இதுதான் ஸ்டாலின்.. ஹேப்பியில் மிதக்கும் சென்னை.. தி.நகர் ஆகாய நடைபாதை.. திறந்து வைக்கிறார் முதல்வர்
சென்னை: தி.நகர் பஸ் ஸ்டாண்டு, மாம்பலம் ரயில்வே ஸ்டேஷனை இணைக்கும் வகையில் கட்டப்பட்டிருக்கும் ஸ்கை-வாக் மேம்பாலம் இன்று திறக்கப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை இந்த ஆகாய மேம்பாலத்தை, மாம்பலத்தில் திறந்து வைக்கிறார்.. இதற்கான எதிர்பார்ப்புகள் எகிறி வருகின்றன.
சென்னை 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் கட்டப்படும் இந்த மேம்பாலமானது, 2020-ல் ரூ.26 கோடி செலவில் கட்டப்பட்டு தற்போது முடிவடைந்துள்ளது.
கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் பாதையை உள்ளடக்கும் இந்த மேம்பாலமானது, நகரும் படிக்கட்டுகளுடன் பொதுமக்கள் அதிக அளவு நடப்பதற்கு ஏற்ற அகலத்துடன் கட்டப்பட்டு உள்ளது.

சென்னையின் மிகப்பெரிய வர்த்தக நகரமாக விளங்கும் தியாகராய நகருக்கு வருபவர்கள் மாம்பலம் ரெயில் நிலையத்தில் இறங்கி தி.நகர் பஸ் நிலையத்திற்கு செல்வதற்கு கூட்ட நெரிசலைதான் கடந்து தான் செல்ல வேண்டும்..
இந்த நெரிசலை குறைப்பதற்காக தி.நகர் பஸ் நிலையத்தில் இருந்து மேட்லி சாலை, பார்டர் சாலை வழியாக மாம்பலம் ரெயில் நிலையம் வரை 13 அடி அகலத்தில் 1,968 அடி நீளம் கொண்ட நடை மேம்பாலம் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் ரூ.30 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
சென்னை தியாகராய நகரில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலத்தால், மக்கள் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்திற்கு ஐந்து நிமிடத்தில் சென்றுவிட முடியும் என்று சொல்லப்படுகிறது.. அதனால், தினமும் மாம்பலம் ரயில் நிலையத்திற்கு வரும் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த மேம்பாலத்தினால் பயனடைவார்கள் என்றும் நம்பப்படுகிறது.
லிப்ட் வசதி, நகரும் படிக்கட்டு வசதி கொண்ட இந்த ஆகாய நடை மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை நேரில் சென்று திறந்து வைக்கிறார்.. தி.நகர் எம்எல்ஏ ஜெ.கருணாநிதி மாவட்டச் செயலாளர் மயிலை வேலு, பகுதிச் செயலாளர் கே.ஏழுமலை, மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மேயர் பிரியா ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

ஸ்டாலினின் கனவுத்திட்டமாக "சிங்கார சென்னை 2.0" திகழ்ந்து வருகிறது.. அந்தவகையில், சென்னை மாநகராட்சியானது பூங்காக்களை சீரமைத்தல், நீரூற்றுகள் நிறுவுதல், மேம்பாலங்களை அழகுபடுத்துதல் மற்றும் புதிய மேம்பாலங்களை அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன..
இந்த பணிகள் அனைத்தையும் இந்த திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது... அந்தவகையில், தி.நகர் வந்து செல்லும், வர்த்தகர்களுக்கும், வியாபாரிகளுக்கும், பயணிகளுக்கும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கும், ஒட்டுமொத்த பொதுமக்களுக்கும் இந்த ஆகாய மேம்பாலம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது... சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ், முதல்வர் ஸ்டாலினின் கனவும் மெல்ல மெல்ல நிறைவேறி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications