"ஊக்கை விழுங்கிவிட்டேன்.." குழந்தை பருவ நினைவுகளை பகிர்ந்து முதல்வர் மு.க ஸ்டாலின் பேச்சு!
சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதியில் மேம்பால திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் மு.கஸ்டாலின், கோடம்பாக்கம் மேம்பாலம் கட்ட கலைஞர் நினைத்தது எப்படி? என்பது குறித்து தனது குழந்தை பருவத்தில் நடைபெற்ற சம்பவத்தை நினைவுகூர்ந்து பேசினார்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் கட்டப்பட்டுள்ள செங்கை சிவம் புதிய மேம்பாலத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் நலத்திட்டங்களை தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியதாவது:- அண்ணா, கத்திப்பாரா மேம்பாலங்கள், செம்மொழி பூங்கா, வள்ளுவர் கோட்டம் திமுக ஆட்சியில் கட்டப்பட்டன. சென்னையின் தேவைகளை தீர்த்து வைத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.

புதிய மேம்பாலம் கட்டப்பட்டதன் மூலம் பெரம்பூர், ஓட்டேரி, புளியந்தோப்பு, வேப்பேரி, புரசைவாக்கம் பகுதி மக்கள் பயன் அடைய உள்ளனர். இந்த பாலத்தில் நாள்தோறும் சராசரியாக 70 ஆயிரம் வாகனங்கள் செல்லக்கூடும் என்று அதிகாரிகள் சொல்கின்றனர். எனவே இந்த வட்டார மக்களுக்கு பயனுள்ள சாலையாக இது இருக்கப் போகிறது. கருணாநிதியின் வழித்தடத்தில் திராவிட மாடல் ஆட்சி செயல்பட்டு வருகிறது.
மழைநீர் வடிகால், மெட்ரோ திட்டப் பணியால் பாதிக்கப்பட்ட சில சாலைகளை சீரமைக்க உத்தரவிட்டுள்ளேன். சென்னையில் மேம்பாலங்கள் கட்டப்பட்டது திமுக ஆட்சியில் தான். மழைநீர், மெட்ரோ திட்டப்பணிகளால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்க உத்தரவிட்டுள்ளேன். ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான காரணமாக இருப்பது உள்கட்டமைப்புதான். அந்த உள்கட்டமைப்பை சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறோம்.
பாலம் திறப்பு விழாவில் நான் கலந்து கொள்ளும் இந்த நேரத்தில் எனக்கு பசுமையாக ஒன்று நினைவுக்கு வருகிறது. இதை எப்போதும் மறக்க மாட்டேன். அது இப்பவும் மனதில் இருக்கும். அது என்னவென்றால், நான் சிறு குழந்தையாக இருந்த போது கோடம்பாக்கம் பகுதியில் குடியிருந்தோம். தலைவர் கலைஞர் திரைப்படத்திற்கு வசனம் எழுதி கொண்டு இருப்பார். பெரும்பாலும் சினிமா ஸ்டூடியோக்கள் கோடம்பாக்கம் பகுதியில் தான் அதிகம் இருக்கும்.
இப்போது இருக்கும் கோடம்பாக்கம் மேம்பாலம் அப்போது கிடையாது. ரயில்வே கேட் இருக்கும். பெரிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என யாராக இருந்தாலும் அதை கிராஸ் செய்து தான் போக வேண்டும். நான் குழந்தையாக இருந்த போது வீட்டில் சேஃப்டி பின் (ஊக்கு) திறந்த நிலையில் தரையில் கிடந்தது. கைக்குழந்தையாக இருந்த நான் தரையில் தவழ்ந்து கொண்டு இருந்த போது ஊக்கை எடுத்து விழுங்கிவிட்டேன்.
அதை எப்படியாவது எடுக்க வேண்டும் என்று வீட்டில் என்னவெல்லாமோ முயற்சிக்கிறார்கள். ஆனால், ஒன்னும் முடியவில்லை. அதன்பிறகு டாக்டரிடம் கூப்பிட்டு போக முடிவு செய்து காரில் ஏற்றிக்கொண்டு வந்தார்கள். கோடம்பாக்கம் ரயில்வே கேட்டில் வந்து நின்றுவிட்டோம். அந்த கேட் திறந்த பிறகுதான் மருத்துவமனைக்கு சென்று ஊக்கை எடுத்தார்கள். திறந்த நிலையில் ஊக்கு வந்தது. அதனால்தான் எஃக்கையே விழுங்கிவிட்டு உயிரோடு இருக்கிறான்.
அதனால், எஃகு உள்ளம் கொண்ட ஸ்டாலின் பெயரை சூட்ட வேண்டும் என்று அப்போதே கலைஞர் முடிவு செய்தார். நெஞ்சுக்கு நீதியில் கருணாநிதி இதையெல்லாம் எழுதியிருக்கிறார். எதற்காக இதை இப்போது சொல்கிறேன் என்றால் ஊக்கை விழுங்கிய குழந்தையே எடுத்துக் கொண்டு போக முடியவில்லையே.. இதனால் எத்தனை பேர் அவஸ்தை படுவார்கள். எனவே இந்த இடத்தில் ஒரு பாலம் கட்டினால் என்ன? என்று அப்போதே கலைஞர் முடிவு செய்தார். அதற்கு பிறகுத்தான் அந்த இடத்தில் பாலம் உருவானது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications