அதிமுக ஆட்சிக்கு அனைத்து விதத்திலும் ஆதரவு… பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டம்
சென்னை : அதிமுக ஆட்சிக்கு அனைத்து விதத்திலும் தேமுதிக ஆதரவு அளிக்கும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
2019 மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலானகூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. சென்னை கிரவுன் பிளாசாவில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின்போது இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு கையெழுத்தானது.

தேமுதிக சார்பில் அக்கட்சியின் நிறுவனரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் கையெழுத்திட்டார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி உள்ளாட்சித் தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்றும் கூறினார்.
மேலும், விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு வருவார். மக்களிடையே இந்த கூட்டணி பிரபலமாக உள்ளது. இது ஜெயலலிதா, விஜயகாந்த் அமைத்த வெற்றிக் கூட்டணி. 40 தொகுதிகளிலும் வென்று நாளை நமதே நாற்பதும் நமதே என்பதை நிரூபிப்போம்.
எண்களில் ஒன்றும் கிடையாது; எண்ணங்களில் தான் எல்லாம் இருக்கிறது. சட்டப்பேரவை இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும். அதிமுக எம்பிக்கள் குறித்து நான் பேசிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது.
அதிமுக - தேமுதிக கூட்டணி மாபெரும் வெற்றி கூட்டணி. ஆட்சிக்கு அனைத்து விதத்திலும் தேமுதிக ஆதரவு அளிக்கும் என்றும் திட்டவட்டமாக கூறினார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Aadhav Arjuna: "இந்தி தெரியாது போடா" துரந்தர்னு விமர்சித்த ஆதவ் அர்ஜுனாவுக்கு பிரேமலதா தடாலடி பதில்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications