அறுவை சிகிச்சை முடிந்தது.. அப்போலோவிலிருந்து வீடு திரும்பினார் கமல்ஹாசன்!
சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று வீடு திரும்பினார்.
சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று வீடு திரும்பினார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தற்போது உள்ளாட்சி தேர்தலில் கவனம் செலுத்த துவங்கி உள்ளது. லோக்சபா தேர்தலில் சிறப்பாக போட்டியிட்டதன் மூலம் அந்த கட்சி உற்சாகமாக இருக்கிறது. அதேபோல் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சினிமா, அரசியல் என்று மிகவும் பிசியாக இருக்கிறார்.

மேலும் டிவி நிகழ்ச்சிகளிலும் இப்போது அடிக்கடி கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசி வருகிறார். கடைசியாக அவர் சென்னையில் தனியார் தொலைக்காட்சிக்காக கமல் 60 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதன்பின் அவர் அறுவை சிகிச்சை காரணமாக மருத்துவமனையில் ஓய்வு எடுத்துக் கொண்டு உள்ளார். அவருக்கு காலில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டின் போது கமலுக்கு ஏற்பட்ட விபத்தில் காலில் பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் கால் எலும்பு முறிந்து சிறிய இடைவெளி உருவானது. இது குணமாகும்வரை அங்கு டைட்டேனியம் கம்பி பொருத்தப்பட்டது. பின் கமல்ஹாசன் அதோடுதான் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் அவரின் உடைந்த எலும்பு வளர்ந்து, தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.
இதனால் அவருக்கு இந்த கம்பியை அகற்றுவதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்தஅவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சிகிச்சை அவருக்கு வெற்றிகரமாக முடிந்தது. இதையடுத்து தற்போது மருத்துவ ஓய்வு முடிந்து அவர் வீடு திரும்பினார். ஆழ்வார் பேட்டையில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு அவர் திரும்பினார்.
இன்னும் சில நாட்களில் கட்சி பணிகளை அவர் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications