Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இயக்குநர் பாலாவின் வணங்கான் படப்பிடிப்பு.. நடிகைக்கு அடி உதை.. போலீஸில் புகாரால் பரபரப்பு

வணங்கான் படப்பிடிப்பில் துணை நடிகைக்கு அடி உதை ஏற்பட்டதை அடுத்து அவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: வணங்கான் படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட பஞ்சாயத்தில் அப்படத்தில் நடித்து வந்த துணை நடிகை ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக உள்ளவர் பாலா. கடந்த சில ஆண்டுகளாக படம் ஏதும் இயக்காமல் இருந்து வந்தார். அவர் முதல் முதலாக சேது எனும் படத்தை இயக்கினார்.

இதையடுத்து நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவருக்கு முத்துமலர் என்பவருடன் 2004 ஆம் ஆண்டு திருமணம் ஆனது.

விவாகரத்து

விவாகரத்து

இதையடுத்து இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் 2022 ஆம் ஆண்டு விவாகரத்து ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு வணங்கான் எனும் படத்தை பாலா இயக்கி வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் படப்பிடிப்பை தொடங்கினார். இதில் சூர்யா ஹீரோவாக நடிக்கிறாராம்.

2டி நிறுவனம்

2டி நிறுவனம்

இந்த படத்தை 2டி நிறுவனம் தயாரிக்கிறது. இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து கடந்தாண்டு மார்ச் மாதம் கன்னியாகுமரியில் ஷூட்டிங்கையும் நடத்தினர். அங்கு ஒரு மாதம் ஷூட்டிங் முடிந்த பின்னர் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதால் படப்பிடிப்பு பாதியில் நின்றுவிட்டதாக சர்ச்சை கிளம்பியது.

 உண்மையில்லை

உண்மையில்லை

இதில் உண்மையில்லை என நடிகர் சூர்யா தரப்பு மறுப்பு தெரிவித்தாலும், படப்பிடிப்பு தொடங்கப்படாமலேயே இருந்து வருகிறது. இதையடுத்து இந்த படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகிவிட்டதாக அறிக்கை மூலம் அறிவித்தார் பாலா. சூர்யா விலகினாலும் வணங்கான் படத்தை கைவிடும் எண்ணம் பாலாவுக்கு இல்லை. அதனால் அருண் விஜய்யை வைத்து படத்தை எடுத்து வருகிறார்.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது கன்னியாகுமரியில் நடந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது புதிய பிரச்சினை கிளம்பியுள்ளது. வணங்கான் படத்தில் நடிப்பதற்காக கேரளாவில் இருந்து துணை நடிகைகள் சிலரை ஜிதின் என்ற ஒருங்கிணைப்பாளர் அழைத்து வந்துள்ளார். இதில் லிண்டா என்ற பெண்ணும் ஒருவர். இவர்களுக்கு 3 நாட்கள் நடிப்பதற்கு மொத்தம் ரூ 22, 600 ஊதியமாக கொடுப்பதாக பேசப்பட்டது.

பணம் கொடுக்கவில்லை

பணம் கொடுக்கவில்லை

ஆனால் பேசியபடி பணம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து கேட்ட போது துணை நடிகை லிண்டாவை ஜிதின் அடித்து உதைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து நடிகை லிண்டா கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் வணங்கான் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+