"முருகன்"தான் எல்லாமே.. கையில் அட்டை வேல் பிடித்தபடி.. கோயிலுக்குள் நுழைந்த டி. ராஜேந்தர்.. கலக்கல்
திருப்போரூர் கோயிலில் டி ராஜேந்தர் சாமி தரிசனம் செய்தார்
சென்னை: கையில் ஒரு அட்டை வேலை எடுத்துக் கொண்டு, டி.ராஜேந்தர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த சம்பவம் திருப்போரூர் பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் நடக்க உள்ளது.. இதில் சகலகலா வல்லவரும், நடிகரும், இயக்குனரும், அரசியல்வாதியுமான டி.ராஜேந்தர் போட்டியிட போகிறார்.
தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்பட்டுள்ள நிதி பிரச்சனையை சரி செய்யவே தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் கூறினார். மேலும் சங்க தேர்தலில் உண்மையை, நியாயத்தை, சத்தியத்தை நிலைநாட்ட வேட்புமனு தாக்கல் செய்ததாகவும் தெரிவித்திருந்தார்.

திருப்போரூர்
இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற தனது அணியின் வேட்பாளர்களுடன் திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சென்றார். அவர் கையில் ஒரு வேல் இருந்தது.. ஆனால் அது அட்டையால் செய்யப்பட்டிருந்தது.. உள்ளே நுழைந்து சாமி கும்பிடும்வரை அந்த வேலை தான் தன் கையில் பிடித்திருந்தார்.. அடிக்கடி அரோகரா அரோகரா என்று கோஷம் போட்டுக் கொண்டே இருந்தார்.

கைக்குழந்தை
சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்த டிஆரை பார்த்ததுமே அங்கிருந்த பக்தர்கள் பரவசமடைந்தனர்.. ஆர்வமாக டிஆரை பார்த்தனர்.. அப்போது பெண் ஒருவர் கையில் கைக்குழந்தையை தூக்கி வைத்திருந்தார்.. அந்த குழந்தையை ஆசையாக தூக்க வந்தார்.. ஆனால், அந்த குழந்தையோ முகத்தை அந்த பக்கம் திருப்பி கொண்டது. ஆனாலும் டிஆர் விடவில்லையே.. தன் கையில் இருந்த வேலை, அந்த குழந்தைக்கு தந்து கடைசியில் தன்னிடம் குழந்தையின் கவனத்தை ஈர்த்தார்.

சூரன்
அதுமட்டுமல்ல.. அங்கிருந்தோரிடம் தன் பாணியிலேயே பஞ்ச்களை அள்ளி வீச ஆரம்பித்தார்.. பக்தர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்து கொண்டார்.. கலகலவென அவர்களிடம் தன் பாணியிலேயே பேசி மகிழ்வித்தார்.. பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, "சூரனை வென்றவன்.. மலையேறி நின்றவன்.. வேலோடு வந்தவன்... எல்லாம் வல்ல முருகன்.. அங்கே வந்திருக்கிறது தேரு.. இந்த முருகனை நம்பிதான் வந்திருக்கிறேன் டிஆரு.. நிச்சயம் இந்த தேர்தலில் எங்களுக்கு வெற்றியும் கிடைக்கும் நல்ல பேரு.

சூரனை வென்றவன்
இந்த முருகனை நினைத்தால் பலத்தை தருவான்.. நலத்தை தருவான்.. எல்லாம் வல்ல அந்த முருகன் அருளால் தமிழகத்து மக்கள் நலன் பெற வேண்டும்.. வளம் பெற வேண்டும்.. சூரனையே நீ வென்றவன் அல்லவா? இந்த கொரோனா காலத்திலும் எம் மக்களை காப்பாற்ற வேண்டும்.. தென்னகத்து மக்கள் வாழ வேண்டும்.. இந்த இந்திய மக்கள் வாழ வேண்டும்.. ஏன் இந்த உலக மக்கள் வாழ வேண்டும்.

செழிப்பு
உலகம் செழிக்க வேண்டும்.. மக்கள் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று திருப்போரூர் முருகனிடத்தில் வேண்டி உள்ளேன்.. எங்கள் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் எங்கள் அணி.. தயாரிப்பாளர்களுக்கு நாங்கள் ஆற்றுவோம் பணி.. முருகா அதற்கு நீ தர வேண்டும் வெற்றி கனி.. என்று முருகனிடம் கேட்க வந்தேன்" என்றார்.












Click it and Unblock the Notifications