ஜல்லிக்கட்டை விடுங்க.. பந்தயங்களில் குதிரை விரும்பியா பங்கேற்கிறது? பாயிண்டை பிடித்த சுப்ரீம் கோர்ட்
டெல்லி: ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளுக்குத் தடை விதிக்க கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் பரபர வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
கடந்த 2011ஆம் ஆண்டு காட்சி விலங்குகள் பட்டியலில் சிங்கம், புலி, சிறுத்தை, உள்ளிட்ட வனவிலங்குகளுடன் காளைகளும் சேர்க்கப்பட்டது. இதுதான் ஜல்லிக்கட்டு தடைக்கும் காரணமாக அமைந்தது.
வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காட்சி விலங்குகள் பட்டியலில் உள்ள விலங்குகளைப் பழக்கப்படுத்தி, பொழுதுபோக்கு நிகழ்வுகளில் பங்கேற்க வைக்கக் கூடாது. மேலும், மிருக வதை தடுப்பு சட்டத்தையும் சுட்டிக்காட்டி ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

ஜல்லிக்கட்டு
கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை மெரினாவில் மிகப் பெரியளவில் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்யும் வகையில் அவசரச் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. அதன் பிறகு ஜல்லிக்கட்டு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்கும் இந்த அவசர சட்டத்திற்குத் தடை கோரி பீட்டா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மீண்டும் வழக்கு தொடர்ந்தன.

கோரிக்கை
ஜல்லிக்கட்டு மட்டுமின்றி, மகாராஷ்டிராவில் நடைபெறும் கம்பாலா உள்ளிட்ட போட்டிகளுக்கும் தடை கோரி வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கை 2018 முதல் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்காத நிலையில், நேற்று வழக்கு விசாரணை தொடங்கியது. முதல் நாளான நேற்று வழக்கு தொடர்பாக பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

பீட்டா வாதம்
இந்நிலையில், இரண்டாவது நாளாக இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், இதில் தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி ஆஜராகினார். ஜல்லிக்கட்டு என்பது ஒரு மாட்டின் மீது ஏராளமான இளைஞர்கள் விழுந்து அதனை அடக்க முயல்வது இதில் ஏராளமான மாடுகள் காயம் அடைவதாக பீட்டா உள்ளிட்ட மனுதாரர்கள் கருத்தை முன்வைத்தனர்.

கடும் எதிர்ப்பு
இதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பிரமாண பத்திரத்தில் கூறாத விஷயங்களை எல்லாம் எதிர் தரப்பினர், புதிது புதிதாக வாதங்களாக முன்வைப்பதாகத் தமிழக அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். ஜல்லிக்கட்டு, கம்பாலா உள்ளிட்ட போட்டிகளுக்கு தடை கோரிய இந்த வழக்கில் தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்கள் எதிர் மனுதாரர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்த விசாரணை
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பீட்டா உள்ளிட்ட தடை கோரும் அமைப்புகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் லுத்ரா, மிருகவதை தடுப்பு சட்டம் குறித்த விதிகளை நீதிமன்றத்தில் படித்துக் காட்டினார். மிருகங்களுக்குத் தேவையில்லாத பாதிப்புகள் ஏற்படக் கூடாது என்பதே இந்த விதி என்று குறிப்பிட்ட அவர், தமிழக அரசின் சட்டத் திருத்தம் குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது இடைமறித்த நீதிபதிகள், நாடாளுமன்றம் இந்த சட்டத்தைத் திருத்தினால் என்ன? எனக் கேட்டார்கள். அதற்குப் பதிலளித்த லூத்ரா, மிருக வதையை நீடிக்கக் கூடாது என்றும் என்னைப் பொறுத்தவரை நாடாளுமன்றமும் இந்த சட்டத்தைத் திருத்த முடியாது என்றார்.

கொசு கடித்தாலும் மிருக வதையா
அப்போது நீதிபதிகள், "இதை அவர்கள் தன்னிச்சையான முடிவாக எடுத்திருந்தால் எது வேறு. ஆனால், சட்டசபையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அதில் நீதிமன்றத்தால் தலையிட முடியாது.. ஒரு கொசு உங்களை வந்து கடித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என யோசிக்கிறோம். அதைக் கொன்று இந்தச் சட்டத்தின் கீழ் தண்டனை பெறுவதா அல்லது கொசுவிலிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டுமா? இரக்கம் இருக்க வேண்டும் தான். ஆனால், மனிதர்களுக்கான விதிகள் அனைத்தும் விலங்குகளுக்குப் பொருந்தாது. கொசுவை விடுங்கள். பாம்பு உங்களைக் கடிக்க வந்தால் என்ன செய்வீர்கள்" என்று கேட்டார். அப்போதும் மிருக வதை தடுப்பு சட்டம் பாதுகாக்க வரும் என்றும் அப்போது பாம்புகளைத் தொடாமல் தப்பி ஓடுவதே சரியானதாக இருக்கும் என்றார்.

பாக்ஸிங் தெரியுமா
மேலும், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட விளையாட்டில் மனிதர்கள் மகிழ்விற்காக மிருகத்தைக் கோபப்படுத்தி, அதனுடன் மோதுகிறார்கள் எனத் தெரிவித்தார்.இதை கேட்ட நீதிபதிகள், "குத்துச்சண்டை, வால் சண்டை போன்ற மனிதர்கள் ஈடுபடும் சண்டையில் ஒருவருக்கொருவர் துன்பப்படுத்துகின்றனர். சமயத்தில் இறப்பு கூட நிகழ்கிறது" என்று கேட்டார்கள். அதற்குப் பதிலளித்த லூத்ரா, "பாக்ஸிங் வீரர்கள் விருப்பப்பட்டு போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள்" என்றார்.

குதிரை பந்தயம்
அதற்கு நீதிபதிகள், "இங்கேயும் விலங்குகளுக்கு விருப்பம் இல்லையென்றால் அதனால் சுதந்திரமாக இருந்துவிட முடியுமா? குதிரைப் பந்தயம் நடக்கிறது அந்த குதிரை அதனை மகிழ்வுடன் செய்கிறது என நீங்கள் நினைக்கிறீர்களா? கேரளாவில் யானைப் பந்தயம் நடத்தப்படுகிறது அது குறித்து என்ன சொல்லப் போகிறீர்கள்?" என்று கேட்டார்கள். "இதில் ஒரு வேறுபாடு இருக்கிறது.. நாங்கள் விலங்குகளைக் கோபப்படுத்திச் சண்டையிட வைப்பது குறித்துப் பேசுகிறோம். விலங்குகளை அச்சுறுத்துவதே ஆபத்தானது. சண்டையிடாத விலங்குகளை இவர்களே கோபப்படுத்துகிறார்கள். மனிதர்கள் மத்தியில் இறக்கினால், ஒன்று அது காயமடையும் இல்லையென்றால் மனிதர்கள் காயமடைவார்கள்" என்றார்.

ஃபோட்டோக்கள்
ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் துன்புறுத்தப்படுகிறது என சில புகைப்படங்களைக் காட்டினார் விலங்குகள் நல வாரியங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் லுத்ரா. அதற்கு நீதிபதிகள், "இத்தகைய சில புகைப்படங்கள் ஒட்டுமொத்த விதிமுறைகளும் மீறப்படுகிறது என்பதை நிரூபிப்பதற்கு போதுமானது இல்லை" என்று கூறி அதை ஏற்க மறுத்துவிட்டனர். இதையடுத்து வழக்கு விசாரணையைச் செவ்வாய்க்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

தமிழக அரசு
முன்னதாக நேற்றைய தினம் தமிழக அரசு எழுத்துப்பூர்வமாகத் தனது வாதத்தைத் தாக்கல் செய்து இருந்தது. அதில் பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்த பின்னரே ஜல்லிக்கட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டதாகத் தெரிவித்த தமிழ்நாடு அரசு, ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்படவில்லை என்றும் அது சட்டப்படிதான் நடக்கிறது என்றும் குறிப்பிட்டு இருந்தார். மேலும், கலாசார ரீதியான இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டில் மாடுகள் அதிகம் மதிக்கப்படும் என்றும் காளைகளைத் துன்புறுத்தும் பேச்சுக்கே இடம் இல்லை என்றும் தெரிவித்து உள்ளது.

வாதம்
மேலும், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதித்தால் பாரம்பரிய கலாசாரமே பறிபோகும் அபாயம் உள்ளதாகவும் பல ஆண்டுகளாக நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்குத் தடை விதிக்கக் கூடாது என்றும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டது. மேலும், முழு பாதுகாப்போடு முறையான விதிமுறைகளைப் பின்பற்றியே போட்டிகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. முன்னதாக நடந்த வழக்கு விசாரணையில், காளைகளை வீரர்கள் துன்புறுத்துவதால் ஜல்லிக்கட்டிற்குத் தடை விதிக்க வேண்டும் என பீட்டா வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications