வாழ்வில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய இடம்.. திருமுல்லைவாயல் காவல் நிலையம்.. ரிவ்யூவில் 4 ஸ்டார்
Recommended Video
சென்னை: வாழ்வில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய இடம் என்றால் அது திருமுல்லைவாயல் காவல் நிலையம் என இளைஞர் ஒருவர் கொடுத்த பாராட்டுகளால் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னையைச் சேர்ந்த லோகேஷ்வரன், நள்ளிரவில் ஆவணங்கள் ஏதும் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருமுல்லைவாயல் போலீஸார் சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து காவல் நிலைய சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து சிறையிலிருந்து வெளியே வந்த லோகேஸ்வரன் கூறுகையில் வண்டியின் ஆவணங்கள் ஏதும் இல்லாமல் நள்ளிரவு பயணம் செய்தேன். இதனால் நான் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டேன். அந்த காவல் நிலையம் முக்கிய சாலையில் அமைந்துள்ளது.
மிகவும் சுத்தமாக உள்ளது. போலீஸார் மிகவும் அன்பாக நடத்துகிறார்கள். எனக்கு எந்தவித தொல்லையும் கொடுக்கவில்லை. என்னுடைய தகவல்கள் மற்றும் கைவிரல் ரேகையை பெற்று கொண்ட அவர்கள் லஞ்சம் ஏதும் பெற்றுக் கொள்ளாமல் என்னை விடுவித்தனர்.

வாழ்வில் பார்க்க வேண்டிய இடங்களில் திருமுல்லைவாயல் காவல் நிலையமும் ஒன்று என அந்த இளைஞர் ரிவ்யூவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் 4 ஸ்டார்களையும் கொடுத்துள்ளார். இவரது பதிவு வைரலாகி வருகிறது.
விசாரணையில் லோகேஷ்வரன் சென்னையில் இருக்கும் இடங்களுக்கு சென்று அதுகுறித்து கூகுள் ரிவ்யூ செய்யும் வழிகாட்டி என தெரியவந்துள்ளது. இந்த நிலையில் இதுதொடர்பாக அம்பத்தூர் காவல் நிலைய உயரதிகாரிகள் கூறுகையில் நள்ளிரவில் யாரையும் நாங்கள் கைது செய்யவில்லை. அப்படி இருக்கும் இந்த கருத்து தவறானது என தெரிவித்துள்ளார்.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications