"கமலாலயத்தில்" ஸ்டாலின்.. "மிரட்டிய" கருணாநிதி.. முட்டிமோதிய முதல்வரின் நினைவலைகள்.. ஆஹா திருவாரூர்
திருவாரூர் கமலாலயம் குளத்துக்கு சென்ற முதல்வர் ஸ்டாலினின் போட்டோக்கள் ஷேர் ஆகி வருகின்றன
சென்னை: முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் கமலாலயம் குளத்துக்குள் இருக்கும் நாகநாத சுவாமி கோயிலுக்கு சென்றிருந்த நிலையில், அது தொடர்பான போட்டோக்களும், தகவல்களும் இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகின்றன... அத்துடன், ‛நடுவண்' கோயில் என்று குறிப்பிட்டு, போகிற போக்கில் சைஸாக, கோடிட்டு காட்டிய ஸ்டாலினின் ட்வீட்டும் கவனத்தை திருப்பி வருகின்றன.
திருவாரூருக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்றிருந்தார்.. அப்போது, அங்கிருக்கும் கமலாலயம் குளத்துக்குள் இருக்கும் நாகநாத சுவாமி கோயிலுக்கு சென்றார்.
பாட்டி அஞ்சுகம் அம்மையாரின் நினைவாலயத்திற்கு சென்றுவிட்டு, மறுபடியும் திருவாரூர் திரும்பிய ஸ்டாலின், வழியில் கமலாலய குளத்தை பார்த்ததுமே காரை விட்டு இறங்கிவிட்டார்..

ஜொலிஜொலிப்பு
கமலாலய குளத்தை முழுமையாக பார்வையிட்டார்... குளத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து மின்னொளியில் மெல்லிய அலைகளில் ஜொலித்த குளத்தை ரசித்தார்... அந்த கமலாலய குளத்தின் கரையில் நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தார்.. அப்போது, மூத்த தலைவர்கள் டிஆர் பாலு, பூண்டி கலைவாணன் உள்ளிட்டோரும் முதல்வருடன் இருந்தனர்.. அவர்களுடன் அமர்ந்து, கமலாலய குளம் பற்றிய பற்றிய நினைவலைகளை பகிர்ந்து கொண்டார்.. பிறகு திருவாரூர் கமலாலய குளத்தின் வடக்குக் கரையிலிருந்து படகின் மூலம் குளத்தின் நடுவில் உள்ள நடுக்குள நாகநாத சுவாமி கோயிலுக்கு சென்று பார்வையிட்டார்.

நடுவண் வார்த்தை
இதுபற்றி முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "கலைஞர் வளர்ந்த திருவாரூரில் உள்ள கமலாலயம் கடல் போலத் ‛தோற்றமளிக்கும்'. ஆனாலும் அது குளம்தான். அதன் ‛நடுவண்' கோவில் படிக்கட்டுகளை அடைவதற்கான எதிர்நீச்சலை நெஞ்சுக்கு நீதியில் விளக்கியிருப்பார் தலைவர். இன்று அந்த படிக்கட்டுகளில் அமர்ந்து மகிழ்ந்தபோது குளத்தின் அலைகளில் என் சிறு வயது நினைவுகள். என் நெஞ்சத்தில் என்றும் நினைவலைகளாக முத்தமிழறிஞர்" என்று பதிவிட்டுள்ளார்... இந்த ட்வீட்டில் "நடுவண்" என்று முதல்வர் மறக்காமல் குறிப்பிட்டதையும் உடன்பிறப்புகள் கவனிக்காமல் இல்லை.

ஐயங்கார்
இந்த கமலாலய கோயிலை பொறுத்தவரை, மறைந்த முதல்வர் கருணாநிதியின் மனதுக்கு நெருக்கமான ஒன்றாக இருந்திருக்கிறது.. திருவாரூர் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அன்றைய தினம் அரசு பள்ளியாக இருந்தபோதுதான், தன்னுடைய பள்ளி படிப்பை மறைந்த முதல்வர் கருணாநிதி அங்கு தொடங்கியிருக்கிறார்.. பள்ளியில் தன்னை சேர்க்க மறுத்தபோது கமலாலய குளத்தில் குதித்து விடுவேன் என்றெல்லாம் தலைமை ஆசிரியர் கஸ்தூரி ஐயங்காருக்கு, கருணாநிதி மிரட்டல் விடுத்த சம்பவமும் நடந்தேறி உள்ளதாம்.. இதை கருணாநிதியின் நெருங்கிய நண்பராக இருந்த தென்னன் என்பவர் ஒரு பேட்டியில் இதனை நினைவுகூர்ந்துள்ளார்.

குளக்கரை மறுகரை
பரந்து விரிந்த கமலாலய குளத்தில் கருணாநிதியும், தென்னனும் நீச்சல் அடித்து ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு செல்ல முயல்வார்களாம்.. பாதி தூரத்தில் உடல் சோர்வடைந்த நிலையில், இனி செல்ல வேண்டாம், திரும்பி விடுவோம் என்று தென்னன் சொல்லவும், "பாதி தூரம் வந்துட்டோம்.. திரும்பி செல்வதை விட மறுகரைக்கு சென்று அடையலாம்" என்று தன்னம்பிக்கையுடன் நீச்சல் அடித்து தனியே எதிர்கரைக்கு சென்றடைந்துவிடுவாராம் கருணாநிதி. சிறுவயதிலேயே தன்னம்பிக்கையும், சோதனையையும் எதிர்நீச்சல் போட்டு வெற்றி கண்டவர் கருணாநிதி என்று புகழாரம் சூட்டியிருந்தார்.

மிரட்டிய கருணாநிதி
இந்த குளம் தொடர்பான பல்வேறு தகவல்களை கருணாநிதியும் தன்னுடைய நெஞ்சுக்கு நீதி என்ற புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். கலைஞரின் மனதுக்கு நெருக்கமான இந்த திருவாரூரைதான், தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு "ஆல்டைம் பேவரைட்" ஆகிப்போனது.. கருணாநிதி எப்போதும் திருவாரூர் சென்றாலும் இந்த இடத்தை பார்க்காமல் செல்லமாட்டார்.. அப்படிப்பட்ட இந்த குளத்துக்குதான் முதல்வர் ஸ்டாலின் நேற்றைய தினம் சென்றுள்ளார்.. அந்த குளத்துக்கு நடுவில் இருக்கும் நாகநாத சுவாமி கோயிலுக்குள் சென்றதாக தெரிகிறது. அதன் படித்துறையில் அரை மணி நேரத்துக்கும் மேலாக உட்கார்ந்துள்ளார்..

கமலாலய ஸ்டாலின்
அந்த படியில் உட்கார்ந்தபடியே டீ குடித்துள்ளார்.. இந்த போட்டோக்களை எல்லாம் உடன்பிறப்புகள் இணையத்தில் நெகிழ்ச்சியுடன் ஷேர் செய்து வருகிறார்கள். ஆனால், இதற்கு முன்பு எத்தனையோ முறை திருவாரூர் வந்திருக்கிற ஸ்டாலின், இதுவரை கமலாலயம் குளத்துக்குள் சென்றதே கிடையாதாம்.. இந்த முறைதான், கமலாலயம் குளத்துக்குச் சென்றவர் படகு மூலமும் குளத்தை முழுமையாக சுற்றி பார்த்துள்ளார்.. ஆக மொத்தம், தன்னுடைய தித்திக்கும் தருணங்களை அசைபோட்டதுடன், முட்டிமோதிய நினைவலைகளுடன் ஸ்டாலினின் "கமலாலய" விசிட் மிகுந்த கவனத்தை குவித்து விட்டு சென்றுள்ளது..!!!












Click it and Unblock the Notifications