ரஜினிகாந்த் வீட்டுக்குள்ளே.. நள்ளிரவில் நுழைய முயன்ற பெண் யார் தெரியுமா.. போயஸ் கார்டனில் பரபரப்பு
சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வசித்து வரும் போயஸ் கார்டன் வீட்டில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. என்ன நடந்தது சென்னையில்?
ரஜினிகாந்த்தை பொறுத்தவரை, திறமையான இளைஞர்களை ஊக்குவிப்பவர்.. இளம்வயது சாதனையாளர்கள், மாணவர்கள், பாடகர்கள் என அவரவர் துறையில் சாதனை படைப்பவர்களையும், முன்னேற துடிப்பவர்களையும், நேரடியாகவே அழைத்து பாராட்டு தெரிவிப்பவர்.. மனதார வாழ்த்து சொல்பவர்..

அந்த அளவுக்கு திறமைக்கு முக்கியத்துவம் தந்து, அவர்களை உற்சாகப்படுத்துவார். நேரிலும், போனிலும் என இளம் சாதனையாளர்கள் எங்கிருந்தாலும் அவர்களிடம் வலிய சென்று தன்னுடைய வாழ்த்தை தெரிவிக்கும் பரந்த மனதுடையவர் ரஜினிகாந்த்.
விளையாட்டுத்துறை: அந்தவகையில் விளையாட்டு துறையிலும் அவர் விட்டுவைக்கவில்லை.. சமீபத்தில்கூட, கிரிக்கெட் வீரரான ரிங்கு சிங்கிற்கு போன் செய்து வாழ்த்து சொல்லியிருந்தார் ரஜினிகாந்த்... அதேபோல, சென்னையை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி கொல்கத்தா அணிக்காக விளையாடிய நிலையில், அவரும், வெங்கடேஷ் ஐயரும் ரஜினிகாந்தின் வீட்டுக்கு சென்று அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
ரஜினி குறித்து இப்படியான செய்திகள் அடிக்கடி வெளியாகுவதாலோ, என்னவோ, அவரை நேரில் சந்திக்க 10ம் வகுப்பு மாணவி முயன்றுள்ளார். இந்த மாணவி சேலத்தை சேர்ந்தவர்.
ரஜினியை சந்திக்க வேண்டும் என்பதற்காகவே, சேலத்திலிருந்து கிளம்பி, நேற்று நள்ளிரவு 1 மணிக்கு போயஸ் கார்டனுக்கு வந்துள்ளார்.. 15 வயதுடைய சிறுமி, ரஜினி வீட்டிற்கு சென்று, அங்கிருந்த செக்யூரிட்டியிடம், ரஜினிகாந்த்தை சந்திக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்..
செக்யூரிட்டி: இதைக்கேட்டு திடுக்கிட்ட காவலாளி, அவரை இப்போது பார்க்க முடியாது.. நீ எங்கிருந்து வருகிறாய்? என்று விசாரித்துள்ளார்.. ஆனால், தன்னை பற்றி எந்த விவரத்தையுமே சொல்லாத சிறுமி, ரஜினி சாரை இப்பவே பார்த்தாக வேண்டும் என்று அடம்பிடித்திருக்கிறார்..
இதனால் செய்வதறியாது திகைத்து நின்ற செக்யூரிட்டி, உடனடியாக இது குறித்து தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் தந்திருக்கிறார்.. போலீசாரும் விரைந்து வந்து, சிறுமியிடம் சாதுர்யமாக பேசி, ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றார்கள். பிறகு விசாரணையும் நடத்தியிருக்கிறார்கள்.
10ம் வகுப்பு மாணவி: அந்த பெண், சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த ராமர் என்பவரின் மகள் தெரிய வந்தது.. பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறாராம்.
கிளாஸ் டீச்சரை பார்த்துவிட்டு வருகிறேன் என்று வீட்டில் பெற்றோரிடம் பொய் சொல்லிவிட்டு, நேற்று காலை சேலத்தில் இருந்து சென்னைக்கு பஸ் ஏறியுள்ளார்.. நைட் கோயம்பேட்டிற்கு பஸ் வந்து சேர்ந்துள்ளது.. அங்கிருந்து, போயஸ் கார்டனுக்கு கிளம்பி வந்துள்ளார்.. அதற்குள் நைட் 1 மணியாகிவிட்டதாம்.. இவ்வளவும் விசாரணையில் தெரியவந்தது.
சின்ன பாட்டி: அத்துடன், இந்த சிறுமிக்கு உறவினர்கள் சென்னையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக அந்த உறவினர்கள் யார், எங்கேயிருக்கிறார்கள் என்று போலீசார் விசாரித்தபோது, சென்னை பல்லாவரம் பம்மல், ரகுபதி தெருவில் வசிக்கும் சிறுமியின் சின்னபாட்டியான சின்னப்பொண்ணு வசித்து வருவதை அறிந்தனர். இதையடுத்து, அவருக்கு தகவல் தரப்பட்டுள்ளதாம். சின்னப்பொண்ணுவிடம், சின்ன பெண்ணை ஒப்படைக்க உள்ளனர் போலீசார்..!!!
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications