கலக்குறாங்களே கனிமொழி சோமு.. டெல்லியில் கேட்ட கேள்வி.. தாம்பரத்துக்கு உடனே வந்து சேர்ந்த குட் நியூஸ்
சென்னை: தாம்பரத்தில், 100 கோடி ரூபாய் செலவில் புதிய ரயில் முனையம் அமைக்கும் பணி தீவிரமாகி வரும்நிலையில், இன்னொரு மகிழ்ச்சி அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் முனையங்களில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதால்தான், தென் சென்னையில் குறிப்பாக தாம்பரம் மூன்றாவது ரயில் முனையமாக அறிவிக்கப்பட்டது.

ரயில் முனையம்: தாம்பரத்தில் 100 கோடி ரூபாய் செலவில் புதிய ரயில் முனையம் அமைய இருப்பதாக கந்த 2018-ல் தெற்கு ரயில்வே தெரிவித்திருந்தது.. புதிதாக 6 பிளாட்பார்ம்கள் கொண்ட டெர்மினல் கட்டிடம் கட்டப்பட உள்ளதாகவும், அதிலேயே பார்க்கிங் வசதி, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் போன்றவை கட்டப்பட இருப்பதாகவும் சொல்லப்பட்டது.
தாம்பரம் ரயில் முனையத்தை படிப்படியாக விரிவாக்கம் செய்யும் பணிகள் தற்போது ஆரம்பமாகி உள்ள நிலையில், அனைத்து நடைமேடைகள் விரிவாக்கமும், பணிமனைகளும் கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தப்படுகின்றன.. தேவைப்படும் இடங்களில் "எஸ்கலேட்டர்" அமைக்கப்படுகின்றன. இதைத்தவிர, மின் தூக்கி வசதி, சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது போன்ற பணிகளும் நடந்து வருகின்றனவாம்..
நடைமேடைகள்: இதுகுறித்து தென்னக ரயில்வே அதிகாரகள் சொல்லும்போது, "7 மற்றும் 8ம் நடைமேடைகளை அகலப்படுத்தவும், 5 மற்றும் 6ம் நடைமேடைகளின் நீளத்தை விரிவாக்கம் செய்யவும் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. ...
மொத்தம் 100 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன. ஒட்டுமொத்த பணிகளும் அடுத்த வருடம் இறுதிக்குள் முடித்து, கூடுதல் விரைவு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த பணிகள் முடிந்ததுமே, 50 சதவீதம் ரயில்களை அதிகரித்து இயக்க முடியும். குறிப்பாக, தமிழகத்தில் மதுரை, திருநெல்வேலி, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு, வரும் ஆண்டுகளில் கூடுதல் ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளோம்" என்று நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தாம்பரம் ரயில் நிலையம் மேம்பாடு குறித்து அடுத்த குட்நியூஸ் வந்துள்ளது.. சென்னையில் இருந்து தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளுக்குப் பயணம் செய்யும் பயணிகளுக்கு, முக்கிய ரயில் நிலையமாக விளங்கும் தாம்பரம் ரயில் நிலையத்தில் அடிப்படைகட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா? என்று மாநிலங்களவையில் திமுக எம்பி கனிமொழி சோமு கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார்.
உள்கட்டமைப்பு: இதற்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நீண்ட பதிலை தந்து, தமிழகத்தையும் குளிர வைத்துள்ளார்.. அமைச்சர் பதிலளிக்கும்போது, "தாம்பரம் ரயில் முனையத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 2 கட்டங்களாக திட்டமிடப்பட்டு, ரூ.49 கோடி மதிப்பிலான முதற்கட்டப் பணிகள் முடிவடைந்துவிட்டன. 2-ம் கட்டப் பணிகளுக்கு மேலும் ரூ.106 கோடி தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டு, போதுமான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
ரயில்வே திட்டங்களை பொறுத்த வரை, பொருட்கள் இடம்மாறுதல், விரிவாக்க பணிகளுக்குத் தேவையான இடம், அவற்றை கையகப்படுத்தும்போது எழும்சட்ட சிக்கல்கள், ஒரு வருடத்தில், எத்தனை மாதங்கள் இடர்பாடின்றி வேலை செய்ய முடிகிறது? என்பன போன்ற பல்வேறு காரணிகளை வைத்தே ஒவ்வொரு திட்டமும் எவ்வளவு விரைவாக முடிக்கப்படுகிறது என்பது நிர்ணயிக்கப்படுகிறது.. அந்தவகையில், தாம்பரம் ரயில் நிலைய கட்டமைப்பு மேம்பாட்டுப் பணியை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
பயங்கர குஷி: தினமும் 3 லட்சம் பயணிகள் தாம்பரம் ஸ்டேஷனுக்கு வந்துபோகும் நிலையில், மத்திய அரசு அறிவித்துள்ள இந்த தகவல், மிகுந்த பூரிப்பையும் மகிழ்ச்சியையும் சென்னைவாசிகளுக்கு ஏற்படுத்தி வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications