Ungaludan Stalin: உங்க நோக்கம் புரியுது! உங்களுடன் ஸ்டாலின் கேஸ்! CV சண்முகத்திடம் கடும் கேள்வி கேட்ட உச்ச நீதிமன்றம்
சென்னை: உங்களுடன் ஸ்டாலின் (Ungaludan Stalin) திட்டத்தில் அரசியல் கட்சிகள் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்த தடை கிடையாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பில் அதிமுக தரப்பிற்கும், மனுதாரர் எம்பி சிவி சண்முகம் தரப்பிற்கும் கிடுக்கிப்பிடி உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது. உச்ச நீதிமன்றம் சிவி சண்முகத்திடம் சொன்ன கருத்துக்களை இங்கே பார்க்கலாம்.
1. வழக்கு தொடுத்த சிவி சண்முகம் தரப்பிடம்.. உங்கள் அரசியல் சண்டைகளை நீதிமன்றத்திற்கு கொண்டு வர வேண்டாம் என உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் வலியுறுத்தியது. அவற்றை அரசியல் களத்திலேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. மேலும், "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தில் தலைவர்களின் பெயர் பயன்படுத்த தடை இல்லை எனத் திட்டவட்டமாகத் தீர்ப்பளித்தது.
2. இது போன்ற மனுக்கள் "சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வது" என்றும் கூறி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
3. அரசியல் தலைவர்களின் பெயர்களில் திட்டங்களுக்குப் பெயரிடுவது நாடு முழுவதும் பின்பற்றப்படும் ஒரு நிகழ்வு. அரசியல் கட்சிகளின் அனைத்துத் தலைவர்களின் பெயரிலும் இதுபோன்ற திட்டங்கள் இருக்கும்போது, மனுதாரர் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியையும், ஒரு குறிப்பிட்ட தலைவரையும் மட்டும் தேர்ந்தெடுத்து வழக்கு தொடுப்பது சரியல்ல. இதை பாராட்ட முடியாது.

4. அரசியல் நிதிகள் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து மனுதாரர் இவ்வளவு அக்கறை கொண்டிருந்தால், அவர் அத்தகைய அனைத்து திட்டங்களுக்கும் சவால் விடுத்திருக்கலாம். நாடு முழுக்க உள்ள திட்டங்களை எதிர்த்து பொதுநலன் வழக்காக போட்டு இருக்கலாம்.
5. ஆனால், ஒரு அரசியல் தலைவரை மட்டும் குறிவைப்பது மனுதாரரின் நோக்கங்களை வெளிப்படுத்துகிறது" என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டது.
6. இந்த வழக்கை தொடர்ந்த அஇஅதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகத்திற்கு ₹10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத் தொகையை மக்கள் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டும். தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் இந்த அறிவுறுத்தலை வழங்கியது. இதனால் அஇஅதிமுகவும் சி.வி. சண்முகமும் சங்கடமான நிலைக்கு ஆளாகினர்.
உங்களுடன் ஸ்டாலின் (Ungaludan Stalin):
7. அரசியல் சண்டைகள் தேர்தல் களத்தில் தீர்க்கப்பட வேண்டும் என்றும், இதற்காக நீதிமன்றங்கள் பயன்படுத்தப்படக்கூடாது என்றும் நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறோம் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது.
8. விசாரணையின்போது, அஇஅதிமுக வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். அதில், "முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் நீங்கள் கொண்டு வந்த எத்தனை திட்டங்களுக்கு ஒரே ஒரு நபரின் பெயரை வைத்திருக்கிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அஇஅதிமுக வழக்கறிஞர், "ஒன்று கூட இல்லை" என்று பதிலளித்தார்.
9. அப்போது திமுக தரப்பு, "பொய் சொல்கிறார்கள்" என ஆட்சேபனை தெரிவித்தது. அஇஅதிமுக மாநில ஆட்சியிலும், மத்திய அரசின் பல ஆண்டு திட்டங்களிலும் தலைவர்கள் பெயர் பயன்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டனர். "புரட்சித் தலைவர்", "புரட்சித்தலைவி" போன்ற பெயர்களில் திட்டங்கள் இருந்ததாக திமுக சுட்டிக்காட்டியது. இதற்கு பதிலளித்த அஇஅதிமுக தரப்பு, "அம்மா என்பது யாருடைய தனிப்பட்ட பெயர் கிடையாது, அது ஒரு பொதுவான பெயர்" என வாதிட்டது.
10. இந்த வழக்கை தாக்கல் செய்த சி.வி. சண்முகம் தற்போது மாநிலங்களவை உறுப்பினர். அவர் முந்தைய அஇஅதிமுக ஆட்சியில் மாநில அமைச்சராகப் பதவி வகித்தார். அவர் அமைச்சர் இருந்த அப்போதைய ஆட்சியில் 22 அரசு திட்டங்களுக்கு ஒரே நபரின் (ஜெயலலிதா) பெயர் பயன்படுத்தப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
உங்களுடன் ஸ்டாலின் (Ungaludan Stalin) வழக்கு பின்னணி
"உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைத்தார். இது கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது. இந்தத் திட்டம் நவம்பர் மாதம் வரை செயல்படுத்தப்படும். மக்களின் தேவைகளை உடனடியாகப் பூர்த்தி செய்வது இதன் நோக்கம். அனைத்துத் துறை அதிகாரிகளையும் ஒரே இடத்தில் இத்திட்டம் ஒருங்கிணைக்கிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் 10,000 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. "உங்களுடன் ஸ்டாலின்" என்ற பெயரில் நகர்ப்புறங்களில் 3,768 இடங்களிலும், கிராமப்புறங்களில் 6,232 இடங்களிலும் சிறப்பு முகாம்கள் செயல்படுகின்றன. பொதுமக்கள் நேரடியாக இந்த முகாம்களில் விண்ணப்பம் பெற்றுச் சமர்ப்பிக்கலாம். ஜூலை 15 முதல் விண்ணப்பங்கள் வீடுகளுக்கும் நேரடியாக வழங்கப்படுகின்றன. இதற்காகப் பல தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திட்டங்களில் தலைவர் பெயர்: உச்ச நீதிமன்றத்தின் பார்வை
தமிழக அரசின் திட்டங்களில் தலைவர்களின் பெயர்கள், படங்கள் பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. "உங்களுடன் ஸ்டாலின்", "நலம் காக்கும் ஸ்டாலின்" போன்ற திட்டங்களில் முதல்வர் பெயர் இடம் பெற்றதை அஇஅதிமுகவின் சி.வி. சண்முகம் எதிர்த்தார். அவரது வழக்கின் அடிப்படையில் இத்தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் முன்பு அவசர விசாரணையாக வந்தது. இதில் தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்












Click it and Unblock the Notifications