ராகுல் காந்தியை உட்கார வெச்சிட்டு விஜய் இப்படியா செய்வது? காங்கிரசுக்கு இந்த அவமானம் தேவையா?
சென்னை: தவெக தலைவர் விஜய் மற்றும் ராகுல் காந்தி இடையிலான அரசியல் உறவு குறித்து பல்வேறு அதிரடி கருத்துக்களை எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான புதுமடம் ஹலீம் அவர்கள் Jeeva Today என்ற யூடியூப் சேனலுக்கு பிரத்யேகப் பேட்டியாக தந்துள்ளார்.. குறிப்பாக தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் புதிய கூட்டணிக் கணக்குகள் குறித்து அவர் முன்வைத்த விமர்சனங்கள் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன..
குழந்தைகளுக்காக ஒரு முதலமைச்சர் செயல் பட வேண்டும். ஆனால், குழந்தைகளிடமே ஓட்டு கேட்கும் தன்மையும், குழந்தைகள் சொல்லி பெற்றோர் ஓட்டு போடுவதும் என்ன மாதிரியான விஷயம்?

நேரு ஸ்டேடியம் சம்பவம்
பண்டித ஜவஹர்லால் நேருவையும் நாம் நேரு மாமா என்றுதான் சொல்கிறோம. அவருக்காகவே குழந்தைகள் தினமும் கொண்டாடுகிறோம்.. அதற்காக அவர், குழந்தைகளிடம் ஓட்டு போடுங்க, உங்க அப்பா, அம்மா, தாத்தாவை ஓட்டு போடுங்க என்று எப்போதாவது கேட்டாரா? இவ்வளவும், நேரு ஸ்டேடியத்தில்தான் நடந்துள்ளது.. அதுவும் அவரது பேரன் ராகுல் காந்தி முன்னிலையியே நடந்துள்ளது.
அதுமட்டுமல்ல, பதவியேற்பின்போது ராகுல் காந்தியை அவமரியாதை செய்ததை ஏற்கவே முடியாது.. குறைந்தபட்சம் பதவியேற்றுக்கொண்ட அமைச்சர்களாவது ராகுல் காந்திக்கு வணக்கம் சொல்ல வேண்டாமா? ராகுலை பாராட்டியிருக்க வேண்டாமா?
ராகுல் காந்தியை மறந்த விஜய்
ராகுல் பெயரையே போற போக்கில்தான் சொன்னார்கள்.. முதல் வார்த்தையே அவருக்கு நன்றி சொல்வதுதானே இருக்க வேண்டும்? அகில இந்திய தலைவர், எனக்காக டெல்லியில் இருந்து வந்துள்ளார், பிரதர், சகோதரர், அவரை நான் வரவேற்கிறேன் என்று விஜய் சொல்லலியே? அதுவும் திமுக கூட்டணியை விட்டுட்டு இங்கே ராகுல் வந்திருக்கிறார். ராகுல் காந்தி இந்நிகழவில் பங்கேற்றது, தேசிய சேனல்களில் கூடுதல் பெறும்.. ஏனென்றால் இந்தியா கூட்டணி இங்கு உடைவது, தேசிய அளவில் அவர்களுக்கு பெரிய செய்தியும்கூட.
இடதுசாரிகளும், விசிகவும், முஸ்லிம் லீக்கும் இந்தியா கூட்டணியை உடைக்கவில்லையே.. இவர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது, "நாங்கள் இப்போதுவரை ஸ்டாலினுடன் உள்ளோம், அவர் சொன்னதால் ஆதரவு தந்துள்ளோம்.. இதற்கு ஒரே காரணம் ஆளுநர் ஆட்சி எங்களுக்கு வந்துவிடக்கூடாது" என்றனர்.
விபி சிங் மண்டல் கமிஷன்
இதுபோல காங்கிரஸும் செய்திருக்கலாமே? கூட்டணியை உடைத்து கொண்டு போகணுமா? 3ம் அணியை கட்டமைக்கக்கூடிய தேவையை இன்று உருவாக்கிவிட்டார்கள்.. விபி சிங் போன்ற ஒரு சமூக காவலரை இன்று உருவாக்க வேண்டிய தேவை இன்று வந்துள்ளது.
விபி சிங் மண்டல் கமிஷன் கொண்டுவர காரணமாக இருந்தது கலைஞர். ஓபிசி இடஒதுக்கீட்டுக்கு காரணமாக இருந்தது கலைஞர். காங்கிரஸ் பாஜகவுக்கு இரண்டுக்கும் மாற்றாக ஒன்றை உருவாக்கினார் விபி சிங்.. கடைசியில் இடஒதுக்கீட்டை வைத்து, அவங்க 2 பேரும் சேர்ந்து விபி சிங் ஆட்சியை காலி செய்துவிட்டனர்.
சிவி சண்முகம் உட்பட 35 பலமான நபர்கள்
ஒருவேளை, அதிமுகவில் இருந்து 35 பேர் சிவி சண்முகம் தலைமையில் பிரிந்து தவெகவுக்குள் வந்தால், காங்கிரஸுக்கான இடம் மந்திரிசபையில் நிச்சயம் கிடைக்காது. வேண்டுமானால் வலிமை குறைந்த பதவி காங்கிரஸுக்கு தரப்படலாம்.
காரணம், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், சிவி சண்முகம் என்று பலமானவர்கள் 35 பேர் வருகிறார்கள்.. குறைந்தது 6 பதவியாவது தரணும்.. அப்படியிருக்கும்போது காங்கிரசுக்கு எப்படி தரமுடியும்? முதல் அமைச்சரவை பட்டியலியே சிறுபான்மை சமுதாயத்துக்கு அமைச்சர் பதவி தந்திருக்க வேண்டும்தானே?" என்றெல்லாம் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
ஹென்றியும் சொல்லிட்டாரு.. சென்னை முதல் கன்னியாகுமரி வரை உடனே இதை செய்யுங்க! தமிழக அரசுக்கு கோரிக்கை -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
தப்பு செஞ்சா அடுத்த செகண்டே பதவி காலி.. பனையூர் தவெக ஆபீஸில் அமைச்சர் ஆனந்த் கொடுத்த அதிரடி ஷாக் -
திருமாவளவன் ஆர்எஸ்எஸின் பேரப்பிள்ளை.. தவெகவில் நடப்பது கழுதை பேரம்.. வளைத்து வளைத்து அடித்த பொன்னார் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications