Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாசற்படியிலேயே.. கருணாநிதியை உற்று உற்று பார்த்த அந்த "நாய்".. கசிந்த மனிதம்.. கலைஞரின் ஈரம்.. வாவ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த முதல்வர் கருணாநிதியின் ஈரமனம் குறித்து, திமுகவினர் பல்வேறு தகவல்களை இணையத்தில் பெருமிதமாய் பகிர்ந்து வருகிறார்கள்.

மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.. அன்றைய தினம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் வடசென்னை புளியந்தோப்பு பின்னி மில் மைதானத்தில் நடைபெற இருந்தது.

Superb memories and do you know why did karunanidhi turn vegetatian after his blackys last breath

ஆனால், ஒடிசா ரெயில் விபத்தைத் தொடர்ந்து இந்த பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த பொதுக்கூட்டம் நேற்று வெகுசிறப்பாக நடந்தது.. கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்கம் என்பதால், ஆண்டு முழுவதுமே, அதை கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இனிய நிகழ்வு: தமிழக அரசு தரப்பிலும், திமுக சார்பிலும் ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் அவரது நூற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.. மேலும், மறைந்த முதல்வர் கருணாநிதியின் இனிய நிகழ்வுகளையும் திமுகவினர் இணையத்தில் பதிவிட்டு நினைவுகூர்ந்து வருகிறார்கள்..

அந்தவகையில், கலைஞர் கருணாநிதியின் மனிதாபிமானத்தையும் பகிர்ந்து வருகிறார்கள்.. ஒரு உயிருக்கு மதிப்பு கொடுத்து தன் இயல்பையே மொத்தமாக மாற்றி கொண்டவர் மறைந்த முதல்வர் கருணாநிதி. தன் பழக்கவழக்கத்தையே, அதற்காக மாற்றி கொண்டவரும்கூட..
அந்த உயிர் குடும்ப உறவோ, நட்பு உறவோ, தொண்டர் உறவோ இல்லை. அவ்வளவு ஏன்? அது ஒரு மனித உறவே இல்லை.. மனிதகுலத்தால் விரும்பப்படும் நாய்கள்தான்.

நாய்கள்: சிறிய வயதிலிருந்தே பலவித நாய்களை கருணாநிதி செல்லமாக வளர்த்திருக்கிறார்.. நாய்கள் என்றால் அவ்வளவு பிரியமாக இருந்திருக்கிறார். அதிகாலையில் வாக்கிங் போனாலும் சரி, இவர் பின்னால் நிறைய தெரு நாய்கள் செல்லுமாம்.

அதேபோல, ஆலிவர் ரோடு இல்லத்தில் குடியிருக்கும்போது, பிளாக்கி என்னும் நாய் வளர்த்திருக்கிறார் கருணாநிதி. தினமும் ஏதாவது ஒரு அசைவத்துடன்தான் சாப்பிடுவாராம் கருணாநிதி. தான் சாப்பிடுவதையே அந்த கருப்பு நாய்க்கும் கொடுத்து வளர்த்திருக்கிறார்.. இதன்மேல் எம்பி கனிமொழியும் அதிக பிரியத்துடன் இருந்தார். கடைசியில் பிளாக்கி ஒருநாள் இறந்துவிட்டது.

பிளாக்கி: பிளாக்கி இறந்ததுக்கு அப்புறம் அதை வீட்டுலேயே புதைத்துவிட்டனர்.. புதைத்த இடத்தில் ஒரு செடியும் வளர்த்திருக்கார்.. இந்த சம்பவத்தை மையமாக வைத்து கறுப்பஞ்செடி' என்னும் ஒரு சிறுகதையை கூட கருணாநிதி எழுதினாராம். பிளாக்கி இறந்துவிடவும் அதன்காரணமாக சில காலம் சோகமாகவே இருந்துள்ளார்.. அந்த வருத்தம் காரணமாக 2 வருடங்களுக்கு அசைவ உணவு சாப்பிடுவதையே தவிர்த்துள்ளார். அதன்பிறகு அவருக்கு நெருக்கமானதுதான் 'கண்ணன்'.

Superb memories and do you know why did karunanidhi turn vegetatian after his blackys last breath

இதைப்பற்றி திரைப்பட பாடலாசிரியரும், கவிஞரும், எழுத்தாளருமான இளையபாரதி நம்முடைய "ஒன் இந்தியா" தமிழுக்காக நிறைய தகவல்களை, சில வருடங்களுக்கு முன்பு பகிர்ந்து கொண்டிருந்தார்..

ஸ்பெஷல் பேட்டி: அப்போது அவர் நம்மிடம் சொல்லும்போது, "1999-ம் ஆண்டு. 'தென்பாண்டி சிங்கம்' என்ற சீரியலின் தயாரிப்பு பணி தொடர்பாக கலைஞரை நேரில் பார்க்க கோபாலபுரம் சென்றேன். அப்போது வாசலில் ஒரு நாய் உட்கார்ந்திருந்தது. நான் அதனை கடந்து வீட்டினுள் சென்றேன். ஆனால் கலைஞர் வீட்டின் உள்ளே அவருக்காக காத்து கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் கார் வந்துவிட்டது.

மடமடவென காரை விட்டு கலைஞர்.. அப்போது வாசலில் இருந்த நாய் அவரை பார்த்து தவ்விக் கொண்டு ஓடியது. இதனை பார்த்ததும் எனக்கு ஆச்சரியமாக போய்விட்டது.

கண்ணன்: உடனே கலைஞர் என்னிடம் சொன்னார், "பாரதி... இதுதான் கண்ணன். என் செல்லம். நான் சாப்பாடு கொடுத்தாதான் சாப்பிடுவான். இல்லேன்னா நான் வரும் வரைக்கும் பசியாவே இருப்பான்" என்றார். நான் ஆடிப்போய் விட்டேன். ஒரு மனிதரை போல, ஒரு நண்பரை போல அதனை அறிமுகம் செய்து வைக்கிறார் என்று. அதன்பிறகு, என்னுடைய சீரியல் ஒளிபரப்பும் நேரம் வந்துவிட்டதால், டிவி பார்க்க அவருடைய அறைக்கு சென்றேன். எங்களுடன் அந்த நாயும் கூடவே வந்தது. அந்த வரவேற்பறையில் சோப்பாக்கள் போடப்பட்டு இருந்தன.

கலைஞர் அந்த சோபாவில் உட்கார்ந்ததும், பக்கத்தில் போய் இந்த நாயும் உட்கார்ந்து கொண்டது. அந்த சீரியல் வாரம் ஒருமுறை ஒளிபரப்பாகும் சீரியல். அதனால் எப்போது சீரியல் தொடங்கினாலும் ஒரு சில நிமிடம் அன்று வரும் தொடர் குறித்து கலைஞர் டிவியில் தோன்றி பேசுவார். டிவியை ஆன் செய்தவுடன் கலைஞர் திரையில் தோன்றினார். உடனே அங்கிருந்த நாயும் டிவியை பார்த்தது.

பின்னர், மடாரென திரும்பி கலைஞரையே உற்று உற்று பார்த்தது.. இப்படியே டிவியையும் கலைஞரையும் மாறி மாறி பார்த்ததை கண்டதுமே, "அப்பாவை பாரு... அப்பாவை பாரு...டா" என்றார் அந்த நாயிடம்.

கொள்ளை பிரியம்: இந்த சம்பவத்தை என்னால் எப்போதும் மறக்க முடியாது. தெருநாய், வீட்டு நாய், என்ற பிரிவினையெல்லாம் அவருக்கு இல்லை. கடைசியாக முதல்வராக இருந்தபோது, எம்பி கனிமொழியின் மகன், ஒரு வோடபோன் நாய் வளர்த்தார். அந்த நாயின் பெயர் சிங்கம்.. இந்த நாய் மீதும் கலைஞர் கொள்ளை பிரியமாக இருந்தார். இந்த சிங்கத்தின் விசேஷம் என்னவென்றால், முதலில் கலைஞர் வீட்டுக்கு வந்ததுமே, அவர் தோளில் போட்டிருக்கும் சால்வையை பிடுங்கி கொள்ளும்.

Superb memories and do you know why did karunanidhi turn vegetatian after his blackys last breath

பிறகு, அவரது வேட்டியை பிடித்து இழுக்க தொடங்கும். ஆனால் இந்த நாய் இறந்துவிட்டது. அதன்பிறகு கலைஞர் எந்த நாயையும் வளர்க்கவில்லை. அதன்பிறகு அவரது நடை தடுமாறியது... உடல் சோர்வுற்றது... எந்நேரமும் அவரது கால்களிலேயே சுற்றி வரும் குட்டிநாய்களில் இடறி கீழே விழுந்துவிடக்கூடாது என்பதற்காகவே நாய்களுக்கு தடை விதிக்கப்பட்டது" என்று நம்மிடம் சொல்லி முடித்தார் கவிஞர் இளையபாரதி.

பிரமிப்பு: பாசம் பலவிதமானது... அன்பு அபரிமிதமானது... கருணை பொதுப்படையானது... நாய் என்னும் ஜீவராசியை தன் வாழ்நாளில் இவ்வளவு முக்கியத்துவம் அளித்து கலைஞர் கருணாநிதி வாழ்ந்திருந்தது பிரமிக்கத்தக்கதாகவே உள்ளது.. இந்த மனிதநேயத்தைதான் திமுகவினரும் கொண்டாடி தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+