வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம்... பாடத்திட்டத்தில் மாற்றம்... அமைச்சர் செங்கோட்டையன் உறுதி
Recommended Video

சென்னை : வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பின்லாந்து நாட்டு கல்வி முறையில் எந்த அம்சங்களையெல்லாம் இங்கே அமல்படுத்தலாம் என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக ஒரு குழுவினர் பின்லாந்து நாட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

ஆசிரியர் பயிற்சி தேர்வு முறைகேடு விவகாரம் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.
முன்னதாக, இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது என்றும், மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்கில் அரசு பல முயற்சிகளை செய்து வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மரக்கன்று நட்டால் 2 மதிப்பெண் என்ற ஆணை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 2.5 கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்படும். மருத்துவ படிப்பில் 1000 பேர், அரசு பள்ளிகளில் இருந்து இடம்பெறுவர் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
-
Sengottaiyan: அதிமுக அவ்வளவு தான் முடிஞ்சுது.. செங்கோட்டையன் டைமிங் பன்ச் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பத்திரிகையாளர்களை மிரட்டினாரா செங்கோட்டையன்.. முற்றிய வாக்குவாதம்.. ப்ரஸ்மீட்டில் பரபரப்பு -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ்












Click it and Unblock the Notifications