நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை வீட்டில் இருந்தே பாதுகாப்பாக கண்டு ரசிக்க சில ஐடியாக்கள்
முழு ஊரடங்கு காரணமாக கிரகணத்தின் போது கிரகணத்தை பார்த்து ரசிக்க சென்னை பிர்லா கோளரங்கத்தில் தகுந்த ஏற்பாடுகள் செய்யவில்லை, பொதுமக்கள் தங்களுடைய வீடுகளில் இருந்தே இந்த கிரகணத்தை
சென்னை: சூரிய கிரகணமோ, சந்திர கிரகணமோ நிகழும் போது மக்கள் அதனை கண்டு ரசிக்க சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் ஏற்பாடுகள் செய்யப்படும். இந்த ஆண்டு நாளை மறுநாள் சூரிய கிரகணம் நிகழ உள்ள நிலையில் முழு ஊராடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பிர்லா கோளரங்கத்திற்கு மக்கள் செல்ல முடியாது என்பதால் வீட்டிருந்தே நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை பாதுகாப்பாக கண்டு ரசிக்க கோளரங்க இயக்குநர் சில ஐடியாக்களை கூறியுள்ளார்.
சூரிய கிரகணம் உலகில் முதலாவதாக 9.15.58 மணிக்கு தொடங்குகிறது. முழு கிரகணம் காலை 10.17.48 மணிக்கு தொடங்குகிறது. உச்சக்கட்ட கிரகணம் நண்பகல் 12.10.04 மணிக்கு நிகழ்கிறது. சில பகுதியில் கிரகணம் முடியும் நேரம் மதியம் 14.02.17 மணிக்கு தென்படும். கடைசியாக கிரகணம் முடியும் நேரம் 15.05.01 மணிக்கு முடிவடையும்.
21ஆம் தேதி நிகழும் இந்த கிரகணம் சென்னையில் 10.22 மணி முதல் 11.58 மணி வரை தெரியும். வெறும் கண்களாலோ, பைனாகுலர் மூலமாகவோ இதனை பார்க்கக்கூடாது.

சூரியனின் பிம்பத்தை பாருங்க
முழு ஊரடங்கு காரணமாக கிரகணத்தின் போது கிரகணத்தை பார்த்து ரசிக்க பிர்லா கோளரங்கத்தில் தகுந்த ஏற்பாடுகள் செய்யவில்லை, பொதுமக்கள் தங்களுடைய வீடுகளில் இருந்தே இந்த கிரகணத்தை பார்ப்பதற்கு சில ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும். ஒரு வெள்ளை அட்டையில் சிறிய அளவில் ஒரு சென்டி மீட்டர் விட்டம் கொண்ட ஒரு சிறிய துளையிட்டு கீழே தரையில் வைத்து வெண்ணிற ஆடையை வைத்து, துளையிட்ட அட்டையினை சற்று உயர்த்திப் பிடித்தால் சூரியனுடைய பிம்பம் கீழே உள்ள அட்டையில் விழுவதை பார்க்கலாம்.

அட்டையில் சூரியனின் பிம்பம்
கிரகணம் நிகழும் பொழுது கிரகணத்தின் வடிவத்திற்கு ஏற்ப நாம் அந்த இமேஜில் இருந்து இந்த கிரகணம் மாறுவதை நம்மால் பார்க்க முடியும். கண்ணாடியில் ஒரு சென்டி மீட்டர் விட்டம் கொண்ட துளையிட்ட ஒரு அட்டையை ஒட்டி சூரியனுடைய பிம்பத்தை அதில் பிரதிபலிக்கச் செய்து ஒரு இருண்ட அறைக்குள் சுவற்றில் அந்த சூரியனுடைய பிம்பத்தை விழ செய்யலாம் .

திரையில் சூரியன் பிம்பம்
வெல்டர்ஸ் கிளாஸ் மூலம் சூரியனை சில விநாடி நேரங்கள் பார்க்கலாம், அங்கீகரிக்கப்பட்ட சூரிய ஒளி வடிகட்டி கண்ணாடிகள் இருந்தால் அதனைக் கொண்டும் சூரியனே பார்க்கலாம் .பைனாகுலர் அல்லது தொலை நோக்கியை பயன்படுத்தி ஒரு வெண் திரையில் பிம்பத்தை விழ வைத்து பார்க்க வேண்டும்.

பாதுகாப்பாக கிரகணத்தை ரசிங்க
புற ஊதாக் கதிர்கள் விழித்திரை செல்களை பாதிக்கும் என்பதால் வெறும் கண்களால் பார்க்கக் கூடாது, சூரிய கிரகணத்தை பார்க்க சிறப்பு கண்ணாடிகள் பயன்படுத்த வேண்டும். எக்காரணத்தை கொண்டும் வெறும் கண்ணால் பார்க்க கூடாது, இந்த செயல்பாடுகளுக்கு குழந்தைகளுக்கு பெரியவர்கள் வழிகாட்டியாக இருந்து குழந்தைகளை தொலைநோக்கி பைனாகுலர் ஆகியவற்றைப் பயன்படுத்தாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். 2031ம் ஆண்டில் தேனியில் முழு சூரிய கிரகணம் அதிகளவில் தெரியும் என்றும் கோளரங்க இயக்குநர் கூறியுள்ளார்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications