இல்லீங்களே.. யாரு சீமானா? ஒரே செகண்டுல பதறிய ஈவிகேஎஸ்.. "இருக்கும், போகும்".. ஆமா, விஜயகாந்த் எங்கே
நாம் தமிழர் கட்சி இதுவரை நடந்த தேர்தல்களில் ஒன்றில்கூட டெபாசிட் வாங்கவில்லை
சென்னை: நாம் தமிழர் கட்சி குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.. இதையடுத்து, தேமுதிக, மற்றும் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் கடுப்பாகி வருகிறார்கள்.
நடந்து முடிந்த இடைத்தேர்தலில், ஈவிகேஎஸ் இளங்கோவன் அபார வெற்றி பெற்றிருந்தார்.. இதற்கு முன்பு இப்படி ஒரு வெற்றியை ஈரோடு காங்கிரஸ் வேட்பாளர்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை.. மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடியுள்ளார்..
அதேபோல, அதிமுக 40 ஆயிரம் வாக்குகளை பெற்று, 2வது இடத்தை பிடித்தது.. டெபாசிட்டையும் போராடி தக்கவைத்தது.. நாம் தமிழர் கட்சி& தேமுதிக இரண்டுமே டெபாசிட்டை இழந்தன.

பல்ப் சீமான்
நாம் தமிழர் கட்சி 10,627 வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தை தக்க வைத்திருந்தது.. இந்த ஓட்டுக்களை கேள்விப்பட்டு ஈவிகேஎஸ் இளங்கோவனே ஆச்சரியப்பட்டாராம்.. ஓட்டு எண்ணிக்கை முடிந்து ரிசல்ட் அறிவிக்கப்பட்டதுமே, ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது, நாம் தமிழர் வாக்குகள் பற்றி அவரிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.. அதற்கு அவர், "நாம் தமிழர் என்ற கட்சியே இல்லை ஆதி காலத்தில் தொடங்கப்பட்ட கட்சியை பற்றி இப்போது கேட்கிறீர்களே?" என்கிறார். அப்போது செய்தியாளர்கள், "10,800 வாக்குகளை பெற்று அவர்கள் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்கள்" என்றனர்..

சீமான் தம்பிகள்
அதற்கு இளங்கோவன், "இல்லியே, அது போன தேர்தல் ஆச்சே, 6 ஆயிரம் வாக்குன்னுதானே சொல்றாங்க" என்றார். பிறகு, உடனே அங்கிருந்த கட்சி நிர்வாகிகளிடம் விவரம் கேட்டறிந்து, "ஓ.. இப்போவா? இந்த தேர்தல்லயா பத்தாயிரம்..?" என்று வியப்பாக கேட்டாராம்.. இந்த வீடியோவை சீமானின் தம்பிகளே அப்போது சோஷியல் மீடியாவில் பகிர்ந்திருந்தனர்.. இந்நிலையில், சமீபத்தில் ஒரு பிரபல சேனலுக்கு இளங்கோவன் ஒரு ஸ்பெஷல் பேட்டி தந்துள்ளார்.

3000 + 2000
அந்த பேட்டியில், இடைத்தேர்தல் வெற்றி குறித்து கேட்டதுடன், சீமான் 3வது இடத்தை தக்க வைத்தது உட்பட பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்போது நாம் தமிழர் கட்சியை விமர்சித்த இளங்கோவன், போகிற போக்கில் தேமுதிகவையும், சரமாரியாக விமர்சித்து பேசினார். இளங்கோவன் பேசும்போது, "தேனியில் நான் தோற்றுப்போக, எத்தனையோ காரணங்களை கூறினாலும், தோல்வி, தோல்விதான். அதை நான் ஏற்றுக் கொண்டேன். அதுக்காக, அவங்க ஓட்டுக்கு 2 ஆயிரம் தந்தாங்க, 3 ஆயிரம் தந்தாங்க என்றெல்லாம் நான் சொல்ல போவதில்லை. ஊரே ஜெயிக்கும்போது, நான் தோற்றது என்பது, எனக்கு அப்போது ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம்..

சோறு பதம்
நான் தோல்வியில் இருந்து வெளியே வருவதற்கு 2 வருடங்கள் ஆயிற்று.. நான் தோல்வியை ஏற்றுக்கொண்டதுபோலவே, மற்றவர்களும் தற்போது தோல்வியை ஏற்றுக் கொள்ள வேண்டுமே ஒழிய, பணநாயகம் ஜெயிச்சது, பணம் வென்றது, இப்படியெல்லாம் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த தேர்தல் முடிவுதான் எம்பி தேர்தலிலும் எதிரொலிக்க போகிறது.. இதை நான் பலமுறை சொல்லிவிட்டேன்.. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.. தமிழக மக்கள் எண்ணம் என்பது திமுக தலைவர் மீது ஈர்ப்பு கொண்டதாகவே உள்ளது..

விஜய்காந்த்
நாம் தமிழர் ஓட்டு வங்கியை பிரதானமாக சொல்கிறீர்கள்.. இல்லியே... அவங்க இந்த முறை 1000 ஓட்டுக்கள் குறைவாக வாங்கியிருக்காங்களே.. ஒரு லட்சம் வாக்குகளில், 1000 ஓட்டுக்கள் குறைந்தால் பரவாயில்லை.. 10 ஆயிரத்தில் 1000 ஆயிரம் ஓட்டுக்கள் குறைவு என்பது பெரிய வாக்கு வங்கி இழப்புதானே.. இதுவே மிகப்பெரிய வித்தியாசம் தானே.. ஆனால், எனக்கு ஒன்னுமே புரியல.. என்னை பொறுத்தவரை, என் நினைவுக்கு எட்டியவரை, நாம் தமிழர் என்பது சி.பொ ஆதித்தனார் கட்சி.. அந்த கட்சி அப்போதே மறைந்து, திராவிட முன்னேற்ற கழகத்தில் ஐக்கியமாகிவிட்ட கட்சி..

விஜயகாந்த்
ஆனால், இன்னைக்கு திராவிடர் கழகம் பார்த்தால், 10, 15 திராவிடர் கழகங்கள் இருக்கின்றன.. அதுமாதிரி இதையெல்லாம் நாம் தமிழர் என்று ஏற்றுக் கொள்ள முடியாது.. அவங்க 7 சதவீதம் ஓட்டுவங்கி வைத்திருப்பது என்பது பெரிய விஷயமா? விஜயகாந்த் அன்னைக்கு 8 சதவீத வாக்கு வங்கி பெற்றபோது, எவ்ளோ பெரிய விஷயமா பேசினாங்க? இப்போ விஜயகாந்த் எவ்ளோ வாக்கு வங்கி வெச்சிருக்கார்? அப்படி இப்படின்னு சொன்னாங்க, ஆட்சியை பிடிக்க போறோம்னு சொன்னாங்க. சட்டமன்றத்தில நாக்கை துருத்தினாங்க.. இப்போ என்ன ஆச்சு அந்த கட்சி? அதனால், இவையெல்லாம் நிரந்தரமான கட்சி கிடையாது.. இருக்கும், போகும் அவ்வளவுதான்" என்றார்.

செல்வப்பெருந்தகை
இந்த முறை இடைத்தேர்தல் பிரச்சாரம் துவங்கும் சமயத்தில், மறைந்த ஈவேரா திருமகன் குறித்து சீமான் பேசியிருந்தார்.. 'நாம் தமிழர் கட்சியில் இணைய என்னை திருமகன் ஈவெரா சந்தித்தார்' என்று சீமான் புது தகவலை செய்தியாளர்களிடம் சொல்லவும், இதற்கு உடனடியாக மூத்த தலைவர் செல்வப்பெருந்தகை மறுப்பு கூறியிருந்தார்.. ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருந்தார்.. அதில், சீமானுக்கு எப்பவுமே இதே வேலையாகிவிட்டது. இறந்து போனவர்கள் பற்றியும், அவர்கள் திரும்பி வரமாட்டார்கள் என்பதனால் இதுபோன்ற கருத்துக்களை கூறிவருவதே வாடிக்கையாகிவிட்டது. இதுதான் இவரின் லட்சணம் என்று காட்டமாக பதிலடி தந்திருந்தார். இதற்கு பிறகு இளங்கோவனும் சீமான் பற்றி காட்டமாகவே செய்தியாளர்களிடம் விமர்சித்து வந்தார்..

இளையராஜா
சீமான் போன்றவர்கள் சொல்லும் கருத்துக்கெல்லாம் நான் முக்கியத்துவம் தருவதில்லை.என்னைப் பொறுத்தவரை அதிமுவில் அவர்கள் பிரிந்து இருந்தாலும் சரி, இணைந்து இருந்தாலும் சரி ஒன்றுதான். சீமான் மீது தனிப்பட்ட முறையில் வெறுப்பு இல்லை என்றாலும் 3 மாதங்களுக்கு ஒரு முறை அவர் நிலைப்பாட்டை மாற்றுகிறார்.. நிலையற்று பேசுவதால் சீமான் பேச்சையெல்லாம் யாரும் பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியிருந்தார். தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு சீமானும் பதிலடி தந்து வருகிறார். 4 நாட்களுக்கு முன்பு சீமான் பேசும்போது, இளையராஜாவை பொதுமேடையில் அவதூறாக பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று கேட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications