ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு மேஜர் அறிவிப்பு.. குட் நியூஸ் சொல்லும் தமிழக அரசு.. அட என்னனு பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும், அடுத்த சில தினங்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன..

இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே ஏராளமான பலன்களை அடைந்து வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டு வருகின்றன..

 ரேஷன் அட்டைகள்

ரேஷன் அட்டைகள்

அதேபோல, பொங்கல் பரிசு உள்ளிட்ட நிதியுதவிகளும் அரசின் மற்ற நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கார்டு மூலமாக வழங்கப்படுகின்றன. மற்றொரு புறம், ரேஷன் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்தம், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், செல்போன் பதிவு எண்ணை மாற்றுதல், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை தெரிவித்தல் போன்றவைகள் குறித்தும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி மேற்கொள்ள தமிழக அரசினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே, இன்னொரு தகவலும் வெளியிடப்பட்டது.. "ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்" அமலில் உள்ளது.

 கட்டாயம்

கட்டாயம்

அதாவது, இந்த திட்டத்தின் மூலம் மக்கள் நாட்டின் எங்கிருந்து வேண்டுமானாலும் ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும். நாட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை ஆவணங்களில் ஒன்றாக ரேஷன் கார்டு இருந்து வருகிறது.. மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருவதால் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாய்ண்ட் ஆஃப் சேல் சாதனங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவால் இனிமேல் ரேஷன் கடையில் குளறுபடியும் நடக்க வாய்ப்பு இருக்காது. அதனைப் போலவே இனிமேல் எந்த பயனர்களுக்கும் குறைவான ரேஷன் கிடைக்காது என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு வருகிறது.

 கிடங்குகள்

கிடங்குகள்

இந்நிலையில், அடுத்த அதிரடி பிறப்பிக்கப்பட்டுள்ளது.. அதாவது, தமிழகத்தில், 1.96 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த கார்டுதாரர்களுக்கு, 24,058 முழு நேர, 9,644 பகுதி நேரம் என 33 ஆயிரத்து, 702 ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. இந்த கடைகளுக்கு மாநில அளவில் உள்ள, 245 நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து பொருட்கள் எடுத்து செல்கின்றனர். தமிழக அரசு, "ஒரே நாடு ஒரே ரேஷன்" திட்டத்தின் கீழ் கார்டுதாரர்களின் வீட்டிற்கே சென்று பொருட்களை வினியோகம் செய்யும் 'மொபைல்' ரேஷன் கடை திட்டத்தை, 2023 மே மாதம் முதல் செயல்படுத்த உள்ளது.

 மொபைல் ரேஷன்

மொபைல் ரேஷன்

எனவே, அந்தந்த தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் சொந்தமாக வாகனங்களை வாங்கி, அதில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி இருக்க வேண்டும். இதன் மூலம் படிப்படியாக தனியார் வாகன ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் எடுத்துச்செல்லும் நேரம் தவிர்த்து, மற்ற நேரங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், வாங்கும் வாகனங்களை வாடகைக்கு விட்டு வருவாய் ஈட்ட வேண்டும். இது தவிர அந்தந்த பகுதிகளில் வார்டு வாரியாக, "மொபைல்" ரேஷன் கடைகளை பிரித்து, ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் அனைத்து கார்டுதாரர்களுக்கும் பொருட்களை வினியோகம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதற்கான பணிகளை அந்தந்த கூட்டுறவு இணை பதிவாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

 ஹேப்பி + ஜாலி

ஹேப்பி + ஜாலி

கூட்டுறவுத்துறை அதிகாரி ஒருவர் இதை பற்றி சொல்லும்போது, 'மே முதல் சென்னை தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் "மொபைல்" ரேஷன் கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு, கார்டுதாரர்களுக்கு வீடு தேடி பொருட்கள் வழங்கப்படும்' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்... ஏற்கனவே, கேரளவில், நடமாடும் விற்பனை நிலையங்கள் மூலம் நேரடியாக வீட்டு வாசலில் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்திலும் இந்த திட்டம் வரவிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ரேஷன் அட்டைதாரர்களிடம் ஏற்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+