"சர்ப்ரைஸ்".. ஒருத்தரையும் விடாதீங்க.. பொங்கல் பரிசு ரூ.1000 பெறுவோருக்கு.. அடுத்த ஹேப்பி நியூஸ்.. அட
பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து அமைச்சர் பெரியகருப்பன் முக்கிய தகவல் வெளியிட்டுள்ளார்
சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவது குறித்து, கூடுதல் அறிவிப்பை கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.. இது ரேஷன் அட்டைதாரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு ரூ.1,000 ரொக்கம், அரிசி, சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதற்கான டோக்கன்கள் தரப்பட்டு வருகின்றன.. சில ரேஷன் கடைகளிலும், சர்வர் கோளாறு காரணமாக பயோ மெட்ரிக் எந்திரத்தில் கைரேகை சரியாக பதியாததால் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி பாதிக்கப்பட்ட செய்திகள் வெளியாகின.

பவர் ப்ளஸ்
முன்னதாக, கடந்த வாரம் உணவுத்துறை அமைச்சர், பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்திருந்தார்.. அதில், பொங்கலுக்கு வழங்கப்படும் ரொக்கம் ரூபாய் ஆயிரம், பொருட்கள் வழங்கும்பொழுது நியாய விலை கடைகளில் வழங்கப்படும்.. வங்கிகளில் இப்போது கொடுக்கின்ற உத்தேசம் இல்லை, ஆனால், குறைபாடு இல்லாமல் பொங்கல் தொகுப்பு விநியோகிக்கப்படும்.. முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட வர இயலாதவர்கள் "பவர்" கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். மற்றவர்களுக்கு பயோ மெட்ரிக் முறை கட்டாயம்.. அதில் சுட்டிக்காட்டும் அளவிற்கு ஏதாவது தவறு நடந்திருந்தால் ஆதாரத்துடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

ராதாகிருஷ்ணன்
அதேபோல, சுகாதாரத்துறை செயலர் ஐஏஎஸ் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசும்போது, இன்னொரு முக்கிய தகவலை கூறியிருந்தார்.. அதில், "வீடு பூட்டப்பட்டதாலோ, அல்லது அங்கிருந்து வேறு இடத்திற்கு சென்றவர்களை தவிர, மற்ற 95 சதவீதம் பேருக்கும் டோக்கன்கள் எந்த நேரத்திலும் கிடைக்க தயாராக உள்ளது.. பதட்டப்படாமல், உங்களுக்கு குறித்த நேரத்தில் நீங்கள் போய் வாங்கி கொள்ளலாம். குடும்ப அட்டையில் உள்ள எந்த உறுப்பினர் வேண்டுமானாலும் சென்று டோக்கன் பெறலாம்.. வயதானவர்கள் அல்லது யாராவது வராமல் போய்விட்டால், அதற்கான பதிவேடும் தயார் செய்யப்பட்டு வருகிறது.. யாருக்காவது டோக்கன் விட்டுப்போயிருந்தால் 13ம் தேதி வரைக்கும் கடைகளை திறந்துவைக்க சொல்லி உள்ளோம்.. அதனால் தேவையற்ற பதற்றம் வேண்டாம்" என்று உறுதி கூறியிருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை
வழக்கமாக, தமிழக ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் முதல் மற்றும் இரண்டாம் வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை உண்டு.. அதற்கு மாற்றாக, அந்த வார ஞாயிற்றுக் கிழமைகளில், ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. எனினும், பொங்கல் தொகுப்பை வாங்குவற்கு இன்று வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.. அதற்குள் பரிசு தொகுப்பை வாங்காதவர்கள் யாரேனும் விடுபட்டிருந்தால் அவர்கள் நாளையும் வாங்கி கொள்ளலாம்.. இதற்காக, நாளை ரேஷன் கடைகளுக்கு விடுமுறையாக இருந்தாலும், வேலை நாளாக அறிவித்து, உணவு வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது..

சர்ப்ரைஸ்
அதுமட்டுமல்ல, கார்டுதாரர்கள் சிரமமின்றி பொங்கல் பரிசு வாங்கலாம் என்றும், பொங்கல் பரிசை வாங்க, கார்டுதாரர்கள் ரேஷன் கடைகளுக்கு கூட்டமாக வரக்கூடாது என்பதற்காக எந்த தேதி, நேரம் வர வேண்டும் என்ற விபரம் அடங்கிய, 'டோக்கன்' வீடுகளில் முன்கூட்டியே வழங்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் அந்த தேதியை தவறி வருவோரை ரேஷன் ஊழியர்கள் திருப்பி அனுப்புவதாக தெரிகிறது. அதனால், டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதியை தவறியும், முன்கூட்டியே யாரேனும் வந்தால், அவர்களை திருப்பி அனுப்பக்கூடாது என்றும், பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குமாறும் ரேஷன் ஊழியர்களை, உணவு துறை அறிவுறுத்தி உள்ளது. நாளையும் கடைகள் இயங்க உள்ளதால், இது குடும்ப அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications