"விட்றாதீங்க".. ரூ. 1000 தரப்போறாங்களாம்.. எப்போ தெரியுமா? யாருக்கெல்லாம் கிடைக்கும்னு பாருங்க.. வாவ்
பெண்களுக்கு வழங்கப்படும் 1000 ரூபாயினை, திமுக அரசு எப்போது வழங்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது
சென்னை: மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கிவரும், திமுக அரசின் முக்கிய வாக்குறுதியான, பெண்களுக்கான 1000 ரூபாய் எப்போது கிடைக்கும்? யாருக்கெல்லாம் இந்த 1000 ரூபாய் கிடைக்கும்? என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன..
ஈரோடு இடைத்தேர்தல் தொகுதிக்கு பிரச்சாரம் செய்வதற்காக முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் சென்றிருந்தார்.. அப்போது அவர் அத்தொகுதி மக்களிடம் பேசும்போது திமுக அரசின் சாதனைகளை விளக்கி பேசினார்.
இதே இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்கு எடப்பாடி பழனிசாமி வந்திருந்தபோது, திமுக அரசின் குறைகளை எல்லாம் லிஸ்ட் போட்டு பேசினால், முதல்வர் ஸ்டாலின் சாதனைகளை லிஸ்ட் போட்டு சொன்னார்.

கண் கண்ணாடி
அப்போது, மகளிருக்கான 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் குறித்தும் பேசினார்.. "எத்தனையோ அறிவிப்புகளை நிறைவேற்றியிருக்கிறோம். கடந்த 2 ஆண்டுகால ஆட்சியில் 85 சதவிகித வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டன. எதிர்கட்சி தலைவருக்கு கண் தெரியாவிட்டால் நல்ல கண் டாக்டரை பார்த்து கண்ணுக்கு கண்ணாடி வாங்கிப்போட்டு பார்க்கட்டும். இன்னும் 3 ஆண்டு கால ஆட்சி மிச்சம் இருக்கிறது. அதுக்குள்ளே, சொன்னதையும் செய்வோம் சொல்லாததையும் செய்வோம்.

கஜானா காலி
இன்னொரு முக்கியமான வாக்குறுதி ஒன்று இருக்கிறது.. அதை நீங்கள் மறந்தாலும் நான் மறக்கமாட்டேன். அதுதான் மகளிருக்கு மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம். அதிமுக ஆட்சி காலத்தில் கஜானாவை காலி செய்து விட்டு கடன் வைத்து விட்டு போய் விட்டார்கள். அதை படிப்படியாக சரி நாங்கள் செய்து வருகிறோம்... எப்படியும், வரும் பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று உறுதியாக சொல்கிறேன்... ஏனென்றால், நான் சாதாரண ஸ்டாலின் அல்ல முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். நான் சொன்னால் அதை நிச்சயம் நிறைவேற்றுவேன்" என்று கூறியிருந்தார்.

1000 ரூபாய்
வரப்போகும் பட்ஜெட்டில் இந்த 1000 ரூபாய் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றாலும்கூட, இப்போது அதுகுறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன.. இந்த 1000 ரூபாய் உரிமைத்தொகை என்பது 2021ம் ஆண்டுக்கான தேர்தல் அறிக்கையில் திமுக தெரிவித்த முக்கிய வாக்குறுதியாகும்.. எனவே, ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜுன்3ம் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது... ஆனால், குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை என்றாலும், இது அனைத்து பெண்களுக்கும் கிடைக்குமா? இந்த உரிமைத்தொகையை வாங்க யாரெல்லாம் தகுதியானவர்கள் என்ற பல கேள்விகள் மக்களிடையே தொடர்ந்து நிலவி வருகிறது.

PHAAY
அதற்கும் ஒரு பதில் கிடைத்துள்ளது.. அதன்படி, PHH என்ற வறுமைக் கோட்டுக்குக்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும், 35 கிலோஅரிசி வாங்கும் PHAAY குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த ரூ.1000 உரிமைத் தொகை கிடைக்கும் என்கிறார்கள்.. அதேநேரத்தில் வயது வரம்பு, கணவரின் ஆண்டு வருமானமும் கணக்கிடப்பட்டு இந்த பயனர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், அரசு ஊழியர்களின் குடும்பத்துக்கு ரூ.1000 உரிமைத்தொகை கிடைக்காது என்றும் கூறப்படுகிறது. மேலும், புதுமைப்பெண் திட்டத்தில் பயனடையும் கல்லூரி பெண்களின் தாயார்களும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும் என்று கூறப்படுகிறது.

1000 ரூபாய்
இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற ரேஷன் அட்டையில் மாற்றம் ஏதும் செய்ய தேவையில்லை என்றும், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டவுடன் அவரவர்களின் வங்கிக்கணக்குக்கு நேரடியாக பணம் செலுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல, 60 வயதுக்கு மேற்பட்டோர் வாங்கும் முதியோர் உதவித்தொகையிலும் இந்த திட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் கூறப்படுகிறது.. எப்படியோ 1000 ரூபாய் விரைவில் கிடைக்க உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளியை திமுக அரசு வைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது..!!

ஸ்பீடு பணி
ஆண்டுதோறும், மார்ச் 31-க்குள் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும்.. அந்தவகையில், இந்த வருடமும் இதற்கான ஆரம்ப கட்ட பணிகளை நிதித்துறையினர் கடந்த ஜனவரியிலேயே துவங்கிவிட்டனர்.. அது சம்பந்தமான துறை அதிகாரிகளும், பட்ஜெட் தொடர்பான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டனர்.. அமைச்சரவை கூட்டத்தில் இவைகளை எல்லாம் ஆராய்ந்து இறுதி செய்யப்பட வேண்டும்.. இந்த பணி மட்டுமே எஞ்சியிருந்த நிலையில்தான், திடீரென ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. எனவே, இந்த பணிகளில் சற்று தாமதம் ஏற்பட்டது. அமைச்சர்களும் தொகுதிக்கு சென்று அங்கேயே முகாமிட்டு, தேர்தல் வேலைகளை கவனித்திருந்தனர்.

ஹேப்பி நியூஸ்
இன்றைய தினம், இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வந்துவிட்டன.. எனவே, மார்ச் 3 முதல் அதாவது நாளை முதல் பட்ஜெட் பணிகள் வேகம் எடுக்கும் என தெரிகிறது.. அத்துடன், மார்ச் 2வது வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என்றும், அந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே பெண்களுக்கான 1000 ரூபாய் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானாலும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜுன் 3ம் தேதி முதல், இந்த திட்டத்தை துவக்கி வைக்க திட்டமிட்டு வருகிறார்களாம்..!!












Click it and Unblock the Notifications