ஒரு வாரத்தில் 60, நேற்று மட்டும் 17 பேருக்கு, எப்படி வந்தது? தெரியவில்லை.. குழப்பத்தில் தமிழகம்!
சென்னை: நேற்று எப்படி வந்தது என்றே தெரியாமல் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் 60 பேருக்கு கொரோனா இப்படி வந்துள்ளது. இதனால் கொரோனா பரவியவர்களுடன் தொடர்பு உடையவர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. கொரோனாவால் நேற்று ஒரு நாளில் மட்டும் 54 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1683 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 1லட்சத்து 13 ஆயிரத்து 398 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 65ஆயிரத்து 977 பேரின் ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று ஒரு நாளில் மட்டும் 6954 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. இதில் சென்னையில் மட்டும் 27 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஒட்டமொத்தமாக தமிழகம் முழுவதும் இதுவரை 1683 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏழு நாளில் 416பேருக்கு
இந்நிலையில் கடந்த ஏழு நாளில் மட்டும் தமிழகத்தில் 416 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் தான் 100க்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒட்டுமொத்தமாக 400பேருக்கு கொரோனா பரவி உள்ளது.

தமிழகத்தின் நிலை
இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது தமிழகத்தில் இரண்டு நிலையில் தான் இருந்தது வந்தது. அதாவது வெளிநாடு சென்று வந்தவர்கள் , அவர்களுடன் தொடர்பில் இருந்தவர் மூலம் மட்டுமே கொரோனா பரவி வந்தது. ஆனால் தற்போது யாரிடம் இருந்து கொரோனா வந்தது என்பது தெரியாத நிலைக்கு தமிழகம் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. இது சிக்கலை அதிகரித்துள்ளது.

நேற்று மட்டும் 17
ஏனெனில் இந்த வாரத்தில் மட்டும் 60 பேருக்கு எப்படி, யார் மூலம் கொரோனா வந்தது தெரியாத நிலை உள்ளது. இது ஒருபுறம் எனில் நேற்று தொற்று கண்டறியப்பட்ட 54 பேரில் 17 பேருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என தெளிவாக கூற முடியாத நிலை உள்ளது. இவர்களில் 6 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். சேலத்தைச் சேர்ந்தவர்கள் நான்கு பேர் . இரண்டு பேர் மதுரை. செங்கல்பட்டு, தருமபுரி, நாமக்கல், திருப்பூர் மற்றும் விழுப்புரம் தலா ஒருவர் ஆவர்.

நமக்கு தெரியாது
இருப்பதிலேயே மோசமான நிலை என்றால் யாரிடம் இருந்து கொரோனா பரவியது என்பது தெரியாத நிலை தான். ஏனெனில் தொடர்பு தடமறிதல் மூலம் பாதிப்பு உள்ளவர்களை கண்டுபிடிப்பது கடினம் ஆகிவிடும். ஏனெனில் நேற்று திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி சொன்னது போல், இப்படி யாரிடம் இருந்து பாதிக்கப்பட்ட நபருக்கு எத்தனை நாட்கள் முன்பு இருந்து கொரோனா பாசிட்டிவ் இருந்தது என்று நமக்கு தெரியாது.

கண்டுபிடிக்க முடியாது
அவருடைய டிராவல் ஹிஸ்ட்ரியை ஆராயந்தால் நீளமாக போய்க்கொண்டே இருக்கும். சொந்த காரர்கள், பழகியவ்ர்கள் வேலை செய்பவர்கள் என எல்லோரையும் தேடி கண்டுபிடித்து 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். அப்படி கண்டுபிடிக்கப்பட்டவர்களில் யாருக்கேனும் கொரோனா வந்திருந்தால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிக்க வேண்டும். எனவே மிக சிக்கலான நிலைக்கு கொண்டு சென்றுவிடும்,

எப்படி பாதித்தது
இந்நிலையில் கிடைக்கும் சின்ன கேப்பில் கூட வீட்டில் இருந்து வெளியே வந்த பழையபடி சுதந்திரமாக வெளியில் சுற்றுவதை மக்கள் விரும்புகிறார்கள். இது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. ஒட்டுமொத்தமாக சமுதாயத்தை பாதித்துவிடும் அபாயமும் உள்ளது. அதனால் அரசு அனைவரையும் வீட்டில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இப்போதைய சூழலில் ஒவ்வொரு குடும்பத்தினரும் தனிமைப்படுத்தி கொண்டால் மட்டும் கொரோனாவில் இருந்து தப்பி முடியும்.

மிக முக்கியமான நாட்கள்
ஊரடங்கு முடிய இன்னும் 10 நாட்கள் உள்ளது. அடுத்த 10 நாட்கள் ஊரடங்கு மிகவும் முக்கியமானது. இதில் எத்தனை பேரை கண்டுபிடித்து தனிமைப்படுத்தி கொரோனாவை குறைக்கிறோமோ அவ்வளவு வெற்றி நமக்கு கிடைக்கும். எனவே அரசு சொல்வதை கேட்டு நடக்க வேண்டும். வீட்டிலேயே இருந்து மக்கள் ஒத்துழைப்பு அவசியம் அளிக்க வேண்டும். 10 நாளில் கொரோனாவை கட்டுப்படுத்தவிட்டால் அதன் விளைவை கற்பனை செய்தும் பார்க்க முடியாது.












Click it and Unblock the Notifications