திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்.. சென்னையில் இருந்து இன்று இரவு சிறப்பு ரயில்.. எப்போது புறப்படும்
சென்னை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை நடைபெற உள்ளது. திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் வசதிக்காக சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இன்று இரவு இயக்கப்படுகிறது.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 13 ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கிய கந்தசஷ்டி திருவிழா 19- ஆம் தேதி வரை நடக்கிறது. கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நாளை மாலை 4 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நாளை மறுநாள் இரவு திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியத் தொடங்கியுள்ளனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் திருவிழாவின் முக்கிய நாட்களான இன்றும், நாளையும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பக்தர்களின் பாதுகாப்பு வசதியை கருத்தில் பல்வேறு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் சார்பிலும் காவல்துறை சார்பிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சிறப்பு ரயில்: இதனிடையே, பக்தர்கள் வசதிக்காக சென்னையில் இருந்து இன்று இரவு சிறப்பு ரயிலும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து இன்று இரவு 11.55 மணிக்கு இந்த ரயில் புறப்படும் எனவும் நெல்லை வரை இந்த ரயில் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சிறப்புக் கட்டணத்தில் இயக்கப்படும் இந்த ரயில், சூரசம்ஹாரம் முடிந்த பிறகு நாளை 18.11.2023 இரவு 10.11 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து தாம்பரத்திற்கு புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரசம்ஹாரம் திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் பக்தர்களின் வசதிக்காக இந்த ரயில் இயக்கப்பட உள்ளது.
போக்குவரத்து மாற்றம்: திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் இன்று நாளையும் திருச்செந்தூரில் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாகன நிறுத்தும் இடங்கள் மற்றும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் தங்கள் வாகனங்களில் சிரமமின்றியும், போக்குவரத்து நெரிசலின்றியும், பாதுகாப்பாக வந்து செல்லும் வகையில், சில வழிப்பாதைகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு உள்ளது.
பக்தர்கள் தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு தூத்துக்குடி சாலையில் 5 வாகன நிறுத்துமிடங்களும், நெல்லை சாலையில் 6 வாகன நிறுத்துமிடங்களும், பரமன்குறிச்சி சாலையில் 4 வாகன நிறுத்துமிடங்களும் மற்றும் திருச்செந்தூர் டி.பி. சாலையில் ஒரு வாகன நிறுத்துமிடமும் சேர்த்து மொத்தம் 16 வாகன நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஜெயித்தது தூத்துக்குடியில், நன்றி சொல்வது திருச்செந்தூரிலா.. ஸ்ரீநாத்தை கிண்டல் செய்யும் கட்சிகள் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications