ஜாமீன் மனுக்கள் மீது 2 மாதங்களில் தீர்ப்பளிக்க வேண்டும்: உயர்நீதிமன்றங்களுக்கு சுப்ரீம் கோர்ட் ஆணை!
டெல்லி: ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து 2 மாதங்களுக்குள், அந்த மனுக்கள் மீது தீர்ப்பளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜாமீன் மனுக்களை நீண்ட காலம் நிலுவையில் வைத்திருப்பது நீதி மறுக்கப்படுவதற்கு சமம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில், போலி ஆவணங்கள் தயாரித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேருக்கு முன்ஜாமீன் வழங்க மும்பை உயர்நீதிமன்றம் மறுத்தது. இது தொடர்பான மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, "இந்த விவகாரத்தில் மும்பை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு மீண்டும் உறுதி செய்யப்படுகிறது. அதேநேரத்தில் ஜாமீன் கேட்கக்கூடிய மனுக்கள் மீது குறைந்தபட்சம் மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்" என அனைத்து மாநில உயர் நீதிமன்றங்கள் மற்றும் விசாரணை நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
நீதிபதிகள் கூறுகையில், "தம்மிடமும், தங்கள் அதிகார வரம்புக்குள்பட்ட விசாரணை நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்கள் மீது, அந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து 2 மாதங்களுக்குள் தீர்ப்பளிக்கப்படுவதை உயர்நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டும்.
அந்த மனுக்கள் மீது தீர்ப்பளிக்க தாமதம் ஏற்படுவதற்கு வழக்குடன் சம்பந்தப்பட்ட தரப்பினர்தான் காரணம் எனக் கருதப்படும் சந்தர்ப்பங்களை தவிர, பிற வேளைகளில் 2 மாதங்களுக்குள் தீர்ப்பளிக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.
இத்தகைய மனுக்கள் தனிப்பட்ட சுதந்திர உரிமையுடன் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதால், பல ஆண்டுகளுக்கு இந்த மனுக்களை நிலுவையில் வைத்திருக்க முடியாது. இந்த மனுக்களை நீண்ட காலம் நிலுவையில் வைத்திருப்பது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் நோக்கத்தை தடுப்பதுடன், நீதி மறுக்கப்படுவதற்கு நிகராகவும் இருக்கும்.
ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்கள் அதிக அளவில் குவிவதை தடுப்பதற்கு தகுந்த வழிமுறைகள் மற்றும் நடைமுறைகளை உயர்நீதிமன்றங்கள் வகுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவின் நகலை அனைத்து உயர்நீதிமன்றங்களுக்கும் உச்சநீதிமன்றப் பதிவுத் துறை அனுப்ப வேண்டும் என்றும் நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
-
பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம் -
நாளை பக்ரீத்.. தமிழகத்தில் பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை.. ஐகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு! -
69% இடஒதுக்கீடு வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்.. மனுக்கள் தள்ளுபடி.. என்ன நடந்தது? -
உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் கோவை மூத்த பெண் வழக்கறிஞர் மோகனா! யார் இவர்? -
தமிழ்நாடு 69% இட ஒதுக்கீடு.. உச்சநீதிமன்றத்தில் இன்று முக்கிய விசாரணை.. விஜய்க்கு பெரிய சவால் -
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications