இந்த "மந்திரம்" ஒலிக்கட்டும்.. எஸ்.வி. சேகர் போட்ட திடீர் ட்வீட்.. போய் சேர வேண்டியதுதான்.. பகீரடி!
வைரசுக்கு எஸ்வி சேகர் தீர்வு சொல்லி ட்வீட் போட்டுள்ளார்
சென்னை: "அதர்வண வேதத்தில் உள்ள "கிருமி சம்ஹார சூக்தம்" அவசியம் கேளுங்கள்.. இந்த மந்திர சப்தம் உங்கள் வீட்டில் ஒலிக்கட்டும்" என்று கொரோனா வைரஸ் ஒழிப்பு குறித்து எஸ்வி சேகர் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார். "அமெரிக்கா காரனே அண்டர்வார காணம்னு ஓட்ரான்.. அதர்வண வேதமாமே.. கூட்டமா போய் சேர வேண்டியதுதான்" என்று ட்டிவிட்டர்வாசிகள் கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் இதற்கான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர்.. 21 நாட்களுககு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தொற்று பரவாமல் இருக்க சமூகவிலகலை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.. தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்பதே இந்த வைரஸுக்கு ஒரே தீர்வு என்ற நிலை வந்துள்ளது.

வைரஸ்
இன்னும் யாராலும் மருந்து கண்டுபிடிக்கப்பட முடியவில்லை.. தொடர்ந்து விஞ்ஞானிகள் பாடுபட்டு வருகிறார்கள்.. மருந்து கண்டுபிடித்தாலும் குறைந்தது மாதகணக்கு, வருடக்கணக்கு என்ற தகவல்களும் கிடைக்கின்றன. பெரிய பெரிய வளர்ந்த நாடுகளே வைரஸை கண்டு நடுங்கி கொண்டுள்ளனர். இந்நிலையில் பாஜகவின் திருப்பதி நாராயணனிடம் ஒருவர் சந்தேகம் கேட்டுள்ளார்.

அதர்வண வேதம்
"எல்லா ஞானங்களும் நமது வேத சாஸ்திரங்களில் இருக்கிறது என்போரே, கொரோனா ஒழிப்பு பற்றி அதில் இருப்பதை சொல்ல கூடாதோ?" என்று கேட்கவும் அதற்கு நாராயணன் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், "வேதம் படியுங்கள். அப்படியாவது நல்ல புத்தி வரட்டும்.அப்துல் கலாம் அவர்கள் குறிப்பிட்ட அதர்வண வேதத்தை படியுங்கள்" என்று பதில் தந்துள்ளார்.

எஸ்வி சேகர்
இந்த ட்வீட்டைதான் எஸ்வி சேகர் ஷேர் செய்து ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், "அதர்வண வேதத்தில் உள்ள கிருமி சம்ஹார சூக்தம் அவசியம் கேளுங்கள்.. இந்த மந்திர சப்தம் உங்கள் வீட்டில் ஒலிக்கட்டும்" என்று ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார். அத்துடன் மந்திரம் முழங்கும் ஒரு வீடியோவையும் இணைத்துள்ளார். உலக நாடுகளே திணறி வரும் நிலையில், எஸ்.சேகர் தெரிவித்துள்ள இந்த மந்திர ட்வீட்டுக்கு ஏராளமானோர் கமெண்ட்கள் கூறியுள்ளனர்.
|
அமெரிக்கா
"கிருமிக்கு காது கேட்குமா?"... அமெரிக்கா காரனே அண்டர்வார காணம்னு ஓட்ரான்.. அதர்வண வேதமாமே" என்றும், பதிவிட்டுள்ளனர். மேலும் சிலர், "கொரானாவுக்கு வேதம்லாம் தெரியாது கூட்டமா வேதம் சொன்னா கூட்டமா போகவேண்டியதுதான்" என்றும், "அந்த மந்திரத்தின் மீது அவருக்கு அபார நம்பிக்கை இருந்தால் தயவு செய்து அவரை ஒரு வாரம் சென்னை அரசு மருத்துவமனையில் தங்கி இருக்க சொல்லுங்கள். நோயெல்லாம் பறந்து போய்விடும் அல்லவா" என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications