சென்னை டூ நாகர்கோவில் போறது ரொம்ப ஈஸி.. தெற்கு ரயில்வே அறிவித்த சிறப்பு ரயில்கள்.. பாருங்க!
சென்னை: சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி நாகர்கோவில் பகுதிக்கு எத்தனை சிறப்பு ரயில்கள் இயக்கினாலும் போதாது. அந்த அளவிற்கு மக்கள் சென்னையில் வசிக்கிறார்கள். இந்நிலையில் சென்னை--விடுமுறை நாட்களில் கூட்ட நெரிசலை குறைக்க சென்னை தாம்பரத்தில் இருந்து, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் - நாகர்கோவில் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் (ரயில் எண் 06041) , செப்டம்பர் 15, 22, 29, அக்டோபர், 6, 13, 20, 27 ஆகிய வெள்ளிக்கிழமைகளில், தாம்பரத்தில் இருந்து இரவு 7:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:10 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் - தாம்பரம் ரயில் (ரயில் எண்: 06042 ) நாகர்கோவிலில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு, தாம்பரத்திற்கு அதிகாலை 4.10 மணிக்கு சென்று சேரும். இந்த ரயில் செப்டம்பர் மாதம் 16, 23, 30 அக்டோபர் 7, 14, 21 மற்றும் 28 தேதிகளில் இயக்கப்பட உள்ளது.
இது தவிர நாகர்கோவில் - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் (எண் 06012) நாகர்கோவிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 4.35 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரயில் செப். 17, 24 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளது.
மறுமார்க்கமாக தாம்பரம் - நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் (எண் 06011) தாம்பரத்திலிருந்து திங்கள்கிழமை காலை 8.15 மணிக்குப் புறப்பட்டு இரவு 8.55 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் செப்டம்பர் 18, 25 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளது.
இந்த வாராந்திர சிறப்பு ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்துார், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர் வழியாக நாகர்கோவில் சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்குவது போல், மதுரை, நெல்லைக்கும், கோவைக்கும் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் தீபாவளி பண்டிகையை இயக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னையில் இப்போதைய நிலையில் தீபாவளிக்கு ஊருக்கு செல்வது கடினம் என்ற நிலை உள்ளது.எனவே மக்கள் நலன் கருதி சிறப்பு ரயில்களையும், முக்கிய ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications