மொழியை காப்பதில் தமிழர்கள் முதலிடத்தில் உள்ளனர்! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பேச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மொழியையும், கலாச்சாரத்தையும் காப்பதில் தமிழர்கள் முதலிடத்தில் உள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற புதிய நீதிமன்ற கட்டிட திறப்பு மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று பேசிய அவர் இதனைக் கூறினார்.

தாம் சிறுவயதில் சென்னை வந்த போது, இங்கு நடைபெற்ற மொழிப்போராட்டம் இன்னும் தனக்கு நன்கு நினைவில் உள்ளதாக பகிர்ந்தார்.

நீதித்துறை நிகழ்ச்சி

நீதித்துறை நிகழ்ச்சி

பொதுமக்களுக்கு விரைந்து நீதி வழங்குதலை உறுதி செய்யும் வகையில் நீதிமன்றங்களுக்குத் தேவையான கட்டட வசதி, மனித ஆற்றல், பிற உட்கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து செய்து கொடுப்பதில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் இன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்றக் கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டுதல் மற்றும் திறப்பு விழா நடைபெற்றது.

நீதிபதி என்.வி. ரமணா

நீதிபதி என்.வி. ரமணா

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, சென்னை உயர்நீதிமன்றத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு இடவசதி வழங்கும் பொருட்டு, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் 20 கோடியே 24 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 9 அடுக்குகள் கொண்ட நீதிமன்றக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், மொழியையும், கலாச்சாரத்தையும் காப்பதில் தமிழர்கள் முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்தார்.

துரிதமாக நீதி

துரிதமாக நீதி

காலங்கள் மாறிவிட்டதாகவும் 5 நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மக்கள் 20-20 கிரிக்கெட் போட்டிக்கு மாறிவிட்டதாகவும், துரித உணவுகளை போல் நீதியையும் துரிதமாக எதிர்பார்க்கிறார்கள் எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்தார். நீதிபதிகளை பொறுத்தவரை சமூக உண்மையை அறிந்து வைத்திருக்க வேண்டும் எனக் கோரிய அவர், மக்கள் தொகைக்கு ஏற்ப நீதிபதிகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டிய தேவை இருப்பதாக கூறினார்.

 மக்களின் எதிர்பார்ப்பு

மக்களின் எதிர்பார்ப்பு

மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நீதித்துறை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளூர் மொழிகளை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா கூறினார். மேலும், நீதித்துறை உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் தமிழக அரசு முதலிடத்தில் இருப்பதாக பாராட்டும் தெரிவித்தார்.

தடை கூடாது

தடை கூடாது

ஒருவர் நீதித்துறைக்குள் வருவதற்கு மொழி, சாதி, மதம்,இனம் என எதுவும் தடையாக இருக்கக் கூடாது என்ற தனது விருப்பத்தை கூறிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, பின் தங்கிய பகுதியிலிருந்து வரும் நீதிபதிகளால் தான் மக்களின் பிரச்சனையை உணர்ந்து தீர்க்க முடியும் என்பதையும் குறிப்பிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+