சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

27% இடஒதுக்கீடு பற்றி சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு பெரியாருக்கு கிடைத்த காணிக்கை - மு.க ஸ்டாலின்

பெரியாரின் சமூக நீதி தத்துவத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்ட காலம் உருவாகியுள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை : இந்தியாவுக்கே சமூகநீதியை உருவாக்கி கொடுக்கும் பெரும் பணியை நாம் செய்து வருவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 27 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பெரியாருக்கு கிடைத்த காணிக்கை என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் ரூ.355.26 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளிக்காட்சி மூலம் திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.

ஷாக் அடிக்கும் வேகத்தில் பரவும் கொரோனா.. இந்த 3 மாவட்டங்களில் அச்சமூட்டும் பாசிட்டிவ் விகிதம்! ஷாக் அடிக்கும் வேகத்தில் பரவும் கொரோனா.. இந்த 3 மாவட்டங்களில் அச்சமூட்டும் பாசிட்டிவ் விகிதம்!

திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், இன்னும் சில வாரங்களில் கொரோனா தொற்று குறைந்த பிறகு நிச்சயம் ஈரோடு வருவேன், மக்களை சந்திப்பேன் என்று தெரிவித்தார்.

பெரியாருக்கு காணிக்கை

பெரியாருக்கு காணிக்கை

27 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பெரியாருக்கு கிடைத்த காணிக்கை என்றும் பெரியாரின் சமூக நீதி தத்துவத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்ட காலம் உருவாகியுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இந்தியாவுக்கே சமூகநீதியை உருவாக்கி கொடுக்கும் பெரும் பணியை நாம் செய்து வருகிறோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அறிவுசார் கல்வி நிறுவனங்கள்

அறிவுசார் கல்வி நிறுவனங்கள்

முன்னதாக சென்னையில் இஸ்பாகான் கருத்தரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் 100 சிறந்த கல்வி நிறுவனங்களில் 30 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளது. அறிவுசார் கல்வி நிறுவனங்கள் இங்குதான் அதிகம் உள்ளதாக குறிப்பிட்டார். தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மட்டுமே 1.8 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு கிடைத்துள்ளதாக கூறினார்.

புதிய தொழில்கள்

புதிய தொழில்கள்

சிறு நிறுவனங்களில் முதலீடு செய்வதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழ்நாடு விளங்குகிறது என்று குறிப்பிட்டார். மேலும் புதிய தொழில்களை நோக்கியும் நமது எண்ணங்கள் செல்ல வேண்டும். கால மாற்றத்துக்கு ஏற்ப தொழில்துறையை மேம்படுத்த வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவும் வேறு பல புதிய உற்பத்தி முறைகளும் எல்லா துறைகளிலும் மாற்றங்களை நிகழ்த்தி உள்ளன. பெருந்தொற்று சூழலில் தொழில் நிறுவனங்கள் இயங்கும் முறையே மாறி இருக்கிறது என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.

English summary
27% reservation Tribute to Periyar : (பெரியாருக்கு மு.க. ஸ்டாலின் காணிக்கை) Chief Minister MK Stalin has said that the Supreme Court ruling on the 27 per cent reservation was a tribute to Periyar and that the time had come for the Supreme Court to adopt Periyar's philosophy of social justice.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X