"தயாளு.. யாராச்சும் வந்து என்னை எங்கேன்னு கேட்டால்".. மீண்டும் கலைஞர் கருணாநிதி.. அதே உருக்கம்.. அழகு
சென்னை: "தயாளு யாராவது வந்து என்னை கேட்டால்..." என்ற வரிகளுடன் கூடிய போட்டோ ஒன்று இணையத்தில் மறுபடியும் வைரலாகி வருகிறது. இந்த போட்டோவை பதிவிட்டு திமுக தொண்டர்கள் பூரித்து போயுள்ளனர்.
ஒடிசா ரெயில் விபத்து காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் சென்னையில் இன்று நடைபெற உள்ளது.

புளியந்தோப்பு: கருணாநிதியின் நூற்றாண்டு விழா கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.. அன்றைய தினம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் வடசென்னை புளியந்தோப்பு பின்னி மில் மைதானத்தில் நடைபெற இருந்தது.
ஆனால், ஒடிசா ரெயில் விபத்தைத் தொடர்ந்து இந்த பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த பொதுக்கூட்டம் இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன... கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்கம் என்பதால், ஆண்டு முழுவதும் கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இனிய நிகழ்வு: தமிழக அரசு தரப்பிலும், திமுக சார்பிலும் ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் அவரது நூற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.. மேலும், மறைந்த முதல்வர் கருணாநிதியின் இனிய நிகழ்வுகளையும் திமுகவினர் இணையத்தில் பதிவிட்டு நினைவுகூர்ந்து வருகிறார்கள்.. அந்தவகையில், தன்மான தலைவரின் புகழ், அருமை, குறித்த வரிகளை பதிவிட்டு தொண்டர்கள் புளங்காகிதம் அடைந்தும் வருகின்றனர்.
தற்போதும் ஒரு போட்டோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. கருணாநிதி இறந்தபோது இந்த போட்டோவை பலரும் ஷேர் செய்திருந்தனர்.. இப்போதும் தொண்டர்கள் அதையே எடுத்து பதிவிட்டு கொண்டுள்ளனர். அந்த படம் கருணாநிதி - தயாளு அம்மாள் இருவரும் உள்ள போட்டோ..

தயாளு அம்மாள்: தயாளு அம்மாள் தன் வீட்டின் கதவோரத்தில் நின்று கொண்டிருக்கிறார்.. கருணாநிதி வெளியில் எங்கோ கிளம்பி செல்கிறார் போலும்.. அவரை வழி அனுப்ப தயாளு அம்மாள் அங்கே நின்றிருக்கிறார் என தெரிகிறது. இதை ஒரு தொண்டர் பதிவிட்டு "தயாளு செல்கிறேன், அன்பு உடன்பிறப்புக்கள் யாரேனும் வந்து, என்னை எங்கே? என்று கேட்டால். அண்ணாவை காண சென்றுவிட்டேன்.. என்று கூறு. #கருணாநிதி" என்று உருக்கத்துடன் தெரிவித்திருந்தார்.
இந்த படம் கருணாநிதி இறந்தபோது எல்லார் மனசையும் உலுக்கி எடுத்தது.. கூடவே அந்த வரிகளும் அனைவர் மனசையும் பிசைந்தெடுத்து விட்டது.. இப்போது மறுபடியும் இதை தொண்டர்கள் ஷேர் செய்து வருகிறார்கள்.. இப்போதும் அப்படியே ஒரு உணர்வை அவர்களுக்கு தந்து வருகிறது.
ஆயிரம் அர்த்தங்கள்: அந்த வரிகளும், போட்டோவும் பல்லாயிரக்கணக்கான அர்த்தங்களை சொல்லி செல்கிறது.. எண்ணற்ற துயரங்களை கொண்டு வந்து கொட்டி செல்கிறது.. அத்துடன் ஏனோ, மனதையும் சேர்த்து பிசைந்து எடுத்து வருகிறது..!!












Click it and Unblock the Notifications