தாசில்தார் டூ விஏஓ.. அரசின் தாலுகா ஆபீசில் யாரிந்த பெண்? பிறப்புச் சான்றிதழ், செல்வ சான்று கேட்டால்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பட்டா மாறுபாடு, பட்டாவில் பெயர் மாற்றம் போன்ற திருத்தங்களை செய்யவும், உதவித்தொகையை பெறவும், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை பெறுவதற்காகவும், அவைகளில் திருத்தங்களை செய்வதற்காகவும், ஆன்லைனிலேயே பல வசதிகளை அரசு செய்து தந்துள்ளது.. எனினும், இது தொடர்பான அதிகாரிகளை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டிய அவசியமும் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படுகிறது.. அப்படி அரசு அலுவலகங்களுக்கு சென்று, தங்களது கோரிக்கையை வலியுறுத்தும்போது, லஞ்சம் கேட்டு அலறவிடும் சம்பவமும் நடக்கிறது.. இதற்கு பெண் அதிகாரிகளும் விதிவிலக்கல்ல.

நேற்று முன்தினம்தான், ஈரோட்டில் ஒரு பெண் தாசில்தார் சிக்கினார்.. திங்களூரை சேர்ந்த வேல்முருகன் மனைவி ரேவதி என்பவர் விவசாய கூலித்தொழிலாளி ஆவார்..

Tahsildar VAO Taluk office

இவரது மகள் பவித்ரா, ஈரோட்டில் உள்ள கல்லுாரியில் படிக்கிறார். இவரது பிறப்பு சான்றிதழில், பவித்ரா என்பதற்கு பதிலாக பௌத்ரா என்று இருந்துள்ளது... எனவே, கடவூர் தாசில்தார் அலுவலகத்தில் பெயர் மாற்றம் செய்வதற்காக, ஒன்றரை வருடங்களாகவே ரேவதி முயன்று வந்தார்.

பிறப்பு சான்றிதழ்

எனினும் பெயர் மாற்றம் செய்யப்படாததால், கடவூர் தாசில்தார் சவுந்தரவல்லியை நேரில் சந்தித்தார் ரேவதி.. தன்னுடைய மகளின் பிறப்பு சான்றிதழில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பத்தையும் அளித்தார். அதை பெற்றுக் கொண்ட தாசில்தார் சவுந்தரவல்லி, பெயர் மாற்றம் செய்வதற்கு, 5,000 ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.

ஏற்கனவே ஒன்றரை வருடம் தாமதமாகிவிட்ட நிலையில், இப்போது லஞ்சமும் கேட்டதால், அதிருப்தி அடைந்த ரேவதி, கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தந்துவிட்டார்.. இந்த புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார், தாசில்தார் சவுந்தரவல்லியிடம் 5,000 ரூபாயை வழங்கும்படி சொல்லி உள்ளனர்.. அதன்படியே ரேவதி வழங்கும்போது, மறைந்திருந்த, லஞ்ச ஒழிப்பு போலீசார், தாசில்தார் சவுந்தரவல்லியை கையும் களவுமாக பிடித்துவிட்டனர்.. தற்போது இந்த பெண் தாசில்தார் விசாரணையில் உள்ளார்..

செல்வ நிலை சான்றிதழ்

இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் மற்றொரு சம்பவம் கோவையில் நேற்று நடந்துள்ளது.. லியாய்சன் நிறுவனத்தின் பழனிசாமி என்பவர், செல்வநிலை சான்றிதழ் கேட்டு கோவை பேரூர் தாலுகா தாசில்தாரிடம் கடந்த ஜூன்19 ம் தேதி விண்ணப்பித்தார்.

இந்த சான்றிதழ் தொடர்பாக தாசில்தாரை சந்தித்து தகவல் பெறும்படி நிறுவனத்தின் மேலாளர் ரஞ்சித்குமாரை அவர் அறிவுறுத்தினார். எனவே, கடந்த 15ம் தேதி ரஞ்சித்குமார், பேரூர் தாசில்தார் ரமேஷ்குமாரை சந்தித்து, தன்னுடைய செல்வநிலை சான்றிதழ் குறித்து கேட்டார்..

தாசில்தார் ரமேஷ்குமார் - செல்வநிலை சான்றிதழ்

அதற்கு தாசில்தார் ரமேஷ்குமார், சான்றிதழ் வேண்டுமானால் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என்றாராம்.. பிறகு கடந்த 21, 24 ஆகிய தேதிகளில் ரஞ்சித்குமாருக்கு போனை போட்ட தாசில்தார் ரமேஷ்குமார், இன்று ( அதாவது நேற்று ஜூலை 25) லஞ்சப்பணத்தை தந்துவிட்டு, சான்றிதழை வாங்கி கொள்ளுங்கள் என்றாராம்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரஞ்சித்குமார், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தந்தார்.. இதையடுத்து, அதிகாரிகளின் அறிவுரைப்படி, ரஞ்சித்குமார், தாசில்தார் அலுவலகத்தில் ரமேஷ்குமாரை சந்தித்து, லஞ்சப்பணத்தை தர முயன்றார்..

பேண்ட் பாக்கெட்டில் பணம்

உடனே தாசில்தார், பக்கத்தில் நின்றுகொண்டிருந்த கிராம உதவியாளர் சரவணனிடம் தந்துவிடுங்கள் என்று சொல்லி உள்ளார்.. சரவணன் அந்த லஞ்சப்பணத்தை வாங்கி, பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்.. அனைத்தையும் மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், தாசில்தாரையும், சரவணனையும் சுற்றிவளைத்து விட்டனர்..

ஆன் தி ஸ்பாட்டிலேயே சரவணக்குமாரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த லஞ்சப்பணத்தை பறிமுதல் செய்ததுடன், அந்த லஞ்சத்தை வாங்க சொன்ன தாசில்தார் ரமேஷ்குமாரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.. இப்போது அனைவருமே விசாரணையின் பிடியில் சிக்கி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+