குவிஞ்சிட்டாங்களே.. அசத்துவாரா அன்பில் மகேஷ்.. பொன்முடி ரெடி.. லிஸ்ட் பெருசா இருக்கே.. பரபர சட்டசபை
சென்னை: தமிழ்நாடு சட்டசபை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.. உயர்கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கையின் மீது விவாதம் நடக்க உள்ளதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பு இன்றைய தினம் ஏற்பட்டு வருகிறது.. தற்போது, பேரவை கூட்டத்தில் கேள்வி நேரம் நடந்து வரும்நிலையில், எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்கின்றனர்..
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் 9வது நாள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. நேற்றைய தினம் உள்ளாட்சித் துறையும், ஊரக வளர்ச்சி துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.
மார்ச் 31ம் தேதி, அதாவது இன்று உயர்கல்வி, பள்ளிக்கல்வித் துறையும், நாளை ஏப்ரல் 1ம் தேதி நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மானியக் கோரிக்கையும் நடைபெற உள்ளது.
ஒவ்வொரு மானியக்கோரிக்கை அன்றும் மானியக்கோரிக்கைகளை தாக்கல் செய்து, புதிய அறிவிப்புகளை துறை சார்ந்த அமைச்சர்கள் வெளியிட உள்ளனர். அந்தவகையில், இன்றைய தினமும் அமைச்சரவையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துறையாக கருதப்படுகிறது.

குட்நியூஸ்
காரணம், உயர்கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கையின் மீது விவாதம் நடக்க உள்ளது... உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் ஆகியோர் விவாதத்திற்கு பதில் அளிப்பதுடன், தங்கள் துறையில் செயல்படுத்த உள்ள முக்கிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என்று நம்பப்படுகிறது.. இதில் விசேஷம் என்னவென்றால், இன்று பள்ளிக்கல்வித்துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெறுவதால் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் ஆதரவாளர்கள் நேற்றே சென்னையில் குவியத்தொடங்கிவிட்டனர்.

டிபன், சாப்பாடு
நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை மீதான மானியக் கோரிக்கை நேற்றைய தினம் நடைபெற்றது.. அமைச்சர் கேஎன் நேருவின் துறை என்பதாலும், தன்னுடைய துறை சார்ந்த அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என்பதாலும், அவரது உரையை காணவும், அவருக்கு வாழ்த்து சொல்லவும், திருச்சி மாவட்டத்தில் உள்ள அவரது ஆதரவாளர்கள் சென்னையில் குவிந்துவிட்டனர்.. அதேபோல் அமைச்சர் நேரு, சேலம் மாவட்டத்துக்கும் இப்போது "பொறுப்பு அமைச்சர்" என்பதால் சேலத்திலிருந்தும், ஆதரவாளர்கள் திரண்டு வந்தனர். அவர்களுக்கு விருந்து வைத்தார் நேரு.

விசேஷம்
எப்போதுமே சட்டசபை நிகழ்வுகளில், தன் துறையின் மான்ய கோரிக்கை விவாதத்தின்போது, அமைச்சர் நேரு, தனக்காக கிளம்பி வந்து வாழ்த்தை சொல்லும் ஆதரவாளர்களுக்கு, தன் வீட்டில் தடபுடலாக விருந்து வைப்பது வழக்கம்.. அந்தவகையில், நேற்றைய தினமும் விருந்து தரப்பட்டது.. இதில் விசேஷம் என்னவென்றால், அதே திருச்சி மாவட்டத்திலிருந்து நேருவுக்கு ஆதரவாளர்கள் கிளம்பி வந்ததுபோல, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் ஆதரவாளர்களும் சாரை சாரையாக சென்னைக்கு வந்துவிட்டனர்.

மகேஷ் ஹேப்பி
நேற்று நேருவின் துறை என்றால், இன்று அன்பில் மகேஷின் பள்ளிக்கல்வித்துறை மீதான மானியக் கோரிக்கை நடந்து வருகிறது.. வழக்கம்போலவே, இந்த வருடமும் புதுமையான அறிவிப்புகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுவார் என்ற நம்பிக்கை பெருகிவருகிறது.. இதைதவிர, பள்ளிக்கல்வித்துறையில் நிறைய அறிவிப்புகள் எதிர்நோக்கப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் நலன்கருதி, அரசியல் தலைவர்களும் நிறைய கோரிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.. நேற்றுகூட, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்திருந்தார்.

ஜில் நியூஸ்
தமிழ்நாட்டில் பெரும்பான்மையான நகரங்களில் வெப்பத்தின் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிவிட்ட நிலையிலும், ஒன்று முதல் ஒன்பது வரையிலான வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. ஏப்ரல் 15-ம் நாளுக்குப் பிறகு தான் அவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும். ஏப்ரல் கடைசி வாரத்தில் தான் அவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்படும் என்கிறார்கள்.. இது உண்மையாக இருக்குமானால், இதைவிட கொடுமையான மனித உரிமை மீறல் இருக்க முடியாது. 11, 12-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் அடுத்த சில நாட்களில் நிறைவடைகின்றன.

ஹேப்பி குஷி
10 வகுப்புக்கு வரும் 6-ந் தேதி பொதுத்தேர்வு தொடங்குகிறது. உயர் வகுப்புகளுக்கான பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டு தேர்வு தொடங்கிய நிலையில் தொடக்கநிலை வகுப்புகளுக்கு தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏன்? குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு உடனடியாக தேர்வுகளை நடத்தி, ஏப்ரல் 2வது வாரத்திலிருந்தே கோடை விடுமுறை அளிக்க பள்ளிக் கல்வித் துறை முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.. எனவே, கோடை விடுமுறை குறித்த அறிவிப்பையும் அநேகமாக இன்றைய தினம் அன்பில் மகேஷ் வெளியிடலாம் என்று தெரிகிறது..!!












Click it and Unblock the Notifications