Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈஷா வழக்குகளை விசாரிக்க தடையில்லை..உச்சநீதிமன்றம் அதிரடி! தீர்ப்பை வரவேற்பதாக ஜக்கி வாசுதேவ் கருத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவை ஈஷா மையத்தின் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை தமிழக அரசின் விசாரிப்பதற்கு எந்த தடையும் இல்லை என நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக கூறியுள்ளார் ஈஷா யோக மையத்தின் நிறுவனரான சத்குரு ஜக்கி வாசுதேவ்.

கோவை ஈஷா மையத்தில் படிக்க சென்ற தங்களது இரு மகள்களை மீட்டுத் தருமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவை வடவள்ளியைச் சேர்ந்த காமராஜ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

isha yoga supreme court sadhguru

அந்த மனுவில், தனது மகள்கள் லதா கீதா ஆகியோர் ஈஷா மையத்தில் யோகா கற்க சென்ற நிலையில் அங்கேயே தங்கி விட்டதாகவும், அவர்களை அடித்து துன்புறுத்துவதாக தகவல் வந்திருக்கிறது. எனது மனைவியும் நானும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்..

நான் ஈஷாவிடம் பொதுமனிப்பு கேட்டால் தான் என் மகளுடன் பேச முடியும் என்கிறார்கள். எங்களது மகள்களை மீட்டுத் தர வேண்டும் என அந்த மனுவில் காமராஜ் கோரிக்கை விடுத்திருந்தார், இந்த வழக்கு கடந்த ஒன்றாம் தேதி விசாரணைக்கு வந்த போது, ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்துவிட்டு மற்ற பெண்களை சன்னியாசி ஆக்குவது ஏன் என கேள்வி எழுப்பினார். மேலும் தங்கள் யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ இல்லை என குறிப்பிட்ட நீதிபதிகள், ஈஷா யோகா மையம் இது சந்தேகம் உள்ளது. எனவே ஈஷா யோகா மையம் மீது மொத்தம் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளது என்று ஆய்வு செய்து அக்டோபர் நான்காம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதை அடுத்து போலீசார் சமூக நலத் துறை அதிகாரிகள் ஈஷா மையத்தில் நேரடியாக விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ஈஷா யோகா மையம் தொடர்பான அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விதித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என ஈஷா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம் அங்குள்ள வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றிக் கொள்வதாக தெரிவித்தது.

மேலும் காவல்துறை உயர்நீதிமன்றம் கேட்டிருந்த அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் ஈஷா யோகா மையம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் கோவை எஸ்பி நேற்று பதில் மனு தாக்கல் செய்தார். அதில் ஈஷா மையத்தில் எத்தனை பேர் தங்கி உள்ளார்கள், மையத்தில் என்னதான் நடக்கிறது போன்றவை குறித்த தகவல்கள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

ஈஷா மையத்தில் தகன மேடை இருக்கும் நிலையில் அங்கு சென்ற பலர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஈஷா விவகாரத்தில் பல வழக்குகள் உள்ளதால், இதனை விசாரிக்க தடை விதிக்க கூடாது என அரசு தரப்பு வாதிட்டது. இதை ஏற்று நீதிபதிகள் நிலுவையில் உள்ள வழக்குகள் மீதான விசாரணையை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை. இந்த வழக்கு தொடர்பாக தமிழக காவல்துறையின் அறிக்கையை தாங்கள் இன்னும் படிக்காததால் விசாரணையை அக்டோபர் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக கூறினார்.

இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பினை வரவேற்பதாக ஈஷா யோக மைய நிறுவனரான சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர்,"நாங்கள் நாட்டின் உயரிய நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். உச்சநீதிமன்றம் எண்ணற்ற உண்மையான வழக்குகளை விசாரிக்க நேரம் தேவைப்படும் நிலையில், தீய நோக்கத்துடன் தாக்கல் செய்யப்படும் பொறுப்பற்ற மனுக்கள் குறித்து நேரத்தை வீணடிக்க வேண்டிய அவல நிலை மிகுந்த வருத்தத்திற்குரியது. ஜனநாயகத்தின் சலுகைகளை பொறுப்புடன் பயன்படுத்துவது நமக்குப் பாடமாக இருக்கவேண்டும்" என கூறியுள்ளார்.

isha yoga supreme court sadhguru
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+