அடுத்த நாளே அந்த கோரிக்கையை நிறைவேற்றியும் காட்டினார்.. மற்ற துறைகளில் நேரடி ஆய்வு மேற்கொள்வது போல, போக்குவரத்து துறையிலும் முதல்வர் ஸ்டாலின் ஆய்வுகளை மேற்கொள்வது வழக்கம்..

ஆச்சரியம்
இப்படித்தான், சில மாதங்களுக்கு முன்பு, தலைமை செயலகம் புறப்படும் முன்பு, கண்ணகி நகர் செல்லும் பஸ்ஸில் ஏறிவிட்டார்.. அப்போது பஸ்ஸில் இருந்த பயணிகளிடம் "பஸ்கள் சரியான நேரத்தில் வருகிறதா? போதுமான வசதி உள்ளதா? கூடுதல் வசதிகள் தேவைப்படுகிறதா? பெண் பயணிகளிடம் பஸ்ஸில் பெண்களுக்கு இலவச டிக்கெட் முறையாக வழங்கப்படுகிறதா? என்று கேட்டார். முதல்வர் ஸ்டாலின் திடீரென பஸ்ஸில் ஏறி ஆய்வு செய்தது அதிகாரிகள் மட்டுமல்லாது, அப்பகுதி மக்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது..

பழைய வீடியோ
இந்த செய்தி மீடியாக்களிலும் அப்போது பிரதான இடத்தை பிடித்துவிட்டன.. அதனால்தான், முதல்வரின் இந்த பேருந்து ஆய்வை, பழைய போட்டோவுடன் வெளியிட்டு தவறான தகவல் ஒன்று சோஷியல் மீடியாவில் விஷமிகளால் வேகமாக பரப்பப்பட்டது.. ஸ்டாலின் மாஸ்க் இல்லாமல் பஸ்ஸில் ஏறிவிட்டார் என்றும் சொல்லப்பட்டது.. அந்த அளவுக்கு முதல்வரின் பஸ் பயணம் எதிர்தரப்புகளின் கூடாரத்தை அசைத்து விடுகிறது.

நடுரோட்டில் இறங்கினார்
இன்றும் அதுபோலவே ஒரு பஸ் பயணத்தை ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார்.. டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எல்லோ பேஜஸ் அருகே காரை நிறுத்த சொல்லிவிட்டு, 29சி பஸ்சில் ஏறினார். ஸ்டாலினை பார்த்ததுமே, பஸ்சில் இருந்தவர்கள் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர். கைகூப்பி வணக்கம் சொன்னார்கள்..

29 சி பயணம்
மேல் கம்பியை பிடித்தபடி நின்று கொண்டே பஸ்சில் பயணம் செய்த ஸ்டாலின், "இலவச பஸ் பயணம் பயனுள்ள வகையில் இருக்கிறதா? வேறு ஏதாவது சிரமம் இருக்கிறதா? என்று கேட்டார்.. ஒருகாலத்தில் இந்த 29சி பஸ்ஸில்தான் ஸ்கூலுக்கு சென்று வந்த நிலையில், இன்று ஒருமாநில முதல்வராக அதே பஸ்ஸில் சென்றது, ஸ்டாலினின் விஸ்வரூப வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது..!












Click it and Unblock the Notifications