வருண் சக்கரவர்த்தி அல்லது குல்தீப்? இந்திய பிளேயிங் 11ல் நடக்கும் ஒரு மாற்றம்.. சூர்யகுமார் அப்டேட்!

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரு மாற்றம் நடக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்திய அணியின் ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி நீக்கப்பட்டு, அவரது இடத்தில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாட உள்ளன. அகமதாபாத் மைதானத்தில் நடக்க உள்ள இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. நியூசிலாந்து அணி அபார ஃபார்மில் இருக்கும் சூழலில், இந்திய பேட்ஸ்மேன்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும் என்று பார்க்கப்படுகிறது.

T20 World Cup 2026

அதேபோல் இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரேயொரு மாற்றம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் கடந்த சில போட்டிகளாகவே இந்திய அணியின் நட்சத்திர ஸ்பின்னரான வருண் சக்கரவர்த்தியின் பவுலிங்கை எளிதாக எதிரணிகள் கணித்து வருகின்றனர். அவரின் பவுலிங் வெரைட்டி, முதல் பந்தாக கூக்ளியை தான் வீசுவார் என்பது வரை தெரிந்துவிட்டன.

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களில் 64 ரன்களை விட்டுக் கொடுத்தார். அதிலும், இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜேக்கப் பெத்தல் 13 பந்துகளில் 42 ரன்களை விளாசி தள்ளினார். அதுமட்டுமல்லாமல் ஜிம்பாப்வே, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட அணிகளும் கூட வருண் சக்கரவர்த்தி பவுலிங்கை பதம் பார்த்தன.

இதனால் அகமதாபாத் மைதானத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில் வருண் சக்கரவர்த்தி இடத்தி குல்தீப் யாதவ் விளையாடக் கூடும் என்று சொல்லப்பட்டு வருகின்றன. ஆனால் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசுகையில், வருண் சக்கரவர்த்தியின் ஃபார்ம் குறித்த கவலை எங்களுக்கு இல்லை. எங்களின் கவனம் வெற்றியில் மட்டுமே இருக்கிறது.

வருண் சக்கரவர்த்தி உலகின் நம்பர் 1 டி20 பவுலர்.. அவருக்கு இந்திய் அணியின் வெற்றிக்கு எப்படி உதவ முடியும் என்பது நன்றாக தெரியும்.. நாங்கள் எதையும் எளிதாக கையாளுவோம்.. இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு தலைமை தாங்குவதே மிகப்பெரிய பெருமை என்று தெரிவித்துள்ளார். மேலும் டி20 உலகக்கோப்பை தொடரில் குல்தீப் யாதவ் இதுவரை ஒரேயொரு போட்டியில் மட்டுமே ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+