"துண்டு சேருதே".. பட்டென எடப்பாடி எடுத்த முடிவு.. "சைலண்ட்டா" போன உத்தரவு.. டிடிவி தினகரனுக்கே ஷாக்
எடப்பாடி பழனிசாமி 3 விதமான வியூகங்களை வைத்து காய்நகர்த்தலை துவங்கி உள்ளார்
சென்னை: எடப்பாடி பழனிசாமி அடுத்தக்கட்டமாக என்ன வியூகத்தை கையில் எடுக்க போகிறார் என்று தெரியவில்லை.. ஆனால், சைலண்ட்டாக சில வேலைகள் கட்சிக்குள் நடந்து வருவதாகவும், இதற்கான மறைமுக உத்தரவை தன்னுடைய நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி பிறப்பித்துள்ளதாகவும் தெரிகிறது.. குறிப்பாக டிடிவி தினகரனுக்கு எதிரான காய்நகர்த்தல்கள் அதிகமாகி உள்ளதாக சொல்கிறார்கள்.
டிடிவி தினகரனை பொறுத்தவரை, திமுகதான் முக்கிய டார்கெட் என்றாலும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி வைக்க போவதில்லை என்பதையும் வெளிப்படையாக சொல்லவில்லை.
அதேபோல, எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக எதிர்த்தபடியே உள்ளார்.. பாஜகவுடன்தான் கூட்டணி என்ற முடிவில் பின்வாங்க போவதில்லை என்றாலும், தற்சமயம் பாஜக ஆதரவு என்ற விஷயத்தில் அடக்கியே வாசிக்கிறாராம்..

சரிந்த வாக்கு
பாஜகவுடன் கூட்டணி என்பதாலேயே, சிறுபான்மையினர் ஓட்டுக்கள் அமமுகவுக்கு இந்த முறை கிடைக்காமல் போக வாய்ப்புள்ளதாக என்கிறார்கள்.. காரணம், கடந்த எம்பி தேர்தலின்போது, எஸ்பிடிஐ உடன் மட்டுமே அன்று அமமுக கூட்டணி வைத்திருந்தது.. ஆனால், கடந்த முறை தேமுதிகவையும் தன்னுடன் இணைத்து கொண்டு தேர்தலை சந்தித்தது.. இதில், கடந்த 2019-ல் கிட்டத்தட்ட 23 லட்சம் வரை அமமுக வாக்குகளை பெற்றது.. ஆனால், 2021-ல் கூட்டணியுடன் சேர்த்து, 14 லட்சத்து அளவுக்குதான் அமமுக வாக்குகளை பெற்றுள்ளது..

நழுவுதே
அதாவது கூட்டணியை விரிவுபடுத்தியும்கூட, வாக்குகளில் சுருங்கிவிட்டது அமமுக.. எனவே, அமமுகடன் கூட்டணி தேவையா? என்றும் சிலர், பாஜகவின் காதை கடித்து வருகிறார்காளம்.. எடப்பாடி பழனிசாமி இந்த விஷயத்தையும் தனக்கு சாதகமாகவே எண்ணுகிறாராம்.. ஒருவேளை பாஜகவுடன் அமமுக கூட்டணி வைத்தாலும், அந்த அதிருப்தி ஓட்டுக்களையும் களவாடலாம் என்றே பாசிட்டிவ்வாக கணக்கு போடுகிறார். அதுமட்டுமல்ல, அமமுகவில் அதிருப்தியில் உள்ளவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு வலையை விரித்துள்ளதாக கடந்த 2 மாத காலமாகவே தகவல்கள் வந்து கொண்டிருந்தன.

பலஹீனம்
எவ்வளவுதான், முட்டிமோதினாலும், தென்மண்டல சமூக மக்களின் ஆதரவை எடப்பாடி பெற முடியாத நிலையில், இப்படி ஒரு வியூகத்தை கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.. சுருக்கமாக சொல்லப்போனால், கொங்குவை தவிர, பிற இடங்களில் அதிமுகவின் வாக்கு வங்கியை பிரிக்கக்கூடிய, அமமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினரை வளைக்கும் முயற்சியில்தான் எடப்பாடி டீம் இறங்கி உள்ளதாக தெரிகிறது.. தஞ்சை மற்றும் தென்மண்டலங்களில் தனக்கான பலத்தை பெருக்கி கொள்ள முடியாத நிலையில், எம்பி தேர்தலுக்குள் அமமுகவை முற்றிலும் பலவீனப்படுத்திவிட வேண்டும் என்ற மறைமுக உத்தரவையும் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய ஆதரவாளர்களுக்கு பிறப்பித்துள்ளாராம்.

விக்கெட் விழுந்தாச்சு
அதற்கு தற்போது பலனும் கிடைத்து வருகிறது.. விழுப்புரம் அமமுக வடக்கு மாவட்ட செயலாளரும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுச்சேரி மண்டல பொறுப்பாளருமான பாலசுந்தரம், விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் அய்யனார் ஆகியோர் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர்.. இன்றைய தினம் அவர்கள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணையவும் உள்ளனர்.. ஆனால், அதற்குள் அமமுகவில் இருந்து விழுப்புரம் மாவட்ட செயலாளர்கள் பாலசுந்தரம் மற்றும் அய்யனார் ஆகியோர் கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக தினகரன் அறிவித்து விட்டார்.

மாஸ்டர் தினகரன்
இதையடுத்து, மேலும் பலரை அதிமுகவில் இணைய வைக்கும் முயற்சிகளையும் எடப்பாடி தரப்பு எடுத்து வருகிறது.. இது தினகரனுக்கு பெருத்த அதிர்ச்சியை உண்டுபண்ணி வருகிறது.. இன்னொரு தகவலும் கசிந்து வருகிறது.. சமீபகாலமாகவே கட்சிக்கு எந்தவிதமான செலவையும் தினகரன் செய்வதில்லையாம். எந்த ஒரு கூட்டம் என்றாலும் நிர்வாகிகளையே முழு பொறுப்பையும் ஏற்க சொல்லிவிட்டு, தாராளத்தை கண்ணிலேயே காட்டுவதில்லையாம்... இதனால் சில நிர்வாகிகள் கையை பிசைந்து நிற்பதுடன், அதிருப்திக்கும் ஆளாகி உள்ள நிலையில் அவர்களுக்கும் தூண்டில் வீசப்பட்டு வருகிறதாம்.

சாயும் கூடாரம்
இன்னும் நீதிமன்ற தீர்ப்புகள் எதுவுமே வெளிவராத நிலையில், எடப்பாடி, பன்னீர் இருவரில் இலை யாருக்கு என்று சொல்லப்படாத நிலையிலும்கூட, அதிமுகவில் மாற்று கட்சியினர் இணைந்து வருவது, எடப்பாடி மீதான நம்பிக்கத்தன்மையையும், செல்வாக்கையும் நிரூபிப்பதாகவே உள்ளது.. ஏற்கனவே, அதிமுகவில் பிரிந்தவர்களையும், வருத்தத்தில் உள்ள சீனியர்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வரும்நிலையில், எதிர்கூடாரங்களில் இருப்பவர்களும் கட்சியில் இணைவது, புது தெம்பை ஊட்டி வருகிறதாம்.. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் பாஜக, ஓபிஸ், தினகரன் களமிறங்கி உள்ளதாகவும் தெரிகிறது.. பார்ப்போம்..!!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications