Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓபிஎஸை நீக்கியது ஏன்? எடப்பாடிக்கு நீதிமன்றம் கேள்வி.. அதிமுக பொதுக்குழு வழக்கு நாளை ஒத்திவைப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் நாளைக்கு ஒத்தி வைத்துள்ளது. இன்றைய விசாரணையின் போது, எந்த விளக்கமும் கேட்காமல் ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கியது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு, ஓ.பன்னீர் செல்வம் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம், பி.வைரமுத்து தரப்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் சாய் அமர்வு முன் விசாரணை நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை தொடங்கிய நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் விவரங்களை நீதிபதிகள் கேட்டு அறிந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளது தானே என்றும், அதிமுக பொதுக்குழு வழக்கில் அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியத்தை அறிய விரும்புகிறோம் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

 ஓபிஎஸ், இபிஎஸ் என்ன அர்த்தம்?

ஓபிஎஸ், இபிஎஸ் என்ன அர்த்தம்?

இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில், நீதிமன்ற விசாரணை காரணமாக அதிமுக கட்சிப் பணிகள் தேக்கமடைந்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் வாதிட்டது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்குகள் அனைத்தும் ஒரே கோரிக்கையை வலியுறுத்துபவையா?, வழக்கு தொடர்ந்தவர்கள் யார்? யார்?, என்னென்ன பொறுப்பு வகிக்கிறார்கள்?, இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் என்றால் என்ன அர்த்தம் என்று நீதிபதிகள் கேட்டனர்.

எடப்பாடி வாதம்

எடப்பாடி வாதம்

இதற்கு, இரு தரப்பு வழக்கறிஞர்களும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியவற்றுக்கு விளக்கம் கொடுத்தனர். பின்னர் எடப்பாடி பழனிசாமி தரப்பில், பொதுக்குழுவுக்கு எதிராக மனுத்தாக்கல் எனில், அதன் தீர்மானங்களும் வழக்கின் கீழ் வரும். விதிகளின்படி, ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள் கோரிக்கையின் அடிப்படையில் தான் பொதுக்குழு கூட்ட முடியும். அதன்படி, ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்களின் கோரிக்கை அடிப்படையில் தான் பொதுக்குழு நடத்தப்பட்டது என்று வாதிடப்பட்டது.

பொதுக்குழுவால் தேர்வு

பொதுக்குழுவால் தேர்வு

இதன்பின்னர் இடைக்கால பொதுச்செயலாளர் என்பவர் தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்டாரா என்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு, பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களால் இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டார் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தேர்தல் வைத்து தேர்ந்தெடுக்கப்பட்டதா? என்று நீதிபதி எழுப்பிய கேள்விக்கு, இரு பதவிகளுக்கும் வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பதால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக ஓபிஎஸ் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

 அடிப்படை தொண்டர்கள்

அடிப்படை தொண்டர்கள்

தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பில், பொதுக்குழுவில் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டும் புதிய அவைத் தலைவரை அறிவித்தார்கள். அதுமட்டுமல்லாமல் எனது அனுமதியின்றி கடைசியாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்டினார்கள், உண்மையில் அடிப்படை உறுப்பினர்கள் தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும். தேர்தல் தொடர்பான ஆவணங்களில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஆவணம் சமர்பித்தோம் என்று வாதிடப்பட்டது.

 விளக்கம் கேட்காதது ஏன்?

விளக்கம் கேட்காதது ஏன்?

தொடர்ந்து ஜூலை 11ம் தேதிக்கு முன் அதிமுகவில் இருந்த நிலையை மீண்டும் ஏற்படுத்த ஓபிஎஸ் தரப்பு வலியுறுத்தப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதிகள், விளக்கம் கேட்காமல் ஓபிஎஸை நீக்கியது ஏன்? என்று எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில், ஓபிஎஸ் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று குற்றச்சாட்டப்பட்டது.

நாளை ஒத்திவைப்பு

நாளை ஒத்திவைப்பு

இதன் பின்னர் யார் யாருக்கு ஆதரவளிக்கிறார்கள் என்பதை நாங்கள் கருத்தில் கொள்ளவில்லை; கருத்தில் கொள்ளத் தேவையும் இல்லை என்றதோடு, பொதுக்குழு வழக்கு விசாரணையை இந்த வாரத்திற்குள் நிறைவு செய்ய விரும்புகிறோம் என்று கூறி விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+