"பல்ப்" வாங்கின சீமான்.. ஒரே செகண்டுல பதறின ஈவிகேஎஸ்.. அதைவிடுங்க.. "சிங்கிள் சிங்கம்" லிஸ்ட் பாருங்க
நாம் தமிழர் கட்சி இதுவரை நடந்த தேர்தல்களில் ஒன்றில்கூட டெபாசிட் வாங்கவில்லை
சென்னை: இதுவரை போட்டியிட்ட எந்த தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி டெபாசிட்கூட வாங்கவில்லை.. அதிர்ச்சி தோல்வியை நேற்றைய தினமும் சந்தித்துள்ள நிலையில், சீமானின் தம்பிகள் வழக்கம்போல் கட்சிப்பணிகளில் இறங்க ஆயத்தமாகி வருகிறார்களாம்.
கடந்த 2019 எம்பி தேர்தலின்போதே, 8 சதவிகிதம் வாக்குகளை பெற்று தேர்தல் ஆணையத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாற வேண்டும் என்பது நாம் தமிழர் கட்சியின் எண்ணமாக இருந்தது. ஆனால்.. அவர்களால் வெறும் 4 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.
ஏனென்றால் கமல் தனியாக கட்சி ஆரம்பித்து அப்போதுதான் முதல் தேர்தலையும் சந்தித்திருந்தார்.. அவரும் 4 சதவிகித வாக்குகளை பெற்றிருந்தார்.. அதனால்தான், நாம் தமிழருக்கு வந்திருக்க வேண்டிய ஓட்டுக்கள் கமலுக்கு சென்றது..

வேட்டையாடு விளையாடு
அதேபோல, சட்டமன்ற கமலுடன் கூட்டணி வைப்பது போல ஒரு பேச்சு எழுந்தது.. அப்படி கூட்டணி வைத்தால், அதிமுக, திமுகவின் அதிருப்தி ஓட்டுக்களுடன், இவர்கள் 2 பேரின் வாக்குகளும் சேர்ந்து ஓட்டு சதவீதத்தை அதிகரிக்கும் என்றும் நம்பப்பட்டது.. ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை.. "சிங்கம் தனியாகத்தான் வேட்டையாடும்.. நாய், ஓநாய், பன்றிதான் கூட்டமாக வேட்டையாடும்" என்று செய்தியாளர்களிடம் சொல்லிவிட்டு போனார் சீமான். சொன்னது போலவே தனித்தும் களமிறங்கினார்... இது அப்போதே பல தரப்பினரால் கவனிக்கப்பட்டது... ஒவ்வொரு முறையும் யாருக்கும் பணியாமல், பயப்படாமல், மிகப்பெரிய கட்சிகளுடன் மோதி வரும் சீமானின் தைரியம் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது..

6.5%
கடந்த முறை எம்பி தேர்தலில், பாஜக எதிர்ப்பு + அதிமுக அதிருப்தி ஓட்டுக்களை சீமான் பெற்றதை மறுக்கவோ, மறக்கவோ முடியாது.. தமிழக அரசியலில் மூன்றாவது இடத்துக்கு போட்டியிட்ட கட்சிகளுள் ஒன்றாக நாம் தமிழர் கட்சி முன்னேறியது.. இதுவரை போட்டியிட்ட தொகுதிகளில் எல்லாமே தோல்வியை தழுவினாலும், குறிப்பிடத்தக்க தொகுதிகளில் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் அளவுக்கு அக்கட்சி முன்னேறி உள்ளதை நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். கூட்டணி இல்லாமல் அனைத்து தொகுதிகளிலும் தனித்தே போட்டியிட்டு ஏறக்குறைய 6.5%-க்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருந்ததையும் மறுக்க முடியாது..

B TEAM சீமான்
இதற்கெல்லாம் காரணம், தன்னுடைய கட்சியின் வேட்பாளர் தேர்வை கூட, மிகுந்த கணக்குகளுடனேயே சீமான் கையாண்ட விதமும்தான்.. திமுக, அதிமுகவின் வாக்குகளை பிரிக்கக்கூடிய அளவுக்கு நாம் தமிழர் கட்சி, சிறப்பாக களமாடி வருகிறது.. சீமானை பொறுத்தவரை, "பாஜகவின் பி டீம்" என்ற கலர், தொடர்ந்து இவர்மீது பரவலாக பூசப்பட்டு வரும் நிலையில், தன்னுடைய எல்லா மேடைகளிலும் பாஜகவையும், ஆர்எஸ்எஸ்ஸையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.. பல சமயம் பிரதமர் மோடியை போல் மிமிக்ரியும் செய்து கிண்டலடித்துவிடுகிறார். அதுமட்டுமல்ல, காங்கிரஸ் + பாஜக, இவங்க 2 பேருமே ஒன்றுதான் என்றும் சொல்லி அவர்களின் ஆட்சியை விமர்சித்து வருகிறார்.

காவி நிறம்
தமிழ் தேசியத்தை முன்வைப்பது ஒருபக்கம், திராவிட அரசியல் மீதான கடுமையான விமர்சனத்தை முன்வைப்பது மறுபக்கம் என இரு துருவங்களில் சீமானின் அரசியல் விடாமல் பயணப்பட்டு வரும்நிலையில், ஈரோடு இடைத்தேர்தலிலும் களம் இறங்கினார்.. ஆனால், எப்போதுமே சாதி அரசியலுக்கு முக்கியத்துவம் தராத சீமான், இந்த முறை, சாதி ஓட்டுக்களை கணக்கு செய்தே, வேட்பாளர் மேனகாவை அறிவித்ததை பலரும் கவனிக்காமல் இல்லை.. மேலும், தன்னுடைய பிரச்சாரத்தில் சிறுபான்மையினர் ஓட்டுக்களை குறி வைத்தே அதிகமாக பேசியிருந்ததும் கட்சிகளை திரும்பி பார்க்க வைத்தது.

பல்ப் எரிஞ்சதா
"ஒவ்வொரு கிறிஸ்தவர், இஸ்லாமியர் வீட்டுக்குள்ளேயும் போயி, எப்ப பார்த்தாலும், "சீமானுக்கு போட்றாதே, பிஜேபி வந்துடும், சீமானுக்கு போட்றாதே, பிஜேபி வந்துடும்"-ன்னு ஒவ்வொரு முறையும் இவங்க சொல்லிட்டே இருக்காங்க.. பிஜேபிக்கு போடாதே என்று தைரியமாக சொல்ல முடியாத நீங்கள், சீமானுக்கு போட்டால் பிஜேபி வந்துடும் என்று சொல்வது எவ்வளவு பைத்தியக்காரத்தனம்? எனக்கு ஓட்டுப்போட்டால், நான்தானே வருவேன்? என் வீட்டில் ஸ்விட்ச் போட்டால், என் வீட்டிலதானே விளக்கு எரியும்? உன் வீட்லயா எரியும்? ஒரு குடையை உங்களால கருப்பாக மோடிக்கு முன்னாடி பிடிக்க முடிந்ததா? எதிர்க்கட்சியாக இருந்தால் "கோ பேக்"? ஆளும் கட்சியாக இருந்தால் "வெல்கம்"??" என்று திமுக மீது பல கேள்விகளை எழுப்பியிருந்தார்.

ஆச்சரிய ஈவிகேஎஸ்
இதனால் சிறுபான்மையினர் வாக்குகளை பெற போவது சீமானா? எடப்பாடியா? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.. திமுகவின் அதிருப்தி ஓட்டுக்களை பெற போவது சீமானா? எடப்பாடியா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது.. அந்தவகையில், நேற்றைய தினம் ரிசல்ட் வெளியானதில், 10,627 வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தை தக்க வைத்துள்ளார். இந்த ஓட்டுக்களை கேள்விப்பட்டு ஈவிகேஎஸ் இளங்கோவனே ஆச்சரியப்பட்டாராம்.. நேற்றிரவு ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தபோது, நாம் தமிழர் வாக்குகள் பற்றி அவரிடம் செய்தியாளர்கள் கேட்டனர்..

தம்பிகள் சீமான்
அதற்கு அவர், "நாம் தமிழர் என்ற கட்சியே இல்லை ஆதி காலத்தில் தொடங்கப்பட்ட கட்சியை பற்றி இப்போது கேட்கிறீர்களே?" என்கிறார். அப்போது செய்தியாளர்கள், "10,800 வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறார்கள்" என்றதுமே, "இல்லியே, அது போன தேர்தல் ஆச்சே, 6 ஆயிரம் வாக்குன்னுதானே சொல்றாங்க" என்றார் இளங்கோவன். பிறகு, கட்சி நிர்வாகிகளிடம் கேட்டறிந்து, இப்போவா? இந்த தேர்தல்லயா பத்தாயிரம்..? என்று வியப்பாக கேட்டாராம்.. இந்த வீடியோவை சீமானின் தம்பிகளே சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள். அதேசமயம், தமிழகத்தில் இதுவரை நடந்த எந்த தேர்தலிலுமே நாம் தமிழர் கட்சி வெற்றி பெறாமல் போனதன் லிஸ்ட் வெளியாகி உள்ளது.

கோமதி - மேனகா
கடந்த 2010ல் மே மாதம் 18ம் தேதி தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சி, 2016-ல் இருந்து நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு வருகிறது. 2016ல், தனித்து போட்டியிட்டு மொத்தமாக 4,58,104 வாக்குகள் (1.07 சதவீதம்) பெற்று 9வது இடத்தை பிடித்தது. 2017-ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 3,802 வாக்குகள் பெற்று 4வது இடத்தை பிடித்தது. 2019-ல் எம்பி தேர்தலில் தனித்து போட்டியிட்டு 2.63 சதவீத வாக்குகள் பெற்று பின்தங்கியது. கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி மொத்தமாக 31,08,906 வாக்குகள் (6.72 சதவீதம்) பெற்று 3வது இடத்தை பிடித்தது. கடந்த 2021ம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கோமதி 11,629 வாக்குகள் பெற்று 3வது இடத்தை பிடித்தார்.

சிங்கிள் சிங்கம்
இப்போது இடைத்தேர்தலிலும், 10,804 வாக்குகள் பெற்று 3வது இடத்தைதான் பிடித்தது. அதாவது, 3வது அல்லது 4வது இடத்தை மட்டுமே பிடிக்க முடியும் நிலையில், குறைந்தபட்சம் 2வது இடத்தைகூட அக்கட்சியால் பிடிக்க முடியவில்லை.. அதுமட்டுமல்ல, இதுவரை நடந்த தேர்தல்களில் ஒன்றில் கூட டெபாசிட் வாங்காததால் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் சோர்வடைந்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.. ஒவ்வொரு முறையும் தனித்து போட்டியிட்டு, மலைபோன்ற கட்சிகளுடன் மோதி வரும் சீமானின் துணிச்சலும், தைரியமும் தொடர்ந்து பேசப்பட்டு வரும்நிலையில், வரும் தேர்தலில் கூட்டணிக்குள் நுழைவாரா சீமான்? அல்லது வழக்கம்போல், "சிங்கம் சிங்கிளாகவே" களமிறங்க போகிறதா? தெரியவில்லை.. பார்ப்போம்..!!
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications