கோவையில் ஆச்சரியம்.. டக்னு விழுந்த திமுக "முட்டுக்கட்டை".. குழம்பிய ஆண்டவர் + காம்ரேடுஸ்.. பாஜக குஷி
சென்னை: கோவை தொகுதியை, மநீம கமல்ஹாசன் கேட்டுவர, சிபிஎம் அதற்கு முட்டுக்கட்டை போட்டு வருவதாக தெரிகிறது.. இதற்கு நடுவில் இன்னொரு முட்டுக்கட்டை வந்து திமுகவிலேயே குறுக்கே விழுந்துள்ளது.. என்னவாம்?
ஒவ்வொரு முறை தேர்தலின்போதும், ரஜினிகாந்த்தின் அரசியல் பேச்சு சற்று காட்டமாகவே எதிரொலிக்கும்.. எம்பி தேர்தல் நெருங்கும் சூழலில், இந்த முறையாவது, ரஜினியை சரியாக பயன்படுத்தி கொள்ள பாஜக முயலும் என்று கணிக்கப்பட்டு வருகிறது.

இப்போது தேர்தல் பரபரப்புகளும் ஆரம்பமாகிவிட்டன.. திமுக கூட்டணி மட்டும்தான் பலமாகவும், உறுதியாகவும் கூட்டணியை வைத்துள்ளது.. இதில், கமல்ஹாசன் இணைவதாக உள்ளது.. ஆனால், இதுவரை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை வெளிப்படையாக இல்லாவிட்டாலும், மறைமுகமாக நடந்து வருவதாக தெரிகிறது. அதேசமயம், மநீம கூட்டணி உறுதியாகாமலும் உள்ளது.
பரபரப்புகள்: இந்த முறையும் கோவை தொகுதியை குறிவைத்துள்ளார் கமல்ஹாசன்.. ஆனால், இந்த தொகுதி கம்யூனிஸ்ட்கள் வசம் இருப்பதால், இழுபறி நீடிக்கிறது.. உங்களுக்குள் பேசி தீர்த்து கொள்ளுங்கள் என்று கம்யூனிஸ்ட்களிடமும், கமலிடமும், திமுக மேலிடம் சொல்லிவிட்டதாம்.
கமலுக்கு கோவையை ஒதுக்க வேண்டும் என்று உதயநிதி விரும்பினாலும், கோவையை கூட்டணிக்கு ஒதுக்கக்கூடாது என்பதில் திமுக நிர்வாகிகள் அழுத்தம் தந்து கொண்டிருக்கிறார்களாம்.. கடந்த சட்டசபை தேர்தலில் கோவையின் 10 தொகுதிகளிலும் திமுக மண்ணை கவ்வியதை ஜீரணிக்க முடியவில்லையாம்.. குறிப்பாக, கடந்த தேர்தலில் அதிமுக மீதான அதிருப்தி ஓட்டுகளை கமல் தரப்பு பிரித்துவிட்டதால், கோவையில் திமுகவால் வெற்றி பெற முடியவில்லை.
திமுக தொண்டர்கள்: திமுக தோல்விக்கு காரணமாக இருந்தவர் கமல்.. அவருக்கு இப்போது கோவையை ஒதுக்கி, அவருக்காக திமுக தொண்டர்களை உழைக்க சொல்லி கட்டாயப்படுத்துவது சரியா? என்று கேட்கிறார்களாம் திமுகவின் மூத்த நிர்வாகிகள்.
எனவே, திமுகவுக்கே கோவையை ஒதுக்க வேண்டும் அல்லது உதயசூரியன் சின்னத்தில் யார் வேண்டுமானாலும் போட்டியிடட்டும் அல்லது கம்யூனிஸ்ட்டுகளுக்கே ஒதுக்கட்டும் அல்லது காங்கிரசுக்கு ஒதுக்கும் தொகுதிகளில், உள்ஒதுக்கீடு பெற்றுக் கொள்ளட்டும் என்றெல்லாம் சொல்லி வருகிறார்களாம். மேலும், செந்தில் பாலாஜி தற்போது தொகுதியில் இல்லாத சூழலில் எந்த ரிஸ்க்கையும் எடுக்க வேண்டாம் என்கிறார்களாம்.
திமுக நிர்வாகிகள்: அதுமட்டுமல்ல, ரஜினியின் மருமகன் விசாகனை கோவை தொகுதியில் இறக்க வேண்டும் என்று திமுக நிர்வாகிகளே பரிந்துரை செய்ய துவங்கி உள்ளார்களாம்.. பல்லடம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பொன்முடியின், தம்பி மகன்தான், ரஜினியின் மருமகனான விசாகன்.. ரஜினி மகள் சவுந்தர்வின் கணவர் ஆவார்..
திமுக குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதாலும், ரஜினியின் மருமகன் என்பதாலும், இந்த முறை, விசாகனை களமிறக்கலாம் என்கிறார்கள்.. விசாகனை தேர்தலில் போட்டியிட செய்தால், ரஜினி ரசிகர்களும், இறங்கி வேலை பார்ப்பார்கள்.. என்று மூத்த நிர்வாகிகள் கணக்கு போடுகிறார்களாம்.
செந்தில் பாலாஜி: தற்சமயம் செந்தில் பாலாஜி கொங்குவில் இல்லாத சூழலில், கொங்குவில் அபரிமிதமாக வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால்தான், பரிச்சயமானவரை நிறுத்தினால் வெற்றி பெறலாம் என்று நினைக்கிறார்களாம்..
இந்த முறை ரஜினி வாய்ஸ், பாஜகவுக்கு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவிரும் சூழலில், திடுதிப்பென விசாகனை, திமுக களமிறக்கலாம் என்கிறார்கள்.
யாருக்கு ஆதரவு: ஒருவேளை நிஜமாகவே, விசாகனுக்கு சீட் தந்து கோவையில் களமிறங்க செய்தால், ரஜினி யாருக்கு ஆதரவாக வாய்ஸ் தருவார்? கோவையில் பாஜக சார்பில் போட்டியிடுபவர்கள் நிலை என்ன? அதைவிட முக்கியமாக கமல் என்ன செய்ய போகிறார்? காம்ரேட்டுகள் என்ன செய்ய போகிறார்கள்? எதுவுமே தெரியவில்லையே.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications