எதிர்ப்புக்கு மத்தியில் ஹைகோர்ட் நீதிபதியாக பாஜக விக்டோரியா கவுரி-உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை!
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக எதிர்ப்புகளுக்கு நடுவே பாஜகவின் விக்டோரியா கவுரி நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: கடும் எதிர்ப்புகளுக்கு இடையே சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பாஜகவின் விக்டோரியா கவுரி நியமிக்கப்பட்டுள்ளார். விக்டோரியா நியமனத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலீஜியமானது சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 5 நீதிபதிகளை பரிந்துரைத்தது. இதில் விக்டோரியா கவுரி என்பவரும் இடம் பெற்றிருந்தார்.

விக்டோரியா கவுரி, பாஜகவை சேர்ந்தவர். பாஜகவின் அகில இந்திய மகளிரணி செயலாளராக இருந்தார். சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளை பேசி சர்ச்சைகளில் சிக்கியவர் விக்டோரியா கவுரி. ஆகையால் விக்டோரியாவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கூடாது என என்ஜிஆர் பிரசாத், வைகை, மோகன், வி.சுரேஷ் உள்ளிட்ட 21 மூத்த வழக்கறிஞர்கள் 21 பேர் போர்க்கொடி தூக்கினர். இது தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கும் மனு அளித்தனர்.
அதில், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பது ஜிகாத்தா அல்லது கிறிஸ்துவ அமைப்புகளா என்ற தலைப்பிலும், இந்தியாவில் கிறிஸ்தவ அமைப்புகள் கலாச்சார படுகொலை செய்வதாகவும் வழக்கறிஞர் விக்டோரியா கெளரி பேசிய பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் உள்ளது எனவும் தங்களது மனுவில் மூத்த வழக்கறிஞர்கள் சுட்டிகாட்டியுள்ளனர். ஆகையால் விக்டோரியா கெளரி நீதிபதி பதவிக்கு அவர் தகுதியற்றவர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

விக்டோரியா கெளரியை நீதிபதியாக நியமித்த பரிந்துரையை திரும்ப பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலிஜியத்திடமும் மூத்த வழக்கறிஞர்கள் மனு அளித்தனர்.
ஆனால் மத்திய அரசும் உச்சநீதிமன்றமும் இதனை கவனத்தில் கொள்ளவில்லை. தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக விக்டோரியா கவுரி உள்ளிட்ட 5 பேரை கொலீஜியம் பரிந்துரைத்ததை ஏற்று மத்திய அரசு நியமன ஆணை வெளியிட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பின் கீழ் தொடர்புடைய விதிகளின்படி அலகாபாத், கர்நாடகா, சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக வழக்கறிஞர்கள் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என மத்திய அமைச்சர் கிரண் ரஜிஜூ பதிவிட்டிருந்தார். விக்டோரியா கவுரியுடன் பாலாஜி, ராமகிருஷ்ணன், ராமச்சந்திரன், திலகவதி ஆகியோரும் சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். மத்திய அரசின் இந்த முடிவு சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே விக்டோரியா கவுரியின் நியமனத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கும் தொடரப்பட்டது. மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன் இந்த வழக்கை தொடர்ந்தார். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் அவர் வலியுறுத்தினார். இந்த வழக்கு நாளை விசாரிக்கப்பட உள்ளது.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications