தாம்பரத்துல இருக்கீங்களா? இந்த நம்பரை உடனே குறிச்சுக்குங்க.. தாம்பரம் மாநகராட்சியின் அதிரடி.. சபாஷ்
சென்னை: தாம்பரம் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.. இதுகுறித்த வேண்டுகோள் ஒன்றையும் தாம்பரம் மக்களுக்கு மாநகராட்சி விடுத்திருக்கிறது.
தாம்பரம் மாநகராட்சியானது, தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம் நகராட்சிகள், சிட்லபாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, திருநீர்மலை ஆகிய பேரூராட்சிகள் இணைக்கப்பட்டு, கடந்த 2021ம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்டது.

70 வார்டுகள்: கிட்டத்தட்ட 87.64 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தாம்பரம் மாநகராட்சியில், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.. இங்கு மொத்தம் 70 வார்டுகள் உள்ளன.. இவை 5 மண்டலங்களாக செயல்பட்டு வருகின்றன.
சாலை வசதிகளை போலவே, குடிநீர் வசதியிலும் பெருத்த கவனத்தை தாம்பரம் மாநகராட்சி செலுத்தி வருகிறது.. அதேபோல, குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்கவும், கூடுதலாக மெட்ரோ குடிநீர் கிடைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தாம்பரம்: அந்தவகையில், தற்போது, தாம்பரம் மாநகராட்சியின் தலைமை நீரேற்று நிலையத்தில் புனரமைப்பு பணிகள் முடிந்ததை தொடர்ந்து, ஜூன் 2 வரை சென்னை, தாம்பரம் மாநகராட்சிகளில் ஒரு நாள் விட்டு ஒருநாள் தான் குடிநீர் வழங்கப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், "தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதற்கு முன்னதாக நெம்மேலியில் அமைந்துள்ள நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் கடல்சார் பணிகள் மற்றும் நிலைய பாராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
குடிநீர்: இதனால், 24.05.2024 முதல் 02.06.2024 வரை (10 நாட்களுக்கு மட்டும்) மண்டலம்-9 (பகுதி), மண்டலம்-13(பகுதி), மண்டலம்-14 மற்றும் 15-க்குட்பட்ட பகுதிகள் மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கப்படும் என்று குடிநீர் வாரியம் தகவல் அளித்துள்ளது.
9 - தேனாம்பேட்டை (பகுதி) : மந்தைவெளி, மைலாப்பூர், இராஜா அண்ணாமலைபுரம், நந்தனம், திருவல்லிக்கேணி, இராயப்பேட்டை
13 -அடையாறு (பகுதி) : மந்தைவெளி, பெசன்ட் நகர், மடிவின்கரை, பேபி நகர், தந்தை பெரியார் நகர், கருணாநிதி நகர்,கலாஷேத்ரா காலனி, வேளச்சேரி, பள்ளிப்பட்டு, திருவள்ளுவர் நகர், AGS காலனி
14 பெருங்குடி : கொட்டிவாக்கம், பெருங்குடி, பாலவாக்கம்,காவேரி நகர், திருமலை நகர், பள்ளிகரணை, மடிப்பாக்கம், உள்ளகரம்-புழுதிவாக்கம், காமாட்சி காலனி, ஜல்லடியம்பேட்டை
15 - சோழிங்கநல்லூர்: நீலாங்கரை, சரஸ்வதி நகர், ஒக்கியம் துரைப்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், எழில் நகர், கண்ணகி நகர், உத்தண்டி, பனையூர், காரப்பாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி
தாம்பரம் மாநகராட்சி
எனவே, பொதுமக்கள் மேற்கூறிய குடிநீர் விநியோக முறையை கவனத்தில் கொண்டு தேவையான குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் கூடுதல் தகவல்களுக்கு கீழ்க்கண்ட கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
பகுதிகள்
9- தேனாம்பேட்டை (பகுதி) 81449-30909
13 அடையாறு (பகுதி) 81449-30 913
14 பெருங்குடி 81449-30 914
15 - சோழிங்கநல்லூர் 81449-30 915
தாம்பரம் மாநகராட்சி பகுதிப் பொறியாளர் தலைமைப் பொறியாளர் 94429-76905 செயற்பொறியாளர் 82488-88577
அவசர தேவை: அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் (Dial for Water) குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications