சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"காவி காவி".. மோடி கேட்ட ஒரே கேள்வி.. திணறிய அண்ணாமலை.. திக்குமுக்காடிய நாராயணன்.. என்னாச்சு

தமிழக பாஜக தலைவர்கள் மோடியின் அன்பான விசாரிப்பால் மனம் குளிர்ந்துள்ளனராம்

Google Oneindia Tamil News

சென்னை: பிரதமர் மோடி சென்னை வருகையால் தமிழக பாஜக தலைவர்கள் நெகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்கள்.. என்ன காரணம்?

நேற்றைய தினம் பிரதமர் மோடியை வரவேற்க கரகாட்டம், ஒயிலாட்டம் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டது.. இதற்கான நடனகலைஞர்களும், தாரை தம்பட்டம், செண்டை மேளம் என இசைக் கலைஞர்களும் குழுமியிருந்தனர்..

ஆனால், இதில், நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள், நடனக் கலைஞர்களில் பெரும்பாலோர் காவி உடை அணிந்திருந்தனர்....

விமான நிலையத்தில் கூடிய பஞ்சாயத்து! இபிஎஸ்-ஐ தட்டிக் கொடுத்த மோடி! ஓபிஎஸ் உடன் தனியே நடத்திய ஆலோசனை! விமான நிலையத்தில் கூடிய பஞ்சாயத்து! இபிஎஸ்-ஐ தட்டிக் கொடுத்த மோடி! ஓபிஎஸ் உடன் தனியே நடத்திய ஆலோசனை!

 காவி மயம்

காவி மயம்

அதேபோல, அங்கு வந்திருந்த சிறுவர்களும் காவி துண்டு, வெள்ளை வேட்டி, கழுத்தில் ருத்ராட்சம் என்று காவிமயமாக காட்சியளித்தனர்... எல்லாவற்றிற்கும் மேலாக, சிவலிங்கம், பசு மாடு போன்ற ஓவியங்களும் இணைந்து காவிமயமாக காட்சி அளித்தது.. பிரதமர் உரையாற்றும்போது "வணக்கம்" என்று என தமிழில் உரையை தொடங்கி தமிழக மக்கள், தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் அத்தனையும் சிறப்பு வாய்ந்தது என்று பெருமிதம் தெரிவித்துர்.

 பிரதமர் மோடி

பிரதமர் மோடி

தொடர்ந்து, திராவிட மாடல் ஆட்சி குறித்த விளக்கத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுத்துரைத்தார்.. முன்னதாக உரையின் தொடக்கத்தில் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என். ரவி உள்ளிட்டோரை வரவேற்றார் முதல்வர் ஸ்டாலின். விழா சிறப்பாக முடிந்தாலும், பிரதமரின் வருகை, பாஜக தலைவர்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும், இன்னொரு பக்கம் இந்த தலைவர்கள் படுகுஷியில் உள்ளனராம்...

 ஹவ் ஆர் யூ

ஹவ் ஆர் யூ

காரணம், சென்னை வந்திறங்கியதுமே, மாநில தலைவர் அண்ணாமலையை, தன் தோளோடு கட்டி அணைத்து, "அண்ணாமலை ஹவ் ஆர் யூ?" என்று பாசத்துடன் விசாரித்துள்ளார் பிரதமர் மோடி.. ஐஎன்எஸ் இந்திய கடற்படை தளத்திற்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய பிரதமரை தமிழக பாஜக பொறுப்பாளர் சிடி ரவி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மாநில பொதுச் செயலர்கள் என்று மொத்தம் 12 பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர். அப்போதுதான், அண்ணாமலை அருகில் வந்த மோடி, அவரை தன் தோளோடு கட்டி அணைத்து, "அண்ணாமலை ஹவ் ஆர் யூ?" வாஞ்சையுடன் கேட்டுள்ளார்..

 நெகிழ்ச்சி - மகிழ்ச்சி

நெகிழ்ச்சி - மகிழ்ச்சி

அதற்கு அண்ணாமலை பதில் அளித்து, தன் மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துள்ளார்.. அதேபோல, நேரு உள் விளையாட்டரங்கில், விழா முடிந்து பிரதமர் புறப்பட்டபோது, பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம், 'எல்லாரும் நல்லா இருக்கீங்களா? ஆமா, ஏன் உங்கள் தலைமுடி வெள்ளை கலராக மாறிவிட்டது என்று டக்கென கேட்கவும், பிரதமரின் அந்த அன்பில் நாராயணன் திக்குமுக்காடி போய்விட்டாராம்.. இதற்கு என்ன பதில் சொல்வதென தெரியாமல் சிரித்தே சமாளித்துள்ளார்.. ஆக மொத்தம் பிரதமரின் வருகையால், தமிழக தலைவர்களின் மனம் குளிர்ந்து போய் உள்ளது.

English summary
surprise modi question and tamilnadu BJP leaders happy with PM's kind inquiry தமிழக பாஜக தலைவர்கள் மோடியின் அன்பான விசாரிப்பால் மனம் குளிர்ந்துள்ளனராம்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X