வாசலில் டக்குனு நின்ற நடிகை சௌந்தர்யா.. ஆசை ஆசையாய் உள்ளே நுழைந்து.. ஐயோ, ஆகாசத்தில் அஸ்தியான தேவதை
சென்னை: மறைந்த நடிகை செளந்தர்யாவின் ஈகை மனம் பலரும் அறியாதது.. ஏழை குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக, 3 பள்ளிகளை நடத்தி வந்திருக்கிறார்.. தன்னுடைய அப்பாவின் பெயரிலேயே அவைகளை நடத்தி, ஆயிரக்கணக்கான பிள்ளைகளுக்கு கல்வியை தந்திருக்கிறார்.. இன்னமும் அந்த பள்ளியில் குழந்தைகள் படித்து வெளியேறியபடியேதான் உள்ளனர்..!
முதல் படத்திலேயே தன்னுடைய நடிப்பு முத்திரையை பதிவு செய்தவர் சௌந்தர்யா.. பல படங்களில் சௌந்தர்யா நடித்திருந்தாலும், "தவசி" படத்தில் விஜயகாந்த்திற்கும் சௌந்தர்யாவுக்கும் இடையே இருந்த கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தன..

விஜயகாந்த்: ஆனால், இந்த படத்தில் முதலில் சௌந்தர்யா நடிக்க பயந்தாராம்.. காரணம், விஜயகாந்த் பற்றி ஒரு சில பேர், சௌந்தர்யாவிடம் எக்குத்தப்பாக சொல்லி வைத்திருக்கிறார்கள்.. அதாவது கேப்டன் அடிக்கடி கோபப்படுவார், சரியாக நடிக்கவில்லையானால், கோபத்தில் அடித்தும் விடுவார் என்றெல்லாம் பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள்..
அதனாலேயே, சௌந்தர்யா அந்தப் படத்தில் நடிக்க மறுத்தாராம். இந்த விஷயம் விஜயகாந்த் காதுக்கும் போயுள்ளது.. உடனே அவர், சௌந்தர்யாவை நாலஞ்சு நாட்கள் ஷூட்டிங்கில் சும்மா வந்து உட்காருமாறு சொல்லியிருக்கிறார்.. அந்த நாட்களில் சௌந்தர்யா இல்லாத, சீன்களை மட்டும் படமாக்கியிருக்கிறார்கள்.. இதையெல்லாம் கவனித்த சௌந்தர்யா, அதற்கு பிறகுதான், விஜயகாந்த் எப்படிப்பட்டவர் என்பதை புரிந்து கொண்டதுடன், விஜயகாந்திடமே மன்னிப்பும் கேட்டுள்ளார்.
பாஜக: 2004ம் ஆண்டு பாஜகவில் இணைந்தபோது சௌந்தர்யா, தென்னிந்தியாவில் மிகப்பிரபலமான நட்சத்திரமாக இருந்தார்.. 2004 எம்பி தேர்தலில் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக ஆந்திராவுக்கு சென்றபோது, பெங்களூரு அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி இறந்துவிட்டார்.. அவரது உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்துவிட்டது.. அவரது அண்ணன் அமரநாத்தும் அதில் பலியானார்.
சௌந்தர்யாவின் கணவர் பெயர் ரகு.. 2003ல் ஒரு சாப்ட்வேர் என்ஜினியரை திருமணம் செய்திருந்தார்.. 31 வயதான சௌந்தர்யா இறக்கும்போது, 7 மாத கர்ப்பிணியாக இருந்தார் என்பதை கேட்டு, தென்னகமே கதறி அழுதது..
காட்டன் புடவைகள்: சமீபத்தில் ஒரு மூத்த பத்திரிகையாளர் செளந்தர்யாவை பற்றி ஒரு சேனலில் பேசியிருந்தார்.. சம்பவத்தன்று வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன்பு, தன்னுடைய அண்ணி நிர்மலாவிடம், "தன்னிடம் காட்டன் புடவைகளே இல்லை என்றும், கட்சி பிரச்சாரங்களுக்கு செல்லும்போது, காட்டன் புடவையில் சென்றால்தான் பொருத்தமாக இருக்கும் என்றாராம்.. அதன்படியே, சில காட்டன் புடவைகளை அண்ணியிடம் கேட்டு வாங்கி கொண்டாராம்..
குங்குமம்: பிறகு, தன் அண்ணனுடன் வாசல்வரை சென்றவர், மறுபடியும் வீட்டுற்குள் வந்து, "குங்குமம் குடுங்க" என்று கேட்டு அண்ணியிடம் கேட்டு வாங்கி வைத்து கொண்டாராம். வெளியில் செல்லும்பொது, சௌந்தர்யா குங்குமம் வைத்துக் கொண்டது அதுதான் முதலும், கடைசியும் என்று அண்ணி சொன்னாராம்.
ஆனால், இன்றுவரை செளந்தர்யாவின் மரணம் மர்மமாகவே உள்ளது என்கிறார்கள்.. ஹெலிகாப்டர் 100 மீட்டர் பறந்தபோது, இயந்திரக்கோளாறு ஏற்பட்டு, தீ விபத்துக்குள்ளாகியிருக்கிறது.. அப்போது, வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருந்தது.. பிரச்சாரத்துக்கு செல்லும்போது இப்படி நடந்ததால், ஒருவேளை அரசியல் சதி இருக்குமா? என்றுகூட கருதப்பட்டது. ஆனால், அப்படி எதுவுமேயில்லை என்று விளக்கம் தந்திருந்தனர் விசாரணை அதிகாரிகள்.
பறவைகள்: அந்த பகுதியில் நிறைய ஹோட்டல்கள் இருப்பதாகவும், அவைகளில் வீணான உணவுப்பொருட்களை சாப்பிடுவதற்காக, நிறைய பறவைகள் வந்துபோவதாகவும், அன்றைய தினமும் அப்படி பறவைகள் வந்ததால், அவைகள் மீது மோதிவிடாமல் இருக்க, ஹெலிகாப்டரை இயக்கும்போது, விபத்து நடந்துவிட்டதாகவும் காரணம் கூறப்பட்டது.
ஆனால், சௌந்தர்யாவின் கடைசிநிமிட ஹெலிகாப்டர் விபத்து காட்சி, இன்னமும் வீடியோக்களாக இணையத்தில் இருக்கத்தான் செய்கிறது.. ஆனால், அந்த வீடியோக்களில் எங்குமே ஒரு பறவைகூட கண்ணுக்கு தென்படவில்லையே.. பறந்துபோனது செளந்தர்யாதான் என்று ரசிகர்கள், இந்த விபத்து நடந்தபோது கலங்கியபடியே சொன்னார்கள்.
இந்த விபத்துக்கு, அரசியல் காரணம் இல்லாமல் இருக்கலாம்.. ஆனால், அரசியலுக்கு அப்பாற்பட்ட காரணம் வேறுஏதாவது இருக்கக்கூடும் என்றும் ஆதங்கத்தை ரசிகர்கள் கொட்டியிருந்தனர்.
அச்சு அசல்: பார்ப்பதற்கு அச்சுஅசல் நம்ம சௌந்தர்யா போலவே இருக்கும் டிக்டாக் பெண் ஒருவர், சமீபத்தில் சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்திருந்தார். அதில், "பார்க்கிறவங்க எல்லாம், சௌந்தர்யாவாகவே நினைச்சு, என்னை கட்டிப்பிடிச்சிட்டு அழறாங்க" என்று கூறியிருந்தார்..!!
உண்மைதான்... சொந்தமுமில்லை, பந்தமுமில்லை.. ஆனாலும் ஏதோ ஒன்றில் நடிகை செளந்தர்யாவின் பாசத்தில் தமிழக மக்கள் விழுந்தேவிட்டனர்.. இறந்துபோய் இத்தனை வருடமாகியும், அவருக்காக கலங்குகிறார்கள் என்றால், தமிழக மக்களின் மனங்களில், அறுக்கமுடியாத உறவாய் கலந்துவிட்டார் செளந்தர்யா..!!
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications